வலைவாசல் பேச்சு:பெண்ணியம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நல்லது சிபி. பெண்ணியவாதிகள்>தமிழ் பெண்ணியவாதிகள்>பெண்ணிய சஞ்சிகைகள்>பெண்ணிய அமைப்புகள்>பெண்ணிய எழுச்சிகள்/போராட்டங்கள் முதலான விடயங்கள் இடலாம்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 09:06, 27 அக்டோபர் 2014 (UTC)[பதிலளி]

சமூக விழிப்புணர்வை தூண்டும்விதமாக அமைத்திடல் வேண்டும். பெண்ணியம் கட்டுரை அறிமுகப்பகுதியாக அமைவது அவசியம். வரலாற்றில் பெண்ணியத்தின் வெளிப்பாடுகள், ஆன்மீக பரப்புரைகளில் பெண்ணியப் பார்வைகள், சமூக சீர்திருத்தங்கள், பெரியாரிய, மார்க்சிய பார்வைகள், மேற்கத்திய பெண்ணியப் போராட்டங்கள், தமிழ்ச் சூழலில் பெண்ணியம் போன்ற விடயங்களில் கட்டுரைகள் சிறப்புக் கட்டுரைப் பகுதியில் வெளியாக வேண்டும். அறிமுக பத்தி 100% பக்கம் எடுக்க, அதன்கீழ் 50% அகலத்தில் வாரத்திற்கு இரண்டு சிறப்புக் கட்டுரைகள் இடலாம். மற்ற 50% அகலத்தில் முதல் கட்டுரைக்கு இணையாக பெண்ணியச் செய்திகளையும் அதன்கீழாக உங்களுக்குத் தெரியுமா? பத்தியையும் இடலாம். இவற்றிற்கு கீழே பெண்ணியவாதி ஒருவரின் வரலாற்றுப் பக்கத்தின் சுருக்கத்தைத் தரலாம்.
மேலும் தமிழ் விக்கியில் பெண்ணியம் பகுப்பிலுள்ள கட்டரைகளுக்கு இணைப்பு வழங்கலாம். சிறப்புப் படமொன்றை அடித்தட்டாக இடலாம்.
வலைவாசலுக்கு முன்பாக en:Template:Feminism sidebar மற்றும் en:Template:Feminist philosophy sidebar வார்ப்புருக்களை தமிழாக்கம் செய்து அதில் இல்லாதக் கட்டுரைகளை உருவாக்க வேண்டும். இந்த வார்ப்புருக்களும் வலைவாசலுடன் இணைக்கப்பட வேண்டும். பெண்ணியம் விக்கித்திட்டம் ஒன்றை உருவாக்கினால் ஆர்வமுள்ளவர்கள் இணைந்து கூட்டாகச் செயல்பட இயலும்.
--மணியன் (பேச்சு) 10:39, 27 அக்டோபர் 2014 (UTC)[பதிலளி]
சிபி, என்னால் வடிவமைப்பில் உதவ முடியும். கட்டமைப்பைத் தந்தால் அதற்கேற்ற வகையில் நிறங்களையும் வடிவமைப்பையும் செய்து முடிக்க உதவுவேன்--♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 10:57, 27 அக்டோபர் 2014 (UTC)[பதிலளி]
மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு வலைவாசல் பகுதி மேம்படுவது மிக்க மகிழ்ச்சியளிக்கிறது. பெண்ணியம் தத்துவார்த்தங்களை மட்டுமே சார்ந்ததல்ல,. அதையும் மீறிய பொழுதுபோக்கினையும் உள்ளடக்கியது. உலகினை காப்பாற்ற சூப்பர்மேன், ஸ்பைடர் மேன் என்று ஆண் கதாப்பாத்திரங்களே முன்னெடுக்கப்பட்ட நிலையில் வொண்டர்வுமன் என பெண் கதாப்பாத்திரமும் உலகை காக்க உருவாக்கப்பட்டமை கூட பெண்ணியமே. காமிக்ஸ் முதல் காமம் வரை பெண்ணியத்தினை விளக்கும் வலைவாசலாக இது அமைய என் வாழ்த்துகளையும், இதனை முன்னெடுப்பவர்களுக்கு என் நன்றிகளையும் சமர்ப்பிக்கிறேன். --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 16:29, 27 அக்டோபர் 2014 (UTC)[பதிலளி]
விக்கிப்பீடியாவில் பெண்கள் பங்களிப்பதும் குறைவு. பெண்களைக் குறித்தான கட்டுரைகளும் குறைவு. இம்முயற்சி இந்த பால் இடைவெளியைக் குறைக்க உதவும் என நம்புகிறேன். உள்ளடக்கம், வடிவமைப்பு ஆங்கில விக்கிப்பீடியாவில் உள்ள வலைவாசலை ஒத்து இருந்தாலே போதுமானது. அதற்கு முன், பெண்ணியம் குறித்த தலைப்புகள் இனங்காணப்பட்டு கட்டுரைகளை மேம்படுத்த வேண்டும். பெண்ணியம் தொடர்பான 100 தலைப்புகள் பட்டியலை உருவாக்கினால் முன்னுரிமை கொடுத்து மேம்படுத்த வேண்டும். செகதீசுவரன் சுட்டியபடி, இவை பரந்த பரப்பிலான தலைப்புகளாக இருத்தல் நல்லது. மெய்யியலை மட்டும் பேசினால் கொட்டாவி வரலாம் :) --இரவி (பேச்சு) 20:31, 27 அக்டோபர் 2014 (UTC)[பதிலளி]
// பெண்ணியம் விக்கித்திட்டம் ஒன்றை உருவாக்கினால் ஆர்வமுள்ளவர்கள் இணைந்து கூட்டாகச் செயல்பட இயலும்.// Y ஆயிற்றுவிக்கித் திட்டம் பெண்ணியம்--Commons sibi (பேச்சு) 18:33, 28 அக்டோபர் 2014 (UTC)[பதிலளி]
//என்னால் வடிவமைப்பில் உதவ முடியும்//வணக்கம் ஆதவன் தங்கள் உதவி தேவை . வலைவாசலின் முகப்பு தற்சமயம் செல்வா அவர்களால் முதல் சுற்று வடிவம் பெற்றுள்ளது . இதை மேலும் தொகுக்கலாம் என்று முயன்ற போது எனக்கு தலை சுற்றியது ;) இங்கு உள்ளது போல் வலைவாசலை அமைக்க முடியுமா ? உள்ளடக்கம் பொறுமையாக பார்த்துக் கொள்ளலாம் . நம்மால் இது முடியுமா ? இவ்வாறு செய்தால் பலன் ஏதும் இருக்குமா ? செல்வா , மணியன் தங்கள் கருத்துகள் தேவை --Commons sibi (பேச்சு) 09:06, 29 அக்டோபர் 2014 (UTC)[பதிலளி]
சிபி... தற்போதைய முதல் சுற்று வடிவம், ஏறத்தாழ நீங்கள் சுட்டிக்காட்டிய பக்கம் போன்றே இருப்பதாக நான் கருதுகிறேன். வழக்கமாக நாம் செய்யும் முறையிலேயே இதனையும் செய்துள்ளேன்; இன்றும் தொடர்வேன்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 09:21, 29 அக்டோபர் 2014 (UTC)[பதிலளி]
மா. செல்வசிவகுருநாதன் //இன்றும் தொடர்வேன்!//அருமை . நல்ல வேலை என் தலை தப்பியது :) --Commons sibi (பேச்சு) 09:41, 29 அக்டோபர் 2014 (UTC)[பதிலளி]
நன்றாகவே உருவாகி வருகின்றது ...பெண்ணியச் சின்னம் தனியாக வேண்டாம் என எனக்குப் படுகிறது...செல்வகுருவிற்கு வாழ்த்துகள் !!--மணியன் (பேச்சு) 15:56, 29 அக்டோபர் 2014 (UTC)[பதிலளி]
அண்ணா, நீங்கள் கூறிய மாற்றங்களை மேற்கொண்டுள்ளேன், மேலும் ஏதும் மாற்றங்கள் தேவையா???--♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 15:57, 29 அக்டோபர் 2014 (UTC)[பதிலளி]

பெண்ணியம் சிறப்பு படம்[தொகு]

பெண்ணியம் வலைவாசலில் இடப்படும் சிறப்பு படங்களில் பெரும்பாலும் இராஜம் கிருஷ்ணன் மட்டுமே உள்ளார். காமினி ராய், முத்துலட்சுமி ரெட்டி போன்றோரின் படங்களையும் அவற்றில் இணைத்தால் சிறப்பாக இருக்கும் என எண்ணுகிறேன் :) --நந்தினிகந்தசாமி (பேச்சு) 13:54, 22 திசம்பர் 2014 (UTC)[பதிலளி]

தங்களது எண்ணங்கள் நிறைவேற்றப்பட்டன அக்கா., இலகுவாக அடுத்தமுறை இங்கு இட்டால் யாரோ ஒருவர் பரிந்துரை இட்டது போலும் இருக்கும். வேலையும் இலகுவாகும். பரிந்துரைகளுக்கு நன்றி. :) :)--♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 03:02, 23 திசம்பர் 2014 (UTC)[பதிலளி]

மார்ச்சு 2015 முழுக்க பெண்ணியம் தொடர்பான பங்களிப்புகள்[தொகு]

அனைத்துலக பெண்கள் நாளை முன்னிட்டு மார்ச்சு 2015 முழுக்க பெண்ணியம் தொடர்பான கட்டுரைகளில் கவனம் செலுத்துமாறு பங்களிப்பாளர்களை வேண்டலாம். இது தொடர்பான கட்டுரைகள் பட்டியலை உருவாக்கினால் அண்மைய மாற்றங்களில் இட்டு பங்களிப்பைத் தூண்டலாம். புதிய பெண் பங்களிப்பாளர்களை ஈர்ப்பதற்கான முயற்சிகளையும் மேற்கொள்ளலாம். இது தொடர்பான கருத்துகளை வரவேற்கிறேன். கவனிக்க: சிபி--இரவி (பேச்சு) 07:01, 2 பெப்ரவரி 2015 (UTC)

அருமையான யோசனை இரவி . கடந்த 1 மாத காலமாக கடினமான வேலை பலு . மீண்டு(ம்) வந்துவிட்டேன் .பட்டியல் உருவாக்கும் பணியில் ஆயத்தம் காட்டுகிறேன் --Commons sibi (பேச்சு) 07:49, 3 பெப்ரவரி 2015 (UTC)
வழமைபோல என்னால் இயன்றதை செய்கிறேன்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 09:17, 3 பெப்ரவரி 2015 (UTC)
அண்மைய மாற்றங்களில் தூண்டல்களை இட்டுள்ளேன். பெண்ணியம் தொடர்பான வார்ப்புருக்கள், தேவைப்படும் கட்டுரைகளில் இருந்து இக்கட்டுரைகளை இனங்காண்கிறேன். --இரவி (பேச்சு) 14:28, 7 மார்ச் 2015 (UTC)