சட்டமிடுதல் (காண்கலைகள்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மரங்கள் கோயில் மீது பார்வையைக் குவிக்கிறது
காட்சி மீது சட்டமிடப்படுகிறது

சட்டமிடுதல் (framing) என்பது ஒர் உருவின் காணக்கூடிய அடிப்படைக் கூறுகளை அறிமுகப்படுத்துதல் ஆகும். குறிப்பாக மற்றைய விடயங்களிலிருந்து குறித்த விடயத்தை முன் நிறுத்த காண்கலைகளில் குறிப்பாக ஒளிப்பதிவுவில் கையாளப்படும் ஓர் நுட்பமாகும். சட்டமிடுதல் உருவை அதிக கலையழகுடன் காட்டுவதுடன் பார்வையாரை சட்டமிடப்பட்ட விடயத்தின் மீது பார்வையைக் குவியச் செய்கிறது. இது உருவிற்கு ஆழத்தை வழங்குவதோடு, விடயம் கட்டங்கட்டி அல்லது சட்டமிட்டு காட்ட வேண்டிய தேவை இருப்பின் படத்தை சுவாரசியமுள்ளதாக்குகின்றது.[1]

உசாத்துணை[தொகு]

  1. "Framing Your Shots – Photography Composition Technique". பார்க்கப்பட்ட நாள் 4 நவம்பர் 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சட்டமிடுதல்_(காண்கலைகள்)&oldid=2746645" இலிருந்து மீள்விக்கப்பட்டது