அலெக்கைனின் துப்பாக்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அலெக்கைன் எதிர். நிம்சோவிச் 1930
abcdefgh
8
b8 black rook
f8 black king
a7 black pawn
c7 black rook
d7 black queen
e7 black knight
g7 black pawn
a6 white pawn
b6 black pawn
c6 black knight
e6 black pawn
h6 black pawn
b5 white bishop
d5 black pawn
e5 white pawn
f5 black pawn
b4 white pawn
d4 white pawn
f4 white pawn
c3 white rook
f3 white knight
c2 white rook
g2 white pawn
h2 white pawn
c1 white queen
g1 white king
8
77
66
55
44
33
22
11
abcdefgh
26.Qc1 பின்னரான நிலை

அலெக்கைனின் துப்பாக்கி அல்லது அலெக்கைனின் துமுக்கி (Alekhine's gun) என்பது சதுரங்கத்தில் உள்ள ஒரு வடிவமாகும். இதை முன்னாள் உலக சதுரங்க வாகையாளரான அலெக்சான்டர் அலெக்கைன் அறிமுகப்படுத்தினார். அவரது பெயராலேயே இன்றும் அழைக்கப்படுகிறது. இதன் வடிவத்துக்கு அவர் ஆரோன் நிம்சோவிச்சுக்கு எதிராக சான் ரெமோவில் 1930ல் விளையாடி வெற்றிபெற்ற ஆட்டத்தின் பின்னர் இப்பெயர் சூட்டப்பட்டது.

அலெக்கைனின் துப்பாக்கியில், இரண்டு கோட்டைகள் ஒன்றன் பின் ஒன்றாகவும் அதன் அடியில் இராணியும் செங்குத்தாக அடுக்கப்படும். இது எதிராளிக்கு மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்துவதுடன் சில வேளைகளில் இறுதி முற்றுகைக்கும் இட்டுச்செல்லும். சில அரிதான சந்தர்ப்பங்களில் ஒரு கோட்டையின் பின் இரண்டு இராணிகள் அடுக்கப்படுகிறது.[1]

அசல் "அலெக்கைனின் துப்பாக்கி" ஆட்டம்[தொகு]

அலெக்கைனின் துப்பாக்கி உருவாவதற்கு வித்திட்ட ஆட்டம் கீழே தரப்பட்டுள்ளது.

அலெக்சான்டர் அலக்கைன் எதிர். ஆரோன் நிம்சோவிச்:[2]

1. e4 e6 2. d4 d5 3. Nc3 Bb4 4. e5 c5 5. Bd2 Ne7 6. Nb5 Bxd2+ 7. Qxd2 0–0 8. c3 b6 9. f4 Ba6 10. Nf3 Qd7 11. a4 Nbc6 12. b4 cxb4 13. cxb4 Bb7 14. Nd6 f5 15. a5 Nc8 16. Nxb7 Qxb7 17. a6 Qf7 18. Bb5 N8e7 19. 0–0 h6 20. Rfc1 Rfc8 21. Rc2 Qe8? 22. Rac1 Rab8 23. Qe3 Rc7 24. Rc3 Qd7 25. R1c2 Kf8 26. Qc1 (படத்தைப் பார்க்க. இந்தச் சந்தர்ப்பத்திலேயே அலக்கைன் துப்பாக்கியை உருவாக்குகிறார்.) 26. … Rbc8 27. Ba4 (28. b5 ஐ அச்சுறுத்துகிறது, கருப்பு குதிரையை வெற்றிகொள்ள) 27. … b5 28. Bxb5 Ke8 29. Ba4 Kd8 (c7 ஐப் பாதுகாக்கிறது) 30. h4! (தற்போது அனைத்துக் கருப்பின் காய்களும் துப்பாக்கிக்கு எதிராக விளையாடும் நிலைக்கு வந்துவிட்டன.) 30. … h5 31. Kh2 g6 32. g3 (சுக்சுவாங்) 1-0

ஆறு வருடங்களுக்குப் பின், 1936 இல், வில்லியம் விண்டர் என்பவர் நொட்டிங்காம் எனும் இடத்தில் அலக்கைனால் தோற்கடிக்கப்பட்டார். இந்த ஆட்டத்திலும் அலக்கைன், அலக்கைனின் துப்பாக்கியைப் பயன்படுத்தி வெற்றிபெற்றார்.[3] இதன் பின் சதுரங்க வீரர்கள் இதைப் பயன்படுத்துவது மற்றும் தற்காத்து விளையாடுவது பற்றிக் கற்றுக்கொண்டனர். எப்படியாயினும் சில சர்வதேச ஆட்டங்கள் இந்த வியூகத்தைப் பயன்படுத்தி வெற்றிகொள்ளப்படுகின்றன.

மேற்கோள்கள்[தொகு]

  1. Chess Life, December 2008, p. 25; April 2009, p. 6
  2. "அலெக்சான்டர் அலக்கைன் எதிர். ஆரோன் நிம்சோவிச், 1930". chessgames.com.
  3. ."William Winter vs Alexander Alekhine, 1936". chessgames.com.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அலெக்கைனின்_துப்பாக்கி&oldid=2745029" இலிருந்து மீள்விக்கப்பட்டது