ஐனேயா (விவிலிய நபர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பேதுரு ஐனேயாவின் பிணி போக்கல். ஓவியர்:Masolino da Panicale, 1425.

ஐனேயா என்பவர் புதிய ஏற்பாட்டின் திருத்தூதர் பணிகள் 9:32-33இல் குறிக்கப்பட்டுள்ள நபர் ஆவார். இவர் லித்தாவில் வாழ்ந்து வந்தார். இவர் எட்டு ஆண்டுகள் முடக்குவாதத்தால் படுக்கையில் கிடந்தார். புனித பேதுரு இவரிடம் வந்து "ஐனெயா, இயேசு கிறிஸ்து உம் பிணியைப் போக்குகிறார்: எழுந்து உம் படுக்கையை நீரே சரிப்படுத்தும்" என்று கூறியபோது இவர் குணமைடைந்ததாக நம்பப்படுகின்றது.

புரூஸ் (F. F. Bruce) என்னும் விவிலிய அறிஞர், விவிலியத்தில் குறிக்கப்படவில்லை எனினும், ஐனேயா லித்தாவில் வாழ்ந்த கிறித்தவர்களில் ஒருவர் என்கின்றார்.[1] மேலும் சிலர் எழுந்து உம் படுக்கையை நீரே சரிப்படுத்தும் என்னும் சொற்றொடர் எழுந்து உணவருந்தும் அல்லது எழுந்து படுக்கையினை விரியும் என்னும் பொருளில், ஐனேயாவால் முன்னர் செய்ய இயலா ஒன்றை செய்ய தூண்டுவதாக அமைந்துள்ளது என்பர்.[2]

விவிலியத்தில் இந்த நிகழ்வுக்குப்பின்பு தொற்கா மீண்டும் உயிர் பெறும் நிகழ்வு குறிக்கப்படுகின்றது.

மேற்கோள்கள்[தொகு]

  1. F. F. Bruce, Commentary on the Book of the Acts (Grand Rapids: Eerdmans, 1964), 210.
  2. Williams, David J. (2011). Acts. Understanding the Bible Commentary Series. Baker Books. பக். 166. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-4412-3745-3. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐனேயா_(விவிலிய_நபர்)&oldid=1730939" இலிருந்து மீள்விக்கப்பட்டது