சுகன்யா (நடிகை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுகன்யா
பிறப்புஆர்த்திதேவி
25 நவம்பர் 1969 (1969-11-25) (அகவை 54)[1]
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
1991
2010
பெற்றோர்தந்தை : ரமேஷ்
தாயார் : பாரதி
வாழ்க்கைத்
துணை
ஶ்ரீதர ராஜகோபாலன்
(2002–2003) (மணமுறிவு)[2]
விருதுகள்பிலிம்பேர் விருதுமலையாளம், தமிழ்நாடு சிறந்த நடிகைக்கான விருது

சுகன்யா (Sukanya பிறப்பு: 25 நவம்பர், 1969[3]) இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

வாழ்க்கைக் குறிப்பு

  • சென்னையில் வாழ்ந்த ரமேஷ்–பாரதி இணையரின் மூத்த மகளாக 25 நவம்பர் 1969 அன்று பிறந்தார். இவருக்கு கீதா என்ற ஒரு தங்கை உள்ளார்.

திரையுலக அனுபவம்

இவரது ஆர்த்தி தேவி என்ற இயற்பெயரை இவர் நடித்த முதல் திரைப்படமான புது நெல்லு புது நாத்து திரைப்படத்திலிருந்து இயக்குனர் பாரதிராஜாவால் சுகன்யா என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு திரையுலகில் நுழைந்தார். சுகன்யா தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் சுமார் 15 ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறார். இவா் திரைக்கு வருவதற்கு முன்பு பொதிகை தொலைக்காட்சியில் பெப்சி நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கினாா். அதன் பிறகு சன் டி.வி யில் அந்த நிகழ்ச்சியை உமா தொகுத்து வழங்கினாா். இவர் அழகு மற்றும் திருப்பதி திருக்குடை திருவிழா என்னும் இரு பக்தி ஆல்பங்களை தொகுத்து வெளியிட்டுள்ளார்.

இவர் புது நெல்லு புது நாத்து, சின்ன கவுண்டர், திருமதி பழனிச்சாமி, செந்தமிழ் பாட்டு, உறுதிமொழி, சின்ன மாப்ளே, சின்ன ஜமீன், வால்டர் வெற்றிவேல், உடன் பிறப்பு, மகாநதி, கேப்டன், டூயட், இந்தியன், சேனாதிபதி, மகாபிரபு, ஞானப்பழம் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் தமிழ் திரையுலகில் சத்யராஜ், சரத்குமார், ரகுமான் உடன் அதிகமான திரைப்படங்களில் இணைந்து ஜோடியாக நடித்துள்ளார்.

கமலஹாசன், விஜயகாந்த், பிரபு, கார்த்திக் போன்ற நடிகர்களுடனும் பெரும் வெற்றி திரைப்படங்களில் இணைந்து நடித்துள்ளார். மொத்தமாக ஐந்து முறை சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதினை வென்றுள்ளார்.

திருமண வாழ்க்கை

சுகன்யா அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்ரீதர இராஜகோபால் என்பவரை 2002 ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டார்.[4] பின்பு கருத்து வேறுபாடு காரணமாக சட்டப்படி இருவரும் மணமுறிவு பெற்றனர்.

நடித்த தமிழ்த் திரைப்படங்கள்

தமிழ்த் திரைப்படங்கள்

ஆண்டு திரைப்படம் கதாபாத்திரம் குறிப்புகள்
1991 புது நெல்லு புது நாத்து கிருஷ்ணவேணி அறிமுக திரைப்படம்
1991 எம். ஜி.ஆர் நகரில் சோபனா
1992 சின்ன கவுண்டர் தெய்வானை
1992 இளவரசன் பூங்கோதை
1992 தம்பி பொண்டாட்டி சுமதி
1992 கோட்டை வாசல் வசந்தி
1992 திருமதி பழனிச்சாமி அம்சவேணி
1992 செந்தமிழ் பாட்டு துர்காதேவி
1992 சோலையம்மா சோலையம்மா
1993 சின்ன மாப்ளே ஜானகி
1993 வால்டர் வெற்றிவேல் சுமதி
1993 ஆதித்யன் ராசாத்தி
1993 சக்கரைத் தேவன் சரசு
1993 உடன் பிறப்பு பவானி
1993 தாலாட்டு டாக்டர். ரேவதி
1993 கருப்பு வெள்ளை சுவர்ணா
1993 சின்ன ஜமீன் சத்யா
1994 மகாநதி யமுனா
1994 கேப்டன் உமா
1994 சீமான் பாக்கியம்
1994 ஹீரோ சீதா
1994 வண்டிச்சோலை சின்ராசு பார்வதி
1994 ராஜபாண்டி ராணி புவனா
1995 மிஸ்டர். மெட்ராஸ் மீரா
1996 மகாபிரபு மகாலட்சுமி
1996 இந்தியன் அமிா்தவள்ளி
1996 புதிய பராசக்தி பராசக்தி
1996 பரிவட்டம்
1996 சேனாதிபதி மீனாட்சி
1996 ஞானப்பழம் ஆா்த்தி
1997 ஆஹா கீதா
1997 கோபுரதீபம் மீனா
1997 தம்பிதுரை செண்பகம்
2000 குட்லக் தேவி
2001 கிருஷ்ணா கிருஷ்ணா பாமா
2001 ஶ்ரீபண்ணாரிஅம்மன் சிறப்புத் தோற்றம்
2004 அடிதடி
2006 சில்லுனு ஒரு காதல் நிர்மலா
2007 தொட்டால் பூ மலரும் பெரிய நாயகி
2008 ஆயுதம் செய்வோம் லீலாவதி
2008 எல்லாம் அவன் செயல்
2009 அழகர் மலை
2013 சந்திரா
2014 என்னமோ நடக்குது காயத்ரி

தொலைக்காட்சித் தொடர்கள்

மேற்கோள்கள்

  1. [https://m.timesofindia.com/topic/Sukanya Sukanya Actress]. Times of India. https://m.timesofindia.com/topic/Sukanya. "Sukanya Actress Born - November 25, 1969 in Chennai, Tamil Nadu, India" 
  2. "விவாகரத்து உத்தரவை ரத்து செய்யக் கோரி நடிகை சுகன்யா கணவர் மேல்முறையீடு".
  3. [https://m.timesofindia.com/topic/Sukanya Sukanya Actress]. Times of India. https://m.timesofindia.com/topic/Sukanya. "Sukanya Actress Born - November 25, 1972 in Chennai, Tamil Nadu, India" 
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-12-21. பார்க்கப்பட்ட நாள் 2014-11-17.

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுகன்யா_(நடிகை)&oldid=3868558" இலிருந்து மீள்விக்கப்பட்டது