ஸ்ரீபாத் யசோ நாயக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஸ்ரீபாத் யசோ நாயக்
Shripad Yesso Naik
இணை அமைச்சர், துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சகம்
பதவியில்
சூலை 2021 – 7 சூலை 2021
முன்னையவர்அலுவலகம் நிறுவப்பட்டது
இணை அமைச்சர், ஆயுஷ் அமைச்சகம்
பதவியில்
9 நவம்பர் 2014 – 7 சூலை 2021
பிரதமர்நரேந்திர மோதி
முன்னையவர்சுபாஷ் ராம்ராவ்
இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு) சுற்றுலா அமைச்சகம்[1]
பதவியில்
26 மே 2014 – 9 நவம்பர் 2014
பிரதமர்நரேந்திர மோதி
முன்னையவர்சிரஞ்சீவி
பின்னவர்மகேஷ் சர்மா
13வது,14வது,15வது,16வது மற்றும்17வது நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்
தொகுதிவடக்கு கோவா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1952-10-04)4 அக்டோபர் 1952
அத்பை, வடக்கு கோவா மாவட்டம், கோவா, போர்த்துகேய இந்தியா
(தற்போது இந்தியா)
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
வாழிடம்பழைய கோவா
தொழில்அரசியல்வாதி

ஸ்ரீபாத் யசோ நாயக் (Shripad Yesso Naik, பிறப்பு: 04 அக்டோபர் 1952) கோவாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர். இவர் தற்போது துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சகங்களின் இணை அமைச்சராக உள்ளார்.[2]

இளமைக் காலம்[தொகு]

இவர் 1952 ஆம் ஆண்டின் அக்டோபர் நான்காம் நாளில் பிறந்தார். இவர் வடக்கு கோவா மாவட்டத்தில் உள்ள அத்பை என்ற ஊரில் பிறந்தார். இவர் மும்பை பல்கலைக்கழகம், கோவா பல்கலைக்கழகம் ஆகியவற்றில் படித்தார்.

அரசியல் வாழ்க்கை[தொகு]

1999 இல், கோவாவின் பனாஜி தொகுதியில் இருந்து, 13வது மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 1999 முதல் 2004 வரை இத்தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் இத்தொகுதி மறுசீரமைக்கு பின் வடக்கு கோவா தொகுதி என மாற்றம் செய்த பின்பு 2009 முதல் தற்போது வரை இத்தொகுதியின் மக்களவை உறுப்பினராகப் பணியாற்றுகிறார்.

இவர் 2014 ஆம் ஆண்டில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலின்போது, வடக்கு கோவா மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்றார்.[3]

மேலும் பிரதமர் நரேந்திர மோடியின் அமைச்சரவையில், மே 26, 2014 முதல் நவம்பர் 09, 2014 வரை பண்பாட்டுத் துறை மற்றும் சுற்றுலாத் துறை இணை அமைச்சராகப் (தனிப் பொறுப்பு) பதவி வகித்தார். பின்னர் நவம்பர் 09, 2014 முதல் தற்போது வரை யோகா மற்றும் ஆயுர்வேதம், யுனானி, இயற்கை, சித்த, ஹோமியோபதி மருத்துவத் துறை (AYUSH); இணை அமைச்சராகப் (தனி பொறுப்பு) பதவி வகிக்கின்றார்.

பின்னர் 2019 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், வடக்கு கோவா தொகுதியில் போட்டியிட்டு வென்றார். இவர் தற்போது முன்னர் வகித்த யோகா மற்றும் ஆயுர்வேதம், யுனானி, இயற்கை, சித்த, ஹோமியோபதி மருத்துவத் துறையுடன், பாதுகாப்புத் துறை இணை அமைச்சராப் பொறுப்பு வகிக்கின்றார்.

பதவிகள்[தொகு]

இவர் கீழ்க்காணும் பதவிகளை ஏற்றுள்ளார்.[3]

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்ரீபாத்_யசோ_நாயக்&oldid=3721993" இலிருந்து மீள்விக்கப்பட்டது