கோட்டை உரட்லா மண்டலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கோட்டை உரட்லா மண்டலம் (Kotauratla), ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினம் மாவட்டத்திற்கு உட்பட்ட 43 மண்டலங்களில் ஒன்றாகும். [1]

ஆட்சி[தொகு]

இந்த மண்டலத்தின் எண் 37. இது ஆந்திர சட்டமன்றத்திற்கு பாயகராவுபேட்டை சட்டமன்றத் தொகுதியிலும், இந்திய பாராளுமன்றத்திற்கு அனகாபள்ளி மக்களவைத் தொகுதியிலும் உட்படுத்தப்பட்டுள்ளது.[2]

ஊர்கள்[தொகு]

இந்த மண்டலத்தில் 21 ஊர்கள் உள்ளன. [3]

  1. பாமுலவாகா
  2. பொடபாலம்
  3. பிப்பல்ல கொத்தபல்லி
  4. சின்ன பொட்டெபல்லி
  5. கொடவடிபூடி
  6. கிருஷ்ணம் போட்ல அக்ரகாரம்
  7. லிங்காபுரம்
  8. பாபிராஜு கொத்தபல்லி
  9. அன்னவரம்
  10. யெண்டபல்லி
  11. ஜல்லூரு
  12. சுங்கபூரு
  13. தங்கேடு
  14. ராமன்னபாலம்
  15. கோட்டை உரட்லா
  16. கைலசப்பட்டினம்
  17. ராஜுபேட்டை
  18. சௌடுவாடா
  19. தடபர்த்தி ஜங்கம்பேட்டை
  20. கொட்டிவாடா
  21. பந்தூர்

புவியியல்[தொகு]

கோட்டை உரட்லா 17.35N 82.41E இல் அமைந்துள்ளது. [4] இம்மண்டலம் சராசரியாக கடல் மட்டத்திலிருந்து 30 மீற்றர்கள் (101 அடிகள்) உயரமாக அமைந்துள்ளது. இம்மண்டலத்தினூடக வரகா எனும் நதி பாய்கின்றது. இம்மண்டலம் 80 கிலோ மீற்றர் சதுர பரப்பளவைக் கொண்டதாகும்.

சான்றுகள்[தொகு]

  1. "விசாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள மண்டலங்கள்". Archived from the original on 2014-04-19. பார்க்கப்பட்ட நாள் 2014-08-23.
  2. "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-10-17.
  3. "மண்டல வாரியாக ஊர்கள் - விசாகப்பட்டினம் மாவட்டம்" (PDF). Archived from the original (PDF) on 2015-03-19. பார்க்கப்பட்ட நாள் 2014-08-23.
  4. Falling Rain Genomics.Kotauratla
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோட்டை_உரட்லா_மண்டலம்&oldid=3552012" இலிருந்து மீள்விக்கப்பட்டது