வாக்கு வங்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாக்கு வங்கி (Vote Bank) எனப்படுவது, ஒரு நாட்டின் ஜனநாயக தேர்தலில் ஒரு வேட்பாளர் அல்லது அரசியல் கட்சி வெற்றி பெற ஒரு குறிப்பிட்ட சாதி, சமயம், இனம், புவியியல் மற்றும் மொழி சார்ந்த வாக்காளர்களின் வாக்குகளை கவர்வதற்கு, தேர்தலின் போது அறிவிக்கும் சில வாக்குறுதிகளால் தங்களை சார்ந்த சமூகம் வளம் பெறும் எனும் ஆவலால், ஒரு குறிப்பிட்ட வேட்பாளருக்கு தங்களது வாக்குகளை அளிக்க முன்வரும் கூட்டமாகும். பல நேரங்களில் வாக்கு வங்கி கொண்ட வேட்பாளர் தேர்தலில் தோல்வியைத் தழுவவும் வேண்டிவரும். இது போன்ற வாக்கு வங்கி அரசியல், இந்தியாவில் தான் உலக அளவில் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது. சமயச் சிறுபான்மையின மக்கள் மற்றும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமூகம் அடிப்படையில் அரசியல் கட்சிகள் தங்களது வாக்கு வங்கியை வளர்த்துக் கொள்வர். பிற சமய மற்றும் சாதி மக்கள், வாக்கு வங்கி கொண்டுள்ள வேட்பாளருக்கு எதிராக வாக்குகள் அளிக்கும் போது வாக்கு வங்கி கொண்ட வேட்பாளர் தேர்தலில் தோல்வியைத் தழுவ வேண்டிவரும். வாக்கு வங்கி அரசியலால், சமூகத்தில் ஒற்றுமை நீங்கி பிளவும் சச்சரவுகளும் அதிகம் வளரக் காணரமாகிவிடுகிறது. [1].[2]

குறுகிய மனப்பான்மை கொண்ட, சனநாயக விரோதமான வாக்கு வங்கி அரசியல் மக்களைப் பிளவுபடுத்துவதுடன், நாட்டின் வலுத்தன்மையையும் சீர்குலைக்கின்றது.[3].[4].

தோற்றம்[தொகு]

இந்திய சமூகவியலரான (Sociologist) எம். என். ஸ்ரீநிவாசன் என்பவரால் உலகில் முதன் முதலாக வாக்கு வங்கி என்ற சொல் பயன்படுத்தப்பட்டது.[5].[6][7].[8],[9]

உலக நாடுகள் அளவில் வாக்கு வங்கி[தொகு]

இந்தியா[தொகு]

சமயச் சார்பற்ற அரசமைப்பு கொண்ட இந்தியாவில், ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி நாட்டை ஆள நினைக்கும் அரசியல் கட்சிகள், மக்களை சமயம், சாதி, மொழி, இனம் மற்றும் புவியியல் அடிப்படையில் பிளவுபடுத்தி, அதன் மூலம் வாக்கு வங்கி அமைப்பை உருவாக்கி, தேர்தலின் போது மலிவான வாக்குறுதிகள் மக்கள் மத்தியில் வாரி இறைத்து வாக்குகள் பெற்று ஆட்சிக் கட்டிலில் அமரலாம் என எண்ணிச் செயல்படுகின்றனர். இந்த வாக்கு வங்கி அரசியலை, பல முறை பொது மக்கள், தேர்தலின் போது பொய்யாக்கி காட்டியுள்ளனர்.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வாக்கு_வங்கி&oldid=3520407" இலிருந்து மீள்விக்கப்பட்டது