பி. வி. ஆச்சார்யா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பி. வி. ஆச்சார்யா (BV Acharya) நாட்டின் மூத்த, முதன்மையான வழக்கறிஞர்களில் ஒருவர். இவரது சொந்த ஊர் கர்நாடக மாநிலம் உடுப்பி அருகில் உள்ள ஒரு சிற்றூர் ஆகும். 1953ஆம் ஆண்டு சென்னைக்கு வந்து சட்டப்படிப்பு படித்தவர். பெங்களூரில் நடந்த ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கில்,2005இல் அரசு வழக்கறிஞராக நியமிக்கப் பட்டு, அரசு தரப்பில் வாதாடினார். 2012, ஆகத்ட்டில், அரசு வழக்கறிஞர் ஆச்சார்யாவுக்கு, மாநில அட்வகேட் ஜெனரல் பதவியைக் கர்நாடக மாநில அரசு அளித்தது. இவ்வழக்கின் முதல் சிறப்பு வழக்கறிஞர் ஆச்சாரியா 2012, ஆகத்து அன்று பதவி விலகியதை அடுத்து பவானி சிங் சிறப்பு வழக்கறிஞரானார். தன் பதவி விலகலுக்கு அப்போதைய கருநாடக பாசக அரசு தான் காரணம் என்று குற்றஞ்சாட்டினார். எதிர்காலத்தில் அதிமுகவுடன் பாசக அரசியல் உறவுக்க் கொள்வதற்காக பாசக அரசு அவ்வாறு நடந்து கொண்டதாக்க் கூறினார்.[1]

சுயசரிதை[தொகு]

இவர்தன் தன்வரலாறை ஆல் பிரம் மெமரி என்ற பெயரில் எழுதியுள்ளார். இதில் தனது வழக்கறிஞர் தொழிலில் ஏற்பட்ட அனுபவங்களையும், ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கின் போது ஏற்பட்ட நெருக்கடிகளையும் விவரித்துள்ளார்.[2]

வகித்த பதவிகள்[தொகு]

  • ஐந்துமுறை அட்வகேட் ஜெனரல்
  • பார் கவுன்சில் தலைவர்
  • இந்திய சட்ட ஆணைய உறுப்பினர்[3]

குறிப்புகள்[தொகு]

  1. http://archive.indianexpress.com/news/special-court-trying-jaya-assets-case-gets-new-judge/1189885/2
  2. http://www.dailythanthi.com/News/India/2014/11/16020046/B-V-Acharya-tabloid-reported-in-the-book-of-life.vpf
  3. தி இந்து தமிழ் 30.11.2014 பி.வி. ஆச்சார்யா சிறப்புப் பேட்டி
"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._வி._ஆச்சார்யா&oldid=2718487" இலிருந்து மீள்விக்கப்பட்டது