தன்னையே முறியடிக்கும் யோசனை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தன்னையே முறியடிக்கும் யோசனைகள் (Self-refuting ideas அல்லது self-defeating ideas) அல்லது தன்னையே முறியடிக்கும் கூற்றுகள் (Self-refuting statements) தம்மை மெய் என நிறுவ முயலும் போது தம்மைத் தாமே முறியடிக்கும் தன்மை கொண்டவை. எடுத்துக்காட்டாக “அனைத்து கூற்றுகளும் பொய்யானவை” எனும் கூற்றினைக் கொள்ளலாம். இக்கூற்று மெய்யாக வேண்டுமெனில் அனைத்து கூற்றுகளும் பொய்யாக வேண்டும் - தான் உட்பட - எனவே இது மெய்யாக முடியாது. இவ்வாறு இக்கூற்று தன்னையே முறியடித்துவிட்டது.[1]

மேற்கோள்கள்[தொகு]