பிரகாஷ் பாபண்ண ஹுக்கேரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பிரகாஷ் பாபண்ண ஹுக்கேரி, கர்நாடக அரசியல்வாதி ஆவார். இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்தவர். இவர் பதினாறாவது பாராளுமன்றத் தேர்தலில் சிக்கோடி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, மக்களவை உறுப்பினர் ஆனார். இவர் 1947-ஆம் ஆண்டின் மார்ச்சு ஐந்தாம் நாளில் பிறந்தார். கர்நாடகத்தின் பெல்காம் மாவட்டத்திற்கு உட்பட்ட சிக்கோடி வட்டத்தைச் சேர்ந்தவர்.[1]

சான்றுகள்[தொகு]

  1. http://164.100.47.132/LssNew/Members/Biography.aspx?mpsno=4924[தொடர்பிழந்த இணைப்பு] - இந்திய மக்களவையின் இணையதளம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரகாஷ்_பாபண்ண_ஹுக்கேரி&oldid=3221038" இலிருந்து மீள்விக்கப்பட்டது