நரிக்குறவர் இனவரைவியல் (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நரிக்குறவர் இனவரைவியல்
நூல் பெயர்:நரிக்குறவர் இனவரைவியல்
ஆசிரியர்(கள்):கரசூர். பத்மபாரதி
வகை:கட்டுரை
துறை:இனவரைவியல்
இடம்:சென்னை
மொழி:தமிழ்
பக்கங்கள்:270 பக்கங்கள்
பதிப்பகர்:தமிழினிப் பதிப்பகம்
பதிப்பு:முதல் பதிப்பு (2004)
ஆக்க அனுமதி:ஆசிரியருக்கு

நரிக்குறவர் இனவரையியல் என்பது 2004இல் தமிழில் வெளிவந்த ஓர் இனவரைவியல் ஆய்வு நூல் ஆகும். இந்த நூல் "இனவரைவியல் முறையினை மையப்படுத்தி நீண்ட காலக் களப்பணி மூலம் விரிவாகத் தொகுக்கப்பட்ட தரவுகள் அடிப்படையில் விவரண முறையில் எழுதப்பட்டதாகும்". இந்த நூலின் ஆசிரியர் ஆய்வாளர் கரசூர். பத்மபாரதி ஆவார்.

இந்நூல் 1999இல் இந்நூலாசிரியர் செய்த நரிக்குறவர்களின் சடங்குகள் தலைப்பிலான ஆய்வேட்டின் தொடர்ச்சியாக செய்யப்பட்ட இனவரைவியல் நூல். முனைவர் பக்தவத்சல பாரதியின் அணிந்துரையில் இந்திய இனவரையியலை இந்தியர்களே எழுதும் முயற்சியில் ஓர் பெண் ஆய்வாளர் இந்திய ஆரிய மொழிச் சமூகத்தினருடன் ஒன்றிணைந்து அவர்களின் பண்பாட்டை மொழிபெயர்க்கும் சிரமமான பணியை சிறப்பாகச் செய்திருப்பதைக் குறிப்பிடுகிறார்.

வெளி இணைப்புகள்[தொகு]