ஜூடித் பட்லர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜூடித் பட்லர்
மார்ச்சு 2012இல் பட்லர்
பிறப்புபெப்ரவரி 24, 1956 (1956-02-24) (அகவை 68)
கிளீவ்லன்ட், ஐக்கிய அமெரிக்கா
காலம்20வது / 21வது-நூற்றாண்டு மெய்யியல்
பகுதிமேற்குலக மெய்யியல்
பள்ளி
முக்கிய ஆர்வங்கள்
குறிப்பிடத்தக்க
எண்ணக்கருக்கள்
செல்வாக்குச் செலுத்தியோர்
செல்வாக்குக்கு உட்பட்டோர்

ஜூடித் பட்லர் (Judith Butler, பெப்ரவரி 24, 1956) அமெரிக்க ஐரோப்பிய மெய்யியலாளரும் பாலினக் கோட்பாட்டாளரும் ஆவார். இவரது ஆய்வுகள் அரசியல் தத்துவம், நன்னெறி, பெண்ணியக் கூறுகள், கோணல் கோட்பாடு[2] மற்றும் இலக்கியக் கோட்பாடுகளில் தாக்கமேற்படுத்தி உள்ளன.[3] தமது துணைவர் வெண்டி பிரவுனுடன் 1993 முதல் கலிபோர்னியா பல்கலைகழகத்தில் பேராசிரியையாக இருந்து வருகிறார்.

ஜூடித் ஒகையோவில் பிறந்தவர். 1984இல் யேல் பல்கலைக்கழகத்திலிருந்து மெய்யியல் முனைவர் பட்டம் பெற்றார்.[4] 1990இல் ரூட்லெட்சு பதிப்பித்த ஜெண்டர் டிரபிள் பெண்ணிய இரண்டாம் அலைக்குக் காரணமாக அமைந்தது. இந்நூலில் பால் ஈருருமையே பாலினம் எனக் குறிப்பிட்டுள்ளார்; பாலின நிகழ்த்துகைசொல் கோட்பாடு குறித்து விவரித்துள்ளார்.

இந்தக் கோட்பாடு பெண்ணியம் மற்றும் உறவுகள் கல்வியில் முதன்மை இடம் பெறுகிறது.[5] ஜூடித் நங்கை, நம்பி, ஈரர், திருனர் சமூக இயக்கங்களில் துடிப்பான செயற்பாட்டாளராக விளங்குகிறார். பல தற்கால அரசியல் நிகழ்வுகளைக் குறித்து வெளிப்படையாக பேசி வருபவர்.[6] குறிப்பாக, இசுரேலின் அரசியல் குறித்து வலுவாக எதிர்த்து வருகிறார்.[7] இசுரேல்-பாலத்தீனப் பிணக்கிற்கு இசுரேலின் அரசியலே காரணம் என்றும் அனைத்து யூதர்களையும் அல்லது யூதர்களின் கருத்துகளுக்கும் சார்பாளராக இசுரேல் இருக்க முடியாது என்றும் கூறி வருகிறார்.[8]

மேற்சான்றுகள்[தொகு]

  1. Ryzik, Melena (22 August 2012). "Pussy Riot Was Carefully Calibrated for Protest". த நியூயார்க் டைம்ஸ். http://www.nytimes.com/2012/08/26/arts/music/pussy-riot-was-carefully-calibrated-for-protest.html?nl=todaysheadlines&emc=tha28_20120823. பார்த்த நாள்: 23 August 2012. 
  2. Halberstam, Jack. "An audio overview of queer theory in English and Turkish by Jack Halberstam". பார்க்கப்பட்ட நாள் 29 May 2014.
  3. Kearns, Gerry (2013). "The Butler affair and the geopolitics of identity". Environment and Planning D: Society and Space 31: 191–207. doi:10.1068/d1713. 
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-09-30. பார்க்கப்பட்ட நாள் 2014-10-29.
  5. Thulin, Lesley (19 April 2012). "Feminist theorist Judith Butler rethinks kinship". Columbia Spectator. http://www.columbiaspectator.com/2012/04/19/feminist-theorist-judith-butler-rethinks-kinship. பார்த்த நாள்: 9 October 2013. 
  6. "Judith Butler". McGill Reporter. McGill. Archived from the original on 25 செப்டம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 9 October 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  7. Gans, Chaim (December 13, 2013). "Review of Judith Butler's "Parting Ways: Jewishness and the Critique of Zionism"". Notre Dame Philosophical Reviews. http://ndpr.nd.edu/news/36335-parting-ways-jewishness-and-the-critique-of-zionism/. பார்த்த நாள்: September 23, 2013. 
  8. "US-Philosophin Butler: Israel vertritt mich nicht". Der Standard. 15 September 2012. http://derstandard.at/1347492636246/US-Philosophin-Butler-Israel-vertritt-mich-nicht. பார்த்த நாள்: 15 September 2012. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜூடித்_பட்லர்&oldid=3573210" இலிருந்து மீள்விக்கப்பட்டது