தென் இந்திய ரயில்வே கம்பெனி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தென் இந்திய ரயில்வே கம்பெனி என்பது 1874ஆம் ஆண்டு முதல் 1951ஆம் ஆண்டு வரை தென் இந்தியாவில் செயல்பட்ட ரயில்வே நிறுவனமாகும்.

வரலாறு[தொகு]

கிரேட் சௌதெர்ன் ரயில்வே கம்பெனி என்ற நிறுவனம் 1853ஆம் ஆண்டு இங்கிலாந்தில் தொடங்கப்பட்டது. கர்நாடக ரயில்வே கம்பெனி 1869ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 1874 ஆம் ஆண்டு இவ்விரு நிறுவனங்களும் இணைக்கப்பட்டு தென் இந்திய ரயில்வே கம்பெனி உருவாக்கப்பட்டது. இந்த புதிய நிறுவனம் 1890ஆம் ஆண்டு லண்டனில் பதிவு செய்யப்பட்டது. இதன் தலைமையிடம் திருச்சிராப்பள்ளி ஆகும். 1891 ஆம் ஆண்டு பாண்டிச்சேரி ரயில்வே கம்பெனியும் இதனுடன் இணைத்துக்கொள்ளப்பட்டது. இதன் தலைமையிடம் மதுரைக்கும், பின்னர் சென்னை சென்ட்ரலுக்கும் மாற்றப்பட்டது.

தென் இந்திய ரயில்வே கம்பெனி 1944 ஆம் ஆண்டு நாட்டுடமை ஆக்கப்பட்டது. ஏப்ரல் 1, 1951ஆம் ஆண்டு மெட்ராஸ் மற்றும் தெற்கு மராட்டா ரயில்வே, மைசூர் ரயில்வே கம்பெனி மற்றும் தென் இந்திய ரயில்வே கம்பெனி ஆகியவை இணைக்கப்பட்டு தென் இந்திய ரயில்வே மண்டலம் (தென்னக இரயில்வே) உருவாக்கப்பட்டது.

சான்றுகள்[தொகு]