புனித தோமினிக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புனித தோமினிக்
புனித சாமிநாதர்
புனித தோமினிக்
மறைப்பணியாளர்
பிறப்பு1170
கலரோகா, Province of Burgos, Kingdom of Castile (present-day Castile-Leon, எசுப்பானியா)
இறப்புஆகஸ்ட் 6, 1221
Bologna, Province of Bologna (present-day எமிலியா-ரோமாஞா, இத்தாலி)
ஏற்கும் சபை/சமயங்கள்கத்தோலிக்க திருச்சபை ஆங்கிலிக்க ஒன்றியம் லூதரனியம்
புனிதர் பட்டம்1234
முக்கிய திருத்தலங்கள்புனித தோமினிக் பசிலிக்கா, போலோக்னா
திருவிழாஆகஸ்ட் 8
சித்தரிக்கப்படும் வகைசெபமாலை, நாய், விண்மீன், லில்லி மலர், தொமினிக்கன் சபை உடையில் புத்தகம் மற்றும் கைத்தடியோடு[1]
பாதுகாவல்வானியல்; டொமினிக்கன் குடியரசு; தவறாக குற்றம் சாட்டப்பட்டோர்;

புனித தோமினிக் (எசுப்பானியம்: Santo Domingo), அல்லது ஓஸ்மா நகர தொமினிக் அல்லது பழைய தமிழ் வழக்கில் புனித சாமிநாதர் (1170 – ஆகஸ்ட் 6, 1221), என்பவர் ஒரு எசுப்பானிய குருவும் தோமினிக்கன் சபையின் நிருவனரும் ஆவார். இவர் வானியலாளர்களுக்குப் பாதுகாவளர் ஆவார்.

இவர் 1170ம் ஆண்டு எசுப்பானியாவின் கலரோகா என்ற ஊரில் பிறந்தார். இவரின் பெற்றோர் ஃப்லிக்ஸ் கஸ்மன் மற்றும் ஆசாவின் ஜோனா ஆவர். 16ம் வயதில் புனித அகுஸ்தீனார் சபையில் சேர்ந்தார். இவர் கால்நடையாகவே தெருக்கள் தோறும் சென்று மறைப்பணியாற்றுவதில் ஆர்வம் காட்டினார்.

கி.பி. 13ஆம் நூற்றாண்டில், அல்பிஜென்சிய பதித்தம் கிறிஸ்தவர்களிடையே பரவி வந்தது. இதில் இருந்து மக்களை மனம்திருப்ப உதவுமாறு திருத்தந்தையின் ஆணையால் இவர் அம்மக்களிடையே பணியாற்றினார். இவர் மரியன்னையிடம் வேண்டுதல் செய்து அதன் விளைவாக 1208ஆம் ஆண்டு முரே என்ற இடத்தில் இவருக்கு செபமாலை அன்னை தோன்றி, "செபமாலை பக்திமுயற்சியை மக்களிடையே பரப்பினால் அல்பிஜென்சிய பதித்தம் மறைந்துவிடும்" என்று கூறி மறைந்ததாகக் கூறுவர். அதன்படியே புனித டோமினிக் செபமாலை பக்தியை கிறிஸ்தவர்களிடையே பரப்பினார். இதனால் மக்களிடையே பரவியிருந்த தவறான கருத்துகள் மறைந்தன என நம்பப்படுகின்றது.

இவர் 1215ம் ஆண்டில் துலுஸ் நகரில் ஒரு துறவு சபையை நிறுவினார். இதுவே தோமினிக்கன் சபை அல்லது போதகர் சபை என்றழைக்கப்படுகிறது.

இவர் கி.பி. 1220இல் இறந்தார். 13 ஜூலை, 1234 அன்று திருத்தந்தை ஒன்பதாம் கிரகோரி இவரின் விழாவை உரோமை புனிதர் பட்டியலில் கட்டாயமாக்கினார். இவரின் விழா ஆகஸ்ட் 8ம் நாள் கொண்டாடப்படுகின்றது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "St. Dominic – Iconography". Archived from the original on 2009-08-19. பார்க்கப்பட்ட நாள் 2009-04-19.
"https://ta.wikipedia.org/w/index.php?title=புனித_தோமினிக்&oldid=3564456" இலிருந்து மீள்விக்கப்பட்டது