ஞானக்கூத்தன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஞானக்கூத்தன்
பிறப்புஆர். ரங்கனாதன்
(1938-10-07)7 அக்டோபர் 1938
மயிலாடுதுறை, தமிழ்நாடு, இந்தியா
இறப்பு27 சூலை 2016(2016-07-27) (அகவை 77)
புனைபெயர்ஞானக்கூத்தன்
தொழில்கவிஞர்
தேசியம்இந்தியா
காலம்1957–2016
குறிப்பிடத்தக்க படைப்புகள்அன்று வேறு கிழமை
சூரியனுக்கு பின்பக்கம்
கடற்கரையில் சில மரங்கள்
மீண்டும் அவர்கள்
பென்சில் படங்கள்
இணையதளம்
www.gnanakoothan.com

ஞானக்கூத்தன் (Gnanakoothan) (அக்டோபர் 7, 1938 - சூலை 27, 2016) ஒரு இந்திய தமிழ்க் கவிஞர் ஆவார். இவரது இயற்பெயர் அரங்கநாதன். இவர் பிறந்த ஊர் மயிலாடுதுறை அருகே உள்ள திருஇந்தளூர் ஆகும். இவரது தாய்மொழி கன்னடம்.[1] “திருமந்திரம்” நூல் ஏற்படுத்திய தாக்கத்தால் தனது புனைப்பெயராக ஞானக்கூத்தன் என்ற பெயரை ஏற்றார். "அன்று வேறு கிழமை", "சூரியனுக்குப் பின்பக்கம்", "கடற்கறையில் சில மரங்கள்", "மீண்டும் அவர்கள்" மற்றும் "பென்சில் படங்கள்" போன்ற நூல்களை எழுதியுள்ளார். இவர் நவீன தமிழ் இலக்கியத்தின் கவிஞராக போற்றப்படுகிறார். இவரின் கவிதைகள், "கல்கி", "காலச்சுவடு" மற்றும் "உயிர்மெய்" போன்ற இதழ்களில் வெளிவந்துள்ளன.

இராமகிருஷ்ணன், சா. கந்தசாமி, ந. கிருஷ்ணமூர்த்தி ஆகியோரோடு இணைந்து ஞானக்கூத்தன் துவங்கிய இதழ் 'கசடதபற'. 'கவனம்' என்ற சிற்றிதழைத் தொடங்கினார். '' இதழின் ஆசிரியர்களில் ஆத்மநாம், மற்றும் ராஜகோபாலனுடன் இவரும் ஒரு ஆசிரியராக இருந்தார். இவர் 'மையம்', 'விருட்சம்' (தற்போது நவீன விருட்சம்), மற்றும் 'கணையாழி' பத்திரிகைகளில் பங்களித்திருக்கிறார். க. நா. சுப்பிரமணியத்தின் 'இலக்கிய வட்டம்', சி. மணியின் 'நடை' போன்ற சிற்றிதழ்களில் இவரது கவிதைகள் வெளியாகியுள்ளது. இவரது கவிதைகள் பெரும்பாலும் சமூகத்தை சித்தரிப்பதாக உள்ளது.[2][3][4]

தொழில்[தொகு]

இவர் அரசு பணிக்காக தேர்வெழுதி சென்னையில் அரசு பணியில் இணைந்து பணியாற்றினார்.[1] 1968இல் இருந்து கவிதைகள் எழுத ஆரம்பித்தார். இவர் 'பிரச்சினை' என்கிற கவிதையின் மூலம் அறிமுகமானார். 1998இல் இவரது கவிதைகள் "ஞானக்கூத்தன் கவிதைகள்" என்கிற பெயரில் வெளியிடப்பட்டது.[5]

திரைப்பட பங்களிப்பு[தொகு]

மருதநாயகம் (திரைப்படம்) திரைக்கதையை, புவியரசு, சுஜாதா(எழுத்தாளர்) ஆகியோருடன் இணைந்து எழுதியுள்ளார்.

இயற்றிய நூல்கள்[தொகு]

  • கவிதை நூல்கள்:
  • அன்று வேறு கிழமை
  • சூரியனுக்குப் பின்பக்கம்
  • கடற்கரையில் சில மரங்கள்
  • மீண்டும் அவர்கள்
  • பென்சில் படங்கள்
  • ஞானக்கூத்தன் கவிதைகள்
  • என் உளம் நிற்றி நீ
  • இம்பர் உலகம்

கட்டுரை நூல்கள்[தொகு]

  • கவிதைக்காக
  • கவிதைகளுடன் ஒரு சம்வாதம்

பிற நூல்கள்[தொகு]

  • ஞானக்கூத்தன் நேர்காணல்கள்

பிற படைப்புகள்[தொகு]

  • கனவு பல காட்டல்
  • நம்மை அது தப்பாதோ?
  • சொன்னதை கேட்ட ஜன்னல் கதவு
  • அலைகள் இழுத்த பூமாலை

விருதுகள்[தொகு]

2010இல் கவிதைக்காக சாரல் விருதினைப் பெற்றார்.[6] விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் வழங்கும், இலக்கிய பங்களிப்பிற்கான விஷ்ணுபுரம் விருதினை (2014)இல் பெற்றார்.[7]

மறைவு[தொகு]

கவிஞர் ஞானக்கூத்தன் 2016 சூலை 27 புதன்கிழமை தனது 77வது அகவையில் சென்னையில் காலமானார்.[8]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "இழப்பின் இருப்பு சா கந்தசாமி". தினமணி. https://www.dinamani.com/weekly-supplements/dinamani-kathir/2016/sep/04/%E0%AE%87%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81--%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-2559548.html. பார்த்த நாள்: 8 December 2021. 
  2. "Five decades of Tamil Poetry by Rajaram Brammarajan". museindia.com. Archived from the original on 4 ஜனவரி 2014. பார்க்கப்பட்ட நாள் 5 July 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "Indian Poets Writing in Tamil". oocities.org. பார்க்கப்பட்ட நாள் 5 July 2013.
  4. "A slice of the sixties brought to life by T. Ramakrishnan". thehindu.com. பார்க்கப்பட்ட நாள் 5 July 2013.
  5. LIS India Tamil Literature பரணிடப்பட்டது 2014-02-04 at the வந்தவழி இயந்திரம் Official website.
  6. SARAL award list பரணிடப்பட்டது 2018-10-24 at the வந்தவழி இயந்திரம் Retrieved 5 July 2013.
  7. "Vishnupuram Award 2014 event video". Youtube.com. Vishnupuram Ilakkiya Vattam. பார்க்கப்பட்ட நாள் 9 June 2016.
  8. "தமிழின் மூத்த கவிஞர் ஞானக்கூத்தன் காலமானார்". தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 28 July 2016.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஞானக்கூத்தன்&oldid=3930496" இலிருந்து மீள்விக்கப்பட்டது