சை. வே. சிட்டிபாபு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சை. வே. சிட்டிபாபு (பிறப்பு 1920) என்னும் சைதாப்பேட்டை வேணுகோபால் சிட்டிபாபு. ஆங்கிலத்திலும் தமிழிலும் அழகுறப் பேசக்கூடியவர். பள்ளிக் கல்வி மற்றும் கல்லூரிக் கல்வி இயக்குநராக இருந்தவர். இவரது தந்தை பெயர் சை. வேணுகோபால். தாயார் ராம்பாய். கல்வி எம்.ஏ. (வரலாறு)

பணிகள்[தொகு]

இடைநிலைக் கல்வி இயக்குநராக (Director of Secondary Education) [1] [2] இருந்தபோது கல்விச் சீரமைப்பு, தேர்வு சீர்திருத்தத்தின் பகுதியாக அகமதிப்பீடு திட்டம் உள்ளிட்ட திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளார். 1977-1978 இல் மதுரை காமராசர் பல்கலைக்கழகத் துணைவேந்தராக இருந்தபோது திறந்த நிலைப் பல்கலை முறையை அறிமுகப்படுத்தினார். அண்ணாமலைப் பல்கலைக்கழகமும் சென்னைப் பல்கலைக்கழகமும் இதைப் பின்பற்றின. அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இவர் துணைவேந்தராக இருந்தபோது பட்ட மேற்படிப்பிலும் ஆராய்ச்சிப் படிப்பிலும் சிறப்பாகச் செயல்பட வேண்டுமானால், பல்கலைக்கழகம் உண்மையில் பல்கலைக்கழகமாகச் செயல்பட வேண்டுமானால் 3 ஆண்டு பட்டப்படிப்பு வகுப்புகளை நீக்க வேண்டும் என்று துணிச்சலாக முடிவெடுத்தது, பெரும் வரவேற்பைப் பெற்றது.[3]

குறிப்புகள்[தொகு]

  1. Proceedings of director of secondary education, Madras 8; R.C.No.108301 B7/65, dated5th May 1966
  2. செந்தமிழ் 1966 திசம்பர் பக்.84-85
  3. தினமணி தீபாவளி மலர்,1999,தலைசிறந்த தமிழர்கள். பக்கம்114
"https://ta.wikipedia.org/w/index.php?title=சை._வே._சிட்டிபாபு&oldid=2763497" இலிருந்து மீள்விக்கப்பட்டது