வின்சென்ட் பாலா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வின்சென்ட் எச் பாலா
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
மே 2009
முன்னையவர்படி ரிப்பில் கைந்தியா
தொகுதிசில்லாங் மக்களவைத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புபெப்ரவரி 14, 1968 (1968-02-14) (அகவை 56)
லமிர்சியாங் கிராமம், கிழக்கு ஜைந்தியா மலை மாவட்டம், மேகாலயா, இந்தியா
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்திமோரின் தரியாங்
பிள்ளைகள்நான்கு
பெற்றோர்(s)சான் டக்கர்,
ஹெர்மிலின்டா பாலா
வாழிடம்(s)சில்லாங், மேகாலயா
கல்விகுடிசார் பொறியியல்
முன்னாள் கல்லூரிசல்பைகுரி அரசு பொறியியல் கல்லூரி, மேற்கு வங்காளம்
இணையத்தளம்http://www.vincentpala.com/

வின்சென்ட் பாலா (Vincent H Pala) இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சார்ந்த ஓர் அரசியல்வாதியும் மக்களவை உறுப்பினரும் ஆவார். 1968 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14 அன்று பாலா பிறந்தார். இவர் 2009ஆம் ஆண்டு முதல் சில்லாங் மக்களவைத் தொகுதியை முன்னிறுத்தி வருகிறார்.[1][2]

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

வின்சென்ட் பாலா, சான் டக்கர் மற்றும் ஹெர்மிலின்டா பாலா தம்பதியருக்கு மகனாக மேகாலயாவின் கிழக்கு ஜைந்தியா மலை மாவட்டத்திலுள்ள லமிர்சியாங் கிராமத்தில் பிறந்தார்.

இவர் மேற்கு வங்காளத்தில் உள்ள சல்பைகுரி அரசு பொறியியல் கல்லூரியில் குடிசார் பொறியியல் பட்டம் பெற்றுள்ளார்.

திமோரின் தரியாங்கை மணமுடித்த இவருக்கு நான்கு மகள்கள் உள்ளனர். தற்போது சில்லாங்கில் வாழ்ந்து வருகிறார்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "2009 இந்திய பாராளுமன்றத் தேர்தல்". Archived from the original on 2014-04-27. பார்க்கப்பட்ட நாள் 2014-10-15.
  2. 2014 இந்திய பாராளுமன்றத் தேர்தல்
  3. வின்சென்ட் எச் பாலா சுயவிவரம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=வின்சென்ட்_பாலா&oldid=3739910" இலிருந்து மீள்விக்கப்பட்டது