விருகம்பாக்கம் அரங்கநாதன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

விருகம்பாக்கம் அரங்கநாதன் (27. திசம்பர்,1931-27. சனவரி. 1965[1]) என்று அறியப்படும் ஒ. அரங்கநாதன் இந்தியாவில் நடுவண் அரசால் இந்தியை ஆட்சி மொழியாக்க நிறைவேற்றப்பட்ட அலுவல்மொழி சட்டம், 1963ஐ அமல் படுத்துவதை எதிர்த்து, தமிழ்நாட்டில் நடந்த இந்தி எதிப்புப் போராட்டத்தின்போது, தீக்குளித்து உயிர்விட்ட ஒரு போராளி ஆவார்.

வாழ்க்கை[தொகு]

இவர் ஒய்யலி, முனியம்மாள் இணையருக்கு 1931-ஆம் ஆண்டில் டிசம்பர் 27-ஆம் நாளில் மூன்றாவது மகனாகப் பிறந்தார். நடுவணரசின் தொலைபேசித் துறையில் பணியாற்றியவர்.[2] அவரின் மனைவியின் பெயர் மல்லிகா. அமுதவாணன், அன்பழகன், ரவிச்சந்திரன் ஆகிய குழந்தைகள் ஆவர். இளம் வயதிலேயே வீரக் கலைகளில் ஆர்வம் கொண்டவர். விருகம்பாக்கத்திலேயே உடற்பயிற்சிக் கூடம் அமைத்து அங்குள்ள இளைஞர்களுக்குப் பயிற்சி கொடுத்து வந்தார். திராவிட இயக்க ஏடுகளை இளைஞர்களுக்கு வரவழைத்துப் படிக்கவைத்து வந்தார்.

இந்தித் திணிப்பை எதிர்த்து போராட்டம்[தொகு]

1965 ஜனவரி 26 முதல் இந்தி மட்டுமே ஆட்சி மொழி எனும் சட்டத்தை நிறைவேற்ற நடுவணரசு ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தயாராகி வந்தது. முன்னறிவிப்புகளும் வந்தன. இதை உணர்ந்த மாணவர்களும் பொதுமக்களும் கிளர்ந்தனர், விருதுநகர் சீனிவாசன், காளிமுத்து, நா.காமராசன் ஆகியோரும், சில மாணவர் தலைவர்களும் இப்போராட்டத்தை வடிவமைத்து நடத்தினார்கள் [3]

தீக்குளிப்பு[தொகு]

1965 சனவரி 25ஆம் நாள் இந்தி மட்டுமே ஆட்சி மொழிச் சட்டத்தை நிறைவேற்றுவதை எதிர்த்து, தீக்குளித்து உயிர்விட்ட கோடம்பாக்கம் சிவலிங்கத்தின் உடலை நேராகப் பார்த்துவிட்டுவந்தார் [4] தீவிரமான சிந்தனையில் இரண்டு நாள்கள் கழித்து 27.1.1965 புதன்கழமை இரவு 2 மணிக்கு விருகம்பாக்கம் நேஷனல் தியேட்டர் அருகில் ஒரு மாமரத்தின் அடியில் தீக்குளித்து மாண்டார்[5] சற்றுத் தள்ளி அவர் விட்டுச் சென்ற அட்டையில் சில தாள்கள் இருந்தன. அவை இந்தித் திணிப்பைக் கண்டித்து மத்திய, மாநில அரசுகளுக்கு அனுப்பப்பட்ட கடிதங்களுக்கான பதிவு அஞ்சல் ரசீதுகள் என்று தெரிந்தது. தமிழக அரசால் அரங்கநாதன் பெயர் சென்னையில் ஒரு சுரங்கப் பாதைக்கு வைக்கப்பட்டுள்ளது.

குறிப்புகள்[தொகு]

  1. "ஏன் மொழிப் போராளிகளை நாம் நினைவுகூர வேண்டும்?". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2021-12-02.
  2. "இந்தித் திணிப்பை எரித்துப்பொசுக்கிய விருகம்பாக்கம் அரங்கநாதன்!". ஆனந்தவிகடன். 2016-01-27. பார்க்கப்பட்ட நாள் 25 ஏப்ரல் 2016. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. தீயில்வெந்த தமிழ்ப் புலிகள். குயில் பண்ணை-சேலம், பக்கம் 12
  4. தீயில்வெந்த தமிழ்ப் புலிகள். குயில் பண்ணை-சேலம், பக்கம் 12
  5. தீயில்வெந்த தமிழ்ப் புலிகள். குயில் பண்ணை-சேலம், பக்கம் 29

வெளி இணைப்புகள்[தொகு]