போகாரோ மாவட்டம்

ஆள்கூறுகள்: 23°41′21″N 86°06′36″E / 23.6892°N 86.110°E / 23.6892; 86.110
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
போகாரோ மாவட்டம்
{{{Local}}}
போகாரோமாவட்டத்தின் இடஅமைவு ஜார்க்கண்டு
மாநிலம்ஜார்க்கண்டு, இந்தியா
தலைமையகம்போகாரோ ஸ்டீல் சிட்டி
பரப்பு2,883 km2 (1,113 sq mi)
மக்கட்தொகை20,62,330
மக்கள்தொகை அடர்த்தி715/km2 (1,850/sq mi)
படிப்பறிவு73.48 %
வட்டங்கள்8
மக்களவைத்தொகுதிகள்1. தன்பாத் (தன்பாத் மாவட்டத்துடன் பகிர்ந்துகொண்டுள்ளது), 2. கிரிடீ (கிரிடீ மாவட்டத்துடன் பகிர்ந்துகொண்டுள்ளது)
அதிகாரப்பூர்வ இணையத்தளம்

போகோரா மாவட்டம் இந்திய மாநிலமான ஜார்க்கண்டில் உள்ளது. இதன் தலைமையகம் போகாரோ ஸ்டீல் சிட்டியில் உள்ளது. இந்த மாவட்டத்தில் இருபது லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வாழ்கின்றனர். இங்குள்ள உருக்காலை, ஆசியாவிலேயே பெரியது. இங்கு இந்திய உருக்கு ஆணையம், இந்தியா நிலக்கரி நிறுவனம், எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகம் ஆகியவற்றின் கிளைகள் அமைந்துள்ளன. இது 2883  சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டது.

மக்கள் தொகை[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது, 2,062,330 மக்கள் வாழ்கின்றனர்.[1] சதுர கிலோமீட்டருக்குள் 716 பேர் என்ற அளவில் மக்கள் அடர்த்தி உள்ளது.[1] ஆயிரம் ஆண்களுக்கு 916 பெண்கள் என்ற அளவில் பால் விகிதம் உள்ளது.[1] இங்கு வாழ்வோரில் 73.48% பேர் கல்வியறிவு பெற்றுள்ளனர்.[1]

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 "மாவட்டக் கணக்கெடுப்பு 2011". Census2011.co.in. 2011. பார்க்கப்பட்ட நாள் 2011-09-30.

இணைப்புகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=போகாரோ_மாவட்டம்&oldid=3890712" இலிருந்து மீள்விக்கப்பட்டது