தவெவுனி

ஆள்கூறுகள்: 16°48′40″S 179°57′40″E / 16.81111°S 179.96111°E / -16.81111; 179.96111
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தவெவுனி
Taveuni
நாசாவின் வான்வழி படப்பிடிப்பில் தவெவுனி
புவியியல்
அமைவிடம்பிஜி
ஆள்கூறுகள்16°48′40″S 179°57′40″E / 16.81111°S 179.96111°E / -16.81111; 179.96111
தீவுக்கூட்டம்வானுவாலெவு தீவுக்கூட்டம்
அருகிலுள்ள நீர்ப்பகுதிகொரோ கடல்
பரப்பளவு434 km2 (168 sq mi)[1]
பரப்பளவின்படி, தரவரிசை3rd
நீளம்42 km (26.1 mi)
அகலம்10–14 km (6.2–8.7 mi)
உயர்ந்த ஏற்றம்1,241 m (4,072 ft)
உயர்ந்த புள்ளிஉலுய்கலாவு மலை
நிர்வாகம்
Fiji
வடக்குக் கோட்டம்கோட்டம்
தகாதுரோவ்மாகாணம்
பெரிய குடியிருப்புவாயெவோ

தவெவுனி என்னும் தீவு பிஜி நாட்டிற்கு உரியது. வானுவாலெவு, விட்டிலெவு ஆகிய தீவுகளுக்கு அடுத்த பெரிய தீவு. இது 434 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டது. இந்த தீவு தகாந்துரோவ் மாகாணத்தின் ஆட்சிக்கு உட்பட்டது. இங்கு ஏறத்தாழ 9,000 பேர் வசிக்கின்றனர்.

பொருளாதாரம்[தொகு]

மதேய் விமான நிலையம், 2003

இந்த தீவில் உழவுத் தொழிலின் மூலம் கணிசமான வருமானம் கிடைக்கிறது. [2] கவா, வெனிலா, காப்பி ஆகியவற்றைப் பயிரிடுகின்றனர். அமெரிக்க உள்நாட்டுப் போர் நடந்த காலத்தில் (1861–1865), பருத்தியை உற்பத்தி செய்து, ஐரோப்பாவிற்கு ஏற்றுமதி செய்தனர். சில காலத்திற்கு கரும்பும் பயிரிட்டனர். செம்மறியாடு, பசு ஆகிய விலங்குகளையும் வளர்த்தனர். சுற்றுலாத் துறையினால் சிலருக்கு வேலை கிடைத்திருக்கிறது.

மொழிகள்[தொகு]

இங்கு பிஜிய மொழியில் பேசுகின்றனர். இந்த தீவில் பேசப்படும் பிஜிய மொழியில் தோங்க மொழியின் தாக்கம் இருக்கும்.

சான்றுகள்[தொகு]

  1. Gillespie, Rosemary G.; D. A. Clague (2009). Encyclopedia of Islands. University of California Press. பக். 299. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0520256492. https://archive.org/details/encyclopediaofis0000unse_k5w8. பார்த்த நாள்: 18 மார்ச் 2014. 
  2. Cronin, Shane J.; Mark Bebbington; Chin Lai (June 2001). "A probabilistic assessment of eruption recurrence on Taveuni volcano, Fiji". Bulletin of Volcanology 63 (4): 274-288. http://link.springer.com/article/10.1007%2Fs004450100144. பார்த்த நாள்: 20 மார்ச் 2014. 

இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
தவெவுனி
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தவெவுனி&oldid=3849002" இலிருந்து மீள்விக்கப்பட்டது