சி. அருளம்பலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சி. அருளம்பலம்
C. Arulampalam
இலங்கை நாடாளுமன்றம்
for நல்லூர்
பதவியில்
1970–1977
முன்னையவர்இ. மு. வி. நாகநாதன்
பின்னவர்மு. சிவசிதம்பரம்
குழுக்களுக்கான பிரதித் தலைவர்
பதவியில்
23 சூலை 1976 – 18 மே 1977
முன்னையவர்சேனபால சமரசேகர
பின்னவர்சி. ஆர். பெலிகம்மன
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1909-02-18)18 பெப்ரவரி 1909
அரசியல் கட்சிஇலங்கை சுதந்திரக் கட்சி
இனம்இலங்கைத் தமிழர்

சின்னையா அருளம்பலம் (Chinnaiah Arulampalam, 18 பெப்ரவரி 1909 - ) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.[1]

அரசியலில்[தொகு]

அருளம்பலம் 1952 ஆம் ஆண்டில் இடம்பெற்ற 2ஆவது நாடாளுமன்றத் தேர்தலில் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக கோப்பாய் தொகுதியில் போட்டியிட்டு இலங்கைத் தமிழரசுக் கட்சி வேட்பாளர் கு. வன்னியசிங்கத்திடம் தோற்றார்.[2] பின்னர் 1956 தேர்தலிலும் போட்டியிட்டுத் தோற்றார்.[3]

அருளம்பலம் நல்லூர் தொகுதியில் மார்ச் 1960,[4] சூலை 1960[5] மற்றும் 1965[6] தேர்தல்களில் போட்டியிட்டு இலங்கைத் தமிழரசுக் கட்சி வேட்பாளர் இ. மு. வி. நாகநாதனிடம் தோற்றார். அவர் பின்னர் 1970 தேர்தலில் மீண்டும் போட்டியிட்டு நாகநாதனை வென்று நாடாளுமன்றம் சென்றார்.[7] அவர் பின்னர் ஆளும் இலங்கை சுதந்திரக் கட்சிக்கு கட்சி மாறினார். இதன் பயனாக அவருக்கு 1975 ஆம் ஆண்டில் குழுப் பிரதித் தலைவர் பதவி கிடைத்தது..[8]

1977 தேர்தலில் சுதந்திரக் கட்சியின் சார்பில் நல்லூர்த் தொகுதியில் போட்டியிட்டு 1,042 வாக்குகளை மட்டும் பெற்று படுதோல்வி அடைந்தார்.[9]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Arulampalam, Chinnaiah". இலங்கை நாடாளுமன்றம்.
  2. "Result of Parliamentary General Election 1952" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2015-09-24. பார்க்கப்பட்ட நாள் 2014-11-29.
  3. "Result of Parliamentary General Election 1956" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2015-09-24. பார்க்கப்பட்ட நாள் 2014-11-29.
  4. "Result of Parliamentary General Election 1960-03-19" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2015-07-12. பார்க்கப்பட்ட நாள் 2014-11-29.
  5. "Result of Parliamentary General Election 1960-07-20" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2015-09-24. பார்க்கப்பட்ட நாள் 2014-11-29.
  6. "Result of Parliamentary General Election 1965" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2015-07-13. பார்க்கப்பட்ட நாள் 2014-11-29.
  7. "Result of Parliamentary General Election 1970" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2009-12-09. பார்க்கப்பட்ட நாள் 2014-11-29. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  8. "Deputy Chairman of Committees". இலங்கை நாடாளுமன்றம்.
  9. "Result of Parliamentary General Election 1977" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2011-07-17. பார்க்கப்பட்ட நாள் 2014-11-29.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சி._அருளம்பலம்&oldid=3553643" இலிருந்து மீள்விக்கப்பட்டது