தேசிய நீதிபதிகள் நியமன ஆணையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தேசிய நீதிபதிகள் நியமன ஆணையச் சட்ட வரைவு, 2014 (National Judicial Appointments Commission Bill, 2014) இந்தியாவில் உயர்நிலை நீதிபதிகளை நியமிக்கவும் பதவி உயர்வு மற்றும் இடம் மாற்றம் செய்யவும் உருவாக்கப்படவுள்ள தேசிய நீதிபதிகள் நியமன ஆணையத்தின் செய்முறைகளை வரையறுக்கும் சட்ட வரைவு ஆகும்.[1][2] இந்தச் சட்ட வரைவு ஆகத்து 13, 2014 அன்று எதிர்ப்பு ஏதும் பதிவாகாமல் ,367 பேர் ஆதரவுடன்[3] மக்களவையாலும்[4] ஆகத்து 14, 2014 அன்று மாநிலங்களவையாலும் நிறைவேற்றப்பட்டது. இத்தகைய நீதிபதிகள் நியமன முறைமையை உருவாக்கும் அதிகாரத்தை இந்திய அரசியலமைப்பு வழங்கும் வகையில் 99ஆவது அரசமைப்பு திருத்த சட்டவரைவும் இதே நாட்களில் நிறைவேற்றப்பட்டன.[5] இந்தச் சட்டவரைவு மூலம் இதுகாறும் நடைமுறையில் உள்ள நீதிபதிகள் தேர்வுக் குழுவிற்கு (collegium) மாற்றாக தேசிய நீதிபதிகள் நியமன ஆணையம் உருவாக்கப்படுகிறது. இந்த சட்ட வரைவுகளில் ஆணையத்தின் உறுப்பினர்களின் தகுதிகள், எண்ணிக்கை போன்ற விவரங்களும் ஆணையத்தின் செய்முறைகள், அதிகாரங்களும் வரையறுக்கப்பட்டுள்ளன.[6].

நீதிபதிகள் நியமன ஆணைய மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார். உச்சநீதிமன்றம், மற்றும் உயர் நீதிமன்றங்களின் நீதிபதிகளை தேர்வு செய்ய அமைக்கப்படும் ஆணயத்திற்கு, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைவராக இருப்பார். 6 பேர் கொண்ட இந்த ஆணையத்தில், இந்திய அரசின் சட்ட அமைச்சர், உச்சநீதிமன்ற நீதிபதிகள் இருவர், சட்ட நிபுணர்கள் இருவர் இடம் பெறுவர்.[7].[8]

தீர்ப்பு[தொகு]

நீதிபதிகள் நியமன ஆணையம் அரசியல் அமைப்புச் சாசனத்திற்கு எதிரானது என உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு, 16 அக்டோபர் 2015 அன்று தீர்ப்பு வழங்கியது.[9] [10]

விமர்சனங்கள்[தொகு]

உச்ச நீதிமன்றத்தின் இத்தீர்ப்பு நாடாளுமன்ற இறையாண்மைக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது என இந்திய அரசின் அமைச்சர் இரவி சங்கர் பிரசாத் கருத்து தெரிவித்துள்ளார்.[11]

மேற்சான்றுகள்[தொகு]

  1. "National Judicial Appointments Commission Bill, 2014" (PDF). Archived from the original (PDF) on 2014-08-17. பார்க்கப்பட்ட நாள் 15 ஆகத்து 2014.
  2. "National Judicial Appointments Commission Bill, 2014". PRS Legislative Research. பார்க்கப்பட்ட நாள் 15 ஆகத்து 2014.
  3. "நீதிபதிகள் நியமன ஆணைய மசோதா நிறைவேற்றம் ::". தீக்கதிர் தமிழ் நாளிதழ். 14 ஆகத்து 2014. p. 1. Archived from the original on 2016-03-06. பார்க்கப்பட்ட நாள் 21 ஆகத்து 2014.
  4. "நீதிபதிகளை நியமிக்கப் புதிய முறை: மக்களவையில் ஒருமனதாக மசோதா நிறைவேறியது". தினமணி. 14 ஆகத்து 2014. பார்க்கப்பட்ட நாள் 16 ஆகத்து 2014.
  5. "The Constitutions (One hundred and twenty-first) Amendment) Bill, 2014" (PDF). Govt, of India. Archived from the original (PDF) on 2014-08-19. பார்க்கப்பட்ட நாள் 15 ஆகத்து 2014.
  6. இதழ் ஆசிரியர் (15 ஆகத்து 2014). "நீதிபதிகள் நியமன ஆணையம் - I". தினமணி. பார்க்கப்பட்ட நாள் 16 ஆகத்து 2014.
  7. இந்தியாவில் உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் ஆகியவற்றுக்கான நீதிபதிகளை நியமிக்க புதிய சட்டம் ஒன்று கொண்டுவரப்பட்டுள்ளது.
  8. புதிய நீதிபதிகள் நியமனச் சட்டம் ஏன்?
  9. இந்திய தேசிய நீதிபதிகள் நியமன ஆணையம் சட்டவிரோதமானது: உச்சநீதிமன்றம்
  10. 'தேசிய நீதிபதிகள் நியமன ஆணையம்' அரசியல் சாசனத்துக்கு எதிரானது: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
  11. http://www.dinamalar.com/news_detail.asp?id=1365674 பார்லிமென்ட் இறையாண்மைக்கு பாதிப்பு: மத்திய அரசு]

வெளி இணைப்புகள்[தொகு]