ஆப்கானித்தான் குடியரசுத் தலைவர் தேர்தல் 2014

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆப்கானிய குடியரசுத் தலைவர் தேர்தல், 2014

← 2009 5 ஏப்ரல் 2014
14 சூன் 2014
2019 →
 
கட்சி சுயேச்சை ஆப்கானிய தேசிய கூட்டணி

  Abdullah, absolute majority   Abdullah, relative majority   Ahmadzai, absolute majority   Ahmadzai, relative majority   Rassoul, absolute majority

முந்தைய குடியரசுத் தலைவர்

ஹமித் கர்சாய்
சுயேச்சை

குடியரசுத் தலைவர் -தெரிவு

தீர்மானிக்கப்படவில்லை


ஆப்கானித்தான் குடியரசுத் தலைவர் தேர்தல் முதற்கட்டமாக ஏப்ரல் 5, 2014 அன்றும் இரண்டாம் கட்டம் சூன் 14 அன்றும் நடத்தப்பட்டன. தற்போது பதவியிலுள்ள ஆப்கானியக் குடியரசுத் தலைவர் ஹமித் கர்சாய் மீண்டும் போட்டியிட தகுதியற்றவராக உள்ளார். செப்டம்பர் 16, 2013 முதல் அக்டோபர் 6, 2013 வரை வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர்.[1] இத்தேர்தலில் போட்டியிட மொத்தம் of 27 வேட்பாளர்கள் உறுதி செய்தனர்.[2] இருப்பினும், அக்டோபர் 22 அன்று ஆப்கானித்தானின் சுயேட்சை தேர்தல் ஆணையம் 16 வேட்புமனுக்களை நிராகரித்தது. தேர்தலில் போட்டியிட 11 வேட்பாளர்கள் தகுதி பெற்றனர்.[3] ஏப்ரல் 2014 தேர்தலுக்கு முன்னதாக மூன்று வேட்பாளர்கள் விலகிக் கொண்டனர். எஞ்சிய எட்டு பேரில் அப்துல்லா அப்துல்லாவும் அசரஃப் கனியும் முன்னணியில் இருப்பதாக கருத்துக் கணிப்புக்கள் தெரிவித்தன.[4] அதற்கேற்பவே முதற்கட்ட தேர்தலில் அப்துல்லா முதலிலும் கனி இரண்டாவதாகவும் வந்தனர். இரண்டாம் கட்ட தேர்தல் முடிவுகளே புதிய குடியரசுத் தலைவரை தீர்மானிக்கும். சூன் 14 அன்று நடந்த இரண்டாம் கட்ட தேர்தலின் முன்னோட்ட முடிவுகள் சூலை 2 அன்றும் இறுதி முடிவுகள் சூலை 22 அன்றும் வெளியாவதாக இருந்தன. இருப்பினும், மோசடிகள் நடந்ததாக எழுந்த பரவலான குற்றச்சாட்டுக்களால் இம்முடிவுகள் இன்னமும் அறிவிக்கப்படவில்லை.[5] அப்துல்லா அப்துல்லாவோ அசரஃப் கனி அகமத்சய்யோ தான் வெற்றி பெற்றவர் என்றபோதும் தேர்தல் மோசடிகளால் முடிவு இன்னமும் அறிவிக்கப்படவில்லை.

இந்த தேர்தலே ஆப்கானித்தானின் வரலாற்றில் முதன்முறையாக மக்களாட்சி முறைமையில் அதிகாரம் மாற்றப்படும் நிகழ்வாக அமையும்.[6][7][8][9]

மேற்சான்றுகள்[தொகு]

  1. "Dr. Zalmai Rasoul nominated for 2014 presidential elections". 6 October 2013. பார்க்கப்பட்ட நாள் 2014-02-03.
  2. Bailey Cahall (7 October 2013). "27 candidates enter race for Afghanistan's 2014 presidential election". Foreign Policy. Archived from the original on 2013-10-29. பார்க்கப்பட்ட நாள் 2014-02-03.
  3. Ali M Latifi (22 October 2013). "Sixteen Afghan election hopefuls disqualified". Al Jazeera. பார்க்கப்பட்ட நாள் 2014-02-03.
  4. "Polling Comes to Afghanistan, Suggesting Limit to Sway of President Karzai". NewYorkTimes. 28 December 2013. http://www.nytimes.com/2013/12/29/world/asia/polling-comes-to-afghanistan-suggesting-limit-to-sway-of-president-karzai.html. பார்த்த நாள்: 2014-02-07. 
  5. http://abcnews.go.com/International/wireStory/afghan-official-election-results-delayed-24376862
  6. "Huge security as Afghan presidential election looms". BBC. April 4, 2014. http://www.bbc.com/news/world-asia-26880022. 
  7. "Afghanistan votes in historic presidential election". BBC. 5 April 2014. http://www.bbc.com/news/world-asia-26893972. 
  8. Shalizi and Harooni, Hamid and Mirwais (April 4, 2014). "Landmark Afghanistan Presidential Election Held Under Shadow of Violence". Huffington Post. http://www.huffingtonpost.com/2014/04/04/landmark-afghan-election-_n_5095143.html. 
  9. "Afghanistan's Future: Who's Who in Pivotal Presidential Election". NBC News. http://www.nbcnews.com/news/world/afghanistans-future-whos-who-pivotal-presidential-election-n24756.