உபர் (நிறுவனம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உபர், நிறுவனம்.
வகைதனியார்த்துறை நிறுவனம்
நிறுவுகைமார்ச்சு 2009
நிறுவனர்(கள்)திராவிசு கலானிக், காரெத் கேம்ப்
தலைமையகம்சான் பிரான்சிஸ்கோ, கலிபோர்னியா, அமெரிக்க ஐக்கிய நாடு
சேவை வழங்கும் பகுதிஉலகளாவிய
முதன்மை நபர்கள்திராவிசு கலானிக் (சிஈஓ)
தொழில்துறைபோக்குவரத்து
சேவைகள்வாடகையுந்து, கட்டணத்திற்கான வண்டிகள், நிகழ்நேர தானுந்துப் பகிர்வு

உபர் (Uber) ஐக்கிய அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவைத் தலைமையிடமாகக் கொண்டு பல நாடுகளிலும் நகரங்களிலும் தானுந்துப் பகிர்வு மற்றும் வாடகையுந்துச் சேவைகளை வழங்கும் பன்னாட்டு நிறுவனமாகும். இந்த நிறுவனம் நுண்ணறிபேசி பயன்பாட்டுச் செயலி மூலம் சவாரிக் கோரிக்கைகளை ஏற்று அதனைத் தங்கள் ஓட்டுநர்களுக்கு அனுப்புகின்றது.[1][2] பயனாளர்கள் சவாரிக் கோரிக்கைகளை அனுப்பவும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வண்டியின் அமைவிடத்தை சுவடு தொடரவும் இச்செயலியைப் பயன்படுத்துகின்றனர்.[3] ஆகத்து 29, 2014 நிலவரப்படி உலகெங்கும் 45 நாடுகளில் 200க்கும் மேற்பட்ட நகரங்களில் இந்நிறுவனம் சேவை வழங்குகின்றது.[4]

துவக்கத்தில், உபர் உயர்பகட்டு தானுந்துகளை மட்டுமே வாடகைக்கு வழங்கியது; உபர்பிளாக் என்ற பெயரில் முதன்மைச் சேவையை வழங்கியது. [3] 2012இல் இந்த நிறுவனம் "உபர்X" என்ற திட்டத்தை விரிவாக்கியது; இதில் ஏற்றுக்கொள்ளத்தக்க வண்டியும் தகுதி பெற்ற ஓட்டுநரும் பங்கேற்க இயலும். சட்டவொழுங்கு இல்லாத காரணத்தால், உபர் நிறுவனத்தால் மிகக் குறைந்த கட்டணத்தில் சேவையளிக்க முடிந்தது. இதனால் வழமையான வாடகையுந்துச் சேவைகளை விட விரைவாக பரந்த சந்தையைப் பிடித்தது.[5]

வழமையான வாடகையுந்து ஓட்டுநர்களும் வாடகையுந்து நிறுவனங்களும் தானுந்துப் பகிர்வு நிறுவனங்கள் சட்டப்புறம்பானவை என்றும் நியாயமற்ற வணிக முறைகளை பின்பற்றுகின்றன என்றும் பயணியர் பாதுகாப்பை கவனிப்பதில்லை என்றும் எதிர்த்து வருகின்றனர். திசம்பர் 2014 நிலவரப்படி, செருமனி, இந்தியா, தாய்லாந்து, எசுப்பானியா, பிரான்சு, இங்கிலாந்து போன்ற நாடுகளில் பயணிகளின் பாதுகாப்பு குறித்த நிகழ்வுகள் நிகழ்ந்துள்ளன.[6][7] உபர் சேவைகள் இந்தியாவின் இரு நகரங்களிலும் எசுப்பானியாவிலும் தடை செய்யப்பட்டுள்ளது; [8] ஐக்கிய அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட மேலும் பல நாட்டு அரசுகளுடன் பிரச்சினைகளை தீர்க்க உரையாடி வருகின்றது.

இந்தியா[தொகு]

புதுதில்லி தடைவிதிப்பு[தொகு]

திசம்பர் 2014இல் இந்தியத் தலைநகர் புது தில்லியில் உபர் சேவையை பாவித்த பெண் பயணி ஒருவரை வண்டி ஓட்டுநர் வன்புணர்ந்ததாக எழுந்த குற்றச்சாட்டினை அடுத்து[9] கட்டாயமாக்கப்பட்டுள்ள நகரத்தின் காவல்துறை சரிபார்ப்பு செய்முறையை பின்பற்றவில்லை என உபர்சேவைகள் தடை செய்யப்பட்டன. [10] வண்டி ஓட்டுநர் 2011இலேயே பாலியல் குற்றம் சாட்டப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார்.[9] வன்புணர்ச்சி நிகழ்வின் இரண்டு நாட்களுக்குள்ளேயே உபர் ஐக்கிய அமெரிக்காவில் அந்நிறுவனம் பின்பற்றுவதைப் போலவே தன் ஓட்டுநர்களின் ஏழாண்டு நடத்தையை சரிபார்க்க வேண்டும் என்ற மனுவில் ஏறத்தாழ 7,000 மக்கள் கையொப்பமிட்டனர்.[11] தில்லியின் போக்குவரத்துத் துறை நகரத்தில் எவ்வித போக்குவரத்து சேவையும் அளிப்பதற்கு அனுமதி மறுத்தது.[12] தற்போது தங்கள் வணிக போக்குவரத்து உரிமத் திட்டங்களில் இல்லாத பின்ணனி சரிபார்ப்பு முறைமையை நிறுவிட இந்திய அரசுடன் ஒத்துழைக்கும் என்று உபர் அறிக்கை வெளியிட்டது.[13]

ஐதராபாத் தடைவிதிப்பு[தொகு]

இணையவழி வாடகையுந்துச் சேவைகளை தடை செய்யுமாறு இந்திய உள்துறை அமைச்சகம் பரிந்துரைத்த அடுத்த நாளே ஐதராபாத்தின் சாலைப் போக்குவரத்து ஆணையம் உபர் சேவைகளை முடக்கியது. உபர் நகரத்தில் இயங்க உரிமம் பெறவில்லை என்றும் நகர மக்கள் உபரின் சேவைகளை பயன்படுத்த வேண்டாம் என்றும் ஆணையத்தின் தகவல் அதிகாரி கூறினார்[14]

மேற்சான்றுகள்[தொகு]

  1. Rusli, Evelyn (June 6, 2014). "Uber Dispatches trips". Wall Street Journal. http://ottawacitizen.com/news/local-news/uber-ride-sharing-program-seeks-ottawa-drivers. பார்த்த நாள்: November 7, 2014. 
  2. Goode, Lauren (June 17, 2011). "Worth It? An App to Get a Cab". The Wall Street Journal. Dow Jones & Company. http://blogs.wsj.com/digits/2011/06/17/worth-it-an-app-to-get-a-cab/. 
  3. 3.0 3.1 Rao, Leena (September 22, 2011). "Uber Brings Its Disruptive Car Service to Chicago". TechCrunch. AOL.
  4. Hoge, Patrick (August 29, 2014). "Uber doubles reach to 200 cities in four months". San Francisco Business Times. http://www.bizjournals.com/sanfrancisco/blog/techflash/2014/08/uber-doubles-reach-200-cities.html. பார்த்த நாள்: November 7, 2014. 
  5. "In Another Strike Against the Competition, Uber Lowers UberX Prices in San Diego, L.A., and D.C.". Techcrunch. October 3, 2013. http://techcrunch.com/2013/10/03/in-another-strike-against-the-competition-uber-lowers-uberx-prices-in-san-diego-la-and-dc/. பார்த்த நாள்: October 11, 2013. 
  6. Kevin Rawlinson (2 September 2014). "Uber banned in Germany by Frankfurt court". BBC News. http://www.bbc.com/news/technology-29027803. பார்த்த நாள்: 4 September 2014. 
  7. "Popular Taxi App Uber Disallowed by Frankfurt Court in Germany". Germany News.Net. 2 September 2014. http://www.germanynews.net/index.php/sid/225325021. பார்த்த நாள்: 4 September 2014. 
  8. "உபர் வாகன சேவைக்கு தடையும், சமூக ஊடகக் கிண்டல்களும்". பிபிசி. 9 திசம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 11 திசம்பர் 2014.
  9. 9.0 9.1 Karn Pratap Singh and Avantika Mehta (2014). "Delhi rape: Uber banned in Capital; accused driver sent to police custody till Dec 11 - Hindustan Times". hindustantimes.com. Archived from the original on 8 டிசம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 8 December 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help); Unknown parameter |= ignored (help)
  10. "Uber Banned in Delhi, CEO Tries to Dodge Blame: 10 Developments". NDTV.com. December 8, 2014. http://www.ndtv.com/article/cheat-sheet/uber-banned-in-delhi-ceo-tries-to-dodge-blame-10-developments-631534. பார்த்த நாள்: December 8, 2014. 
  11. Hannah Jane Parkinson (8 December 2014). "Uber rape scandal: thousands demand driver background checks in India". The Guardian. http://www.theguardian.com/technology/2014/dec/08/uber-rape-claim-india-7000-people-sign-petition. பார்த்த நாள்: 9 December 2014. 
  12. Sonal Mehrotra (8 December 2014). "Uber Banned in Delhi, CEO Travis Kalanick Suggests Authorities Partly to Blame: 10 Developments". NDTV. NDTV Convergence Limited. பார்க்கப்பட்ட நாள் 9 December 2014.
  13. மாத்தூர், சதீஷ். "தில்லி அரசு ஊபரை தடை செய்தது". www.economictimes.indiatimes.com. தி எகனாமிக் டைம்ஸ். Archived from the original on 17 டிசம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 24 பிப்ரவரி 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  14. "Hyderabad bans Uber cab services after Delhi rape incident". The Times of India. 10 December 2014. http://timesofindia.indiatimes.com/city/hyderabad/Hyderabad-bans-Uber-cab-services-after-Delhi-rape-incident/articleshow/45448527.cms. பார்த்த நாள்: 11 December 2014. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=உபர்_(நிறுவனம்)&oldid=3664758" இலிருந்து மீள்விக்கப்பட்டது