புபொப 1

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புபொப 1
NGC 1
புபொப 1 (நடுவில்), புபொப 2 (கீழே)
கண்டறிந்த தகவல்கள் (J2000 ஊழி)
விண்மீன் குழுபெகாசசு (விண்மீன் குழு)
வல எழுச்சிக்கோணம்00h 07m 15.84s[1]
பக்கச்சாய்வு+27° 42′ 29.1″[1]
செந்நகர்ச்சி0.015177[1]
தூரம்211 ± 14 Mly
(64.7 ± 4.5 Mpc)[2]
வகைSbbPa Ring[1]
தோற்றப் பரிமாணங்கள் (V)1'.549 x 1'.023
தோற்றப் பருமன் (V)13.65[1]
ஏனைய பெயர்கள்
UGC 00057, PGC 000564, Holm 2A, GC 1.[1]
இவற்றையும் பார்க்க: பேரடை, பேரடைகளின் பட்டியல்

புபொப 1 (NGC 1) என்பது பெகாசசு விண்மீன் தொகுதியில் இடம்பெற்றுள்ள ஒரு சுருள் விண்மீன் மண்டல வளையம் ஆகும். இவ்வளையம் சுமார் 190 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. விட்டம் அளவில் சுமார் 90 000 ஒளி ஆண்டுகள் தொலைவில் இது நமது பால் வெளியை விட சற்று சிறியதாக இருக்கும். புதிய பொதுப் பட்டியலில் முதலாவது இடத்தைப் பிடித்துள்ள வானுறுப்பு இதுவாகும்[1]. 1860 காலகட்டத்தில் புதிய பொதுப்பட்டியல அட்டவணையைத் தொகுப்பதற்கு பயன்படுத்தப்பட்ட ஆள்கூறுகளில் இவ்வுறுப்புதான் பட்டியலில் உள்ள மற்ற உறுப்புகளைக் காட்டிலும் குறைவான வல ஏற்றம் கொண்டிருந்தது. வல ஏற்றத்தின் அடிப்படையில் பட்டியல் தயாரிக்கப்பட்ட காரணத்தால் இது பட்டியலில் முதல் இடம் பெற்றது[3] . பின்னர் பட்டியல் தொகுப்பதற்கான ஆள்கூறுகள் மாறிவிட்டன என்றாலும் இன்று வரை மற்ற வானுறுப்புகளைக் காட்டிலும் இதுவே குறைந்த வலஏற்றம் கொண்டதாக கருதப்படுகிறது[4]

புபொப 1 (2MASS)

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 "NASA/IPAC Extragalactic Database". Results for NGC 0001. பார்க்கப்பட்ட நாள் 2006-11-04.
  2. "Distance Results for NGC 0001". NASA/IPAC Extragalactic Database. பார்க்கப்பட்ட நாள் 2010-05-03.
  3. Dreyer, J. L. E., "New General Catalogue of Nebulae and Clusters of stars (1888)", Memoirs of the Royal Astronomical Society, 49. p3, Royal Astronomical Society, 1962.
  4. Erdmann, R.E., Jr., The Historically Corrected New General Catalogue of Nebulæ and Clusters of Stars, p12, retrievedand 13th June 2008.

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
புபொப 1
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

ஆள்கூறுகள்: Sky map 00h 07m 15.86s, +27° 42′ 29.7″

.

"https://ta.wikipedia.org/w/index.php?title=புபொப_1&oldid=3791706" இலிருந்து மீள்விக்கப்பட்டது