சமிந்த எரங்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சமிந்த எரங்கா
Shaminda Eranga
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்ரணவீர முதலியன்செலாகே சமிந்த எரங்கா
பிறப்பு23 சூன் 1986 (1986-06-23) (அகவை 37)
சிலாபம், இலங்கை
மட்டையாட்ட நடைவலக்கை
பந்துவீச்சு நடைவலக்கை நடுத்தர வேகம்
பங்குபந்து வீச்சாளர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 118)செப்டம்பர் 16 2011 எ. ஆத்திரேலியா
கடைசித் தேர்வுமார்ச் 16 2013 எ. வங்காளதேசம்
ஒநாப அறிமுகம் (தொப்பி 147)ஆகத்து 16 2011 எ. ஆத்திரேலியா
கடைசி ஒநாபசூலை 23 2013 எ. தென்னாப்பிரிக்கா
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
சிலாபம் மேரியான்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு 1நாள் முத ப-A
ஆட்டங்கள் 7 13 50 43
ஓட்டங்கள் 49 17 916 180
மட்டையாட்ட சராசரி 8.16 5.66 21.80 22.50
100கள்/50கள் 0/0 0/0 1/4 0/1
அதியுயர் ஓட்டம் 15 7* 100* 69*
வீசிய பந்துகள் 1,344 482 5,580 1,885
வீழ்த்தல்கள் 21 16 112 51
பந்துவீச்சு சராசரி 37.19 27.93 31.20 29.82
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0 2 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0 0 0
சிறந்த பந்துவீச்சு 4/65 3/46 6/21 4/38
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
3/- 5/- 26/- 19/-
மூலம்: Cricinfo, சூலை 23 2013

சமிந்த எரங்கா (Shaminda Eranga, பிறப்பு: 23 சூன் 1986) இலங்கைத் துடுப்பாட்டப் பந்து வீச்சாளர் ஆவார்.

சமிந்த எரங்கா தனது முதலாவது ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியை இலங்கை அணிக்காக 2011 ஆகத்து 16 இல் அம்பாந்தோட்டை, துடுப்பாட்ட அரங்கில், ஆத்திரேலியாவுக்கு எதிராக விளையாடி, இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.[1]

முதலாவது தேர்வுப் போட்டியை 201 செப்டம்பர் 16 இல் ஆத்திரேலியாவுக்கு எதிராக விளையாடினார். தனது முதலாவது பந்திலேயே விக்கெட் ஒன்றைக் கைப்பற்றினார். இவ்வாறு உலகிலேயே முதலாவது பந்தில் விக்கெட் கைப்பற்றியவர்களில் இவர் 15வது வீரர் ஆவார். மொத்தம் ஐந்து விக்கெட்டுகளை இவர் தனது முதலாவது தேர்வுப் போட்டியில் பெற்றார்.[2]

துடுப்ப்ட்ட விளையாட்டுகளில் இவர் தொடர்ச்சியாகக் காயமடைந்து வந்ததால், இவரது இரண்டாவது தேர்வுப் போட்டி 2012 ஆகத்திலேயே இடம்பெற்றது. அப்போது அவர் தனது முதலாவது பன்னாட்டு இருபது20 போட்டியிலும் விளையாடினார். இந்தியாவுக்கு எதிரான இ20 போட்டியில் தனது முதலாவது ஓவரிலேயே கம்பீரின் விக்கெட்டைக் கைப்பற்றினார். இதன் மூலம், தான் விளையாடிய அனைத்து முதலாவது துடுப்பாட்ட விளையாட்டுகளிலும் (தேர்வு, ஒருநாள், இருபது20) முதல் ஓவரிலேயே விக்கெட்டைக் கைப்பற்றிய ஒரே வீரர் என்ற சாதனையை நிலைநாட்டினார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Shaminda made his ODI debut against Australia". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 8 செப்டம்பர் 2011. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "Sri Lanka makes early inroads". தி இந்து. செப்டம்பர் 16, 2011. பார்க்கப்பட்ட நாள் செப்டம்பர் 16, 2011. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சமிந்த_எரங்கா&oldid=3243099" இலிருந்து மீள்விக்கப்பட்டது