பேச்சு:பேருவளை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தலைப்பு[தொகு]

பேருவளை என்பது சிங்களப் பெயர். இவ்வூரின் தமிழ்ப் பெயர் வேர்விலை என்பதாகும். வேருவளை என்றும் அழைக்கப்படுகிறது.--பாஹிம் (பேச்சு) 04:08, 4 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]

பாகிம், வேர்விலை என்ற பெயரை கூகுளில் தேடிய போது 10 முடிவுகளே வருகின்றன. இப்பெயர் இப்போது பயன்பாட்டில் உள்ளது போல் தெரியவில்லை. காலத்துக்குக் காலம் ஊர்ப்பெயர்களில் திரிபுகள் ஏற்படுவது வழமை. வேருவளை என்ற பெயரில் நிறைய முடிவுகள் வருகின்றன. வேருவளை என்ற தலைப்புக்கு மாற்றலாம் என்பது எனது கருத்து. கட்டுரையில் ஏனையவற்றுக்குக் கட்டுரையில் குறிப்பும் தந்து வழிமாற்று ஏற்படுத்தலாம்.--Kanags \உரையாடுக 04:22, 4 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]


எனினும் பொதுவாக பத்திரிகைகளில் பேருவளை என்ற பதத்தையே நான் வாசித்திருக்கின்றேன். வேருவளை என ஒரு பதத்தையும் காணவில்லை!--யாழ்ஸ்ரீ (பேச்சு) 04:41, 4 ஆகத்து 2014 (UTC) கூகிளின் தேடல் படி:[பதிலளி]

  1. வேருவளை = ஏறத்தாழ 1,200 முடிவுகள் (0.31 நொடிகள்)
  2. பேருவளை = ஏறத்தாழ 1,22,000 முடிவுகள் (0.31 நொடிகள்)

பேருவளை எனும் பதத்திற்கே அதிக தேடல் முடிவுகள் வந்துள்ளன.--யாழ்ஸ்ரீ (பேச்சு) 04:41, 4 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]

கனகு, வழிமாற்றுகளை ஏற்படுத்தியமை நல்லது. ஸ்ரீகீரன், கூகுள் என்பது எதற்கும் ஆதாரமல்ல. எத்தனை முடிவுகள் வருகின்றன என்பது இணையத்தில், அதுவும் தமிழில் எழுத வசதியும் வாய்ப்புமுள்ளோர் எத்தனை இடங்களில் எழுதியிருக்கிறார்கள் என்பதைத்தான் அதிலிருந்து எடுக்க முடியுமே தவிர சரியானது இதுதான் என்பதற்கு எவ்விதத்திலும் ஆதாரமாகக் கொள்ள முடியாததாகும். அண்மையில் அளுத்கமையில் நிகழ்ந்த கலவரத்தைப் பற்றி இணையத்தில் எழுதியிருந்த ஏராளமானோர் அளுத்கமையில் என்று எழுதுவதற்குப் பதிலாக அளுத்கமவில் என்று எழுதியிருந்தனர். அதனால், அத்தகைய சொற் பயன்பாடு சரியானதாவதில்லை.--பாஹிம் (பேச்சு) 10:15, 4 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]

தங்கள் அறிவுரைக்கு நன்றி!--யாழ்ஸ்ரீ (பேச்சு) 11:57, 4 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பேருவளை&oldid=1701387" இலிருந்து மீள்விக்கப்பட்டது