எம். எஸ். எஸ். பாண்டியன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எம். எஸ். எஸ். பாண்டியன்
பிறப்புமத்தியாஸ் சாமுவேல் சவுந்திர பாண்டியன்
(1958-12-16)16 திசம்பர் 1958
மார்த்தாண்டம்,
கன்னியாகுமரி மாவட்டம்,
சென்னை மாநிலம்
(தற்போது தமிழ்நாடு),இந்தியா
இறப்பு10 நவம்பர் 2014(2014-11-10) (அகவை 55)
புது தில்லி,
தலைநகர் பகுதி, இந்தியா
தொழில்சமூகச் செயற்பாட்டாளர், கல்வியாளர்
குடியுரிமைஇந்தியர்
கல்வி நிலையம்சென்னைப் பல்கலைக்கழகம்
குறிப்பிடத்தக்க படைப்புகள்The Image Trap(1992) Brahmin and Non-Brahmin: Genealogies of the Tamil Political Present(2007/2008)

எம். எஸ். எஸ். பாண்டியன் (மறைவு நவம்பர் 10, 2014) தமிழ்நாட்டைச் சேர்ந்த சமூக ஆய்வாளரும், தில்லி சவகர்லால் நேரு பல்கலைக்கழக வரலாற்றுத் துறைப் பேராசிரியரும் ஆவார். பெரியாரையும் அவரது சுயமரியாதைக் கருத்துக்களையும் வெளியுலகிற்குக் கொண்டு சென்றவர்களில் ஒருவர். திராவிடர் இயக்கம், தேசிய இனப் பிரச்சனைகள், சாதிய சிக்கல்கள், தமிழ்த் திரைப்படம் எனப் பல துறைகளிலும் ஆய்வுக் கட்டுரைகள் எழுதினார்.[1]

வாழ்க்கைச் சுருக்கம்[தொகு]

தமிழ்நாடு கன்னியாகுமரி மாவட்டத்தில் மார்த்தாண்டம் எனும் ஊரில் பிறந்த பாண்டியன், நாகர்கோயில் ஸ்காட் கிறித்துவக் கல்லூரியில் பயின்று 1978 இல் இளங்கலைப் பட்டம் பெற்றார். பின்னர் சென்னைப் பல்கலைக்கழகத்தில் 1980 ஆம் ஆண்டில் முதுகலைப் பட்டமும், 1987 இல் முனைவர் பட்டமும் பெற்றார்.[2] பின்னர், சென்னை வளர்ச்சிக் கல்விகள் கழகத்தில் சேர்ந்து பணியாற்றிய பின்னர் கல்கத்தா சி.எஸ்.எஸ்.எஸ் நிறுவனத்தில் சிலகாலம் பணியாற்றி, மீண்டும் சென்னை வளர்ச்சிக் கல்விகள் கழகத்தில் துணைப் பேராசிரியராக 12 ஆண்டு காலம் பணியாற்றினார். ஆக்ஸ்போர்டு, ஹவாய், மின்னிசோட்டா உள்ளிட்ட பல பல்கலைக்கழகங்களில் வருகைதரு பேராசிரியராக பணிபுரிந்த இவர் 2009 முதல் தில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத்துறை பேராசிரியராகப் பணிக்குச் சேர்ந்தார்.[2]

இதழ்பணிகள்[தொகு]

இந்தியாவின் புகழ்பெற்ற ஆங்கில ஏடான 'எகனாமிக் அண்ட் பொலிடிகல் வீக்லி'யில் 1980களில் இருந்து ஆய்வுக்கட்டுரைகளை எழுதிவந்தார். 'சவுத் இண்டியன் ஸ்டடிஸ்' என்னும் ஆய்வேட்டை நிறுவி, கேரள அறிஞர் கே.டி.ராம்மோகன் போன்றோரின் துணையுடன் அதனை ஆங்கிலத்திலும் மலையாளத்திலும் கொண்டுவந்தார்.[3]

நூல்கள்[தொகு]

எம்.ஜி.ஆர். என்னும் நிகழ்வுப் போக்குக் குறித்து அவர் 'எகனாமிக் அண்ட் பொலிடிகல் வீக்லி'யில்1980இல் எழுதிய கட்டுரை பின்னர் விரிவுபடுத்தப்பட்டு ,'தி இமேஜ் ட்ராப்;எம்.ஜி.ராமச்சந்திரன் இன் ஃபில்ம்ஸ் அண்ட் பாலிடிக்ஸ்'(The image Trap:M.G.Ramchandran in Films and political) என்னும் முழு நூலாக வெளிவந்து பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்நூல் திரைப்பட ஆய்வாளர்கள், அரசியல் ஆய்வாளர்கள் ஆகியோரின் கவனத்தை ஈர்த்தது. இது பனினர் பிம்பச் சிறை என்ற பெயரில் 2016 ஆம் ஆண்டு மொழிபெயர்கப்பட்டது. அவரது 'பிராமின்/நான்-பிராமின்(Brahmin/Non-Brahmin) என்னும் ஆங்கில நூல் மூன்று பதிப்புகளைக் கண்டுள்ளது.[3]

மறைவு[தொகு]

எம். எஸ். எஸ். பாண்டியன் 2014 நவம்பர் 10 திங்கட்கிழமை திடீர் மாரடைப்பு ஏற்பட்டு தில்லி AIIMS மருத்துவமனையில் தனது 56-ஆம் பிறந்தநாளுக்கு ஒரு மாதம் இருந்தபோதே காலமானார். பாண்டியனுக்கு, மனைவி முனைவர் ஆனந்தியும், ப்ரீத்தி என்ற மகளும் உள்ளனர்.[4]

வெளியிட்ட நூல்கள்[தொகு]

  • Brahmin and Non-Brahmin: Genealogies of the Tamil Political Present, புதுதில்லி: 2007/2008
  • The Image Trap: M G Ramachandran in Films and Politics (1992)
  • Political Economy of Agrarian Change: Nacnchilnadu, c. 1880-1939, 1990
  • Muslims, Dalits and Fabrications of History: Subaltern Studies, Writings on South Asian History and Society, vol. 12, 2005 (தொகுப்பு)

மேற்கோள்கள்[தொகு]

  1. "மூத்த திராவிடர் இயக்க ஆய்வாளர் முனைவர் பேரா. எம்.எஸ்.எஸ். பாண்டியன் காலமானார்!". ஒன் இந்தியா தமிழ். 10 நவம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 11 நவம்பர் 2014.
  2. 2.0 2.1 "MSS Pandian passes away". தமிழ்நெட். 10 நவம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 11 நவம்பர் 2014.
  3. 3.0 3.1 தி இந்து தமிழ் எம்.எஸ்.எஸ்.பாண்டியன்; அறிவை ஆயுதமாக்கிய சிந்தனையாளர்-எஸ்.வி.ராஜதுரை
  4. "கீழ்நிலை மாந்தர் கண்ணோட்டத்திலிருந்து வரலாறு: "உந்து சக்தி எம்.எஸ்.எஸ்.பாண்டியன்"". பிபிசி தமிழோசை. 10 நவம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 11 நவம்பர் 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._எஸ்._எஸ்._பாண்டியன்&oldid=3831626" இலிருந்து மீள்விக்கப்பட்டது