கௌரிமா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ராமகிருஷ்ண பரமஹம்சரின் இல்லறச்சிஷ்யையான கௌரிமா 1857 இல் பிறந்தார். இவரது பெற்றோர் பார்வதி சரண் சட்டோபாத்தியாயர், கிரிபாலா தேவி. இவரது இயற்பெயர் ம்ருடானி என்பது. அனைவரும் அழைத்தது ருத்ராணி என்று. துறவேற்றபின் இவரது பெயர் கௌரி புரி.1882 ஆம் ஆண்டு ராமகிருஷ்ண பரமஹம்சரை சந்தித்தார்.1894 ஆம் ஆண்டு கல்கத்தாவில் பாரக்பூரின் கங்கை நதிக்கரையில் பெண்களுக்கான ஸ்ரீ ஸ்ரீ சாரதேஸ்வரி ஆசிரமத்தை ஆரம்பித்தார்.அன்னை சாரதாதேவி இந்த ஆசிரமத்திற்கு சென்று பாராட்டி ஆசீர்வதித்தார்.1911 இல் வடக்கு கல்கத்தாவில் அன்னை சாரதாதேவி வாழ்ந்த பகுதிக்கருகில் ஆசிரமத்தை மாற்றினார். ஆசிரமத்தில் ஐம்பது பெண்கள் இருந்தனர். முன்னூறு குழந்தைகள் கல்வி கற்றனர்.

1936 இல் ராமகிருஷ்ண பரமஹம்சரின் நூற்றாண்டு விழாவின் போது அகில இந்திய வானொலியில் தமது குருவைப் பற்றி வங்க மொழியில் சொற்பொழிவாற்றினார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. கடவுளுடன் வாழ்ந்தவர்கள்; பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் இல்லறச் சீடர்கள் 2; பக்கம் 307-339
"https://ta.wikipedia.org/w/index.php?title=கௌரிமா&oldid=2072663" இலிருந்து மீள்விக்கப்பட்டது