சந்திரா தனபாலசிங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சந்திரா தனபாலசிங்கம் ஈழத்தின் ஒரு பெண் எழுத்தாளர் ஆவார்.

வாழ்க்கைச் சுருக்கம்[தொகு]

இவரது இயற்பெயர் சந்திரலட்சுமி நாகநாதன். யாழ்ப்பாண மாவட்டம், சண்டிலிப்பாயில் கல்வளை என்ற ஊரில் பிறந்தார். மானிப்பாய் மகளிர் கல்லூரியில் கல்வி கற்றார். பாலர் ஆசிரியராகப் பணியாற்றினார். சிறு வயதிலேயே எழுதுவதில் ஆர்வம் கொண்டார். சிறுகதைகள், கவிதை, நாடகம், சிறுவர் இலக்கியம் எனப் பல துறைகளில் இவர் எழுதினார்.[1]

இவரது நூல்கள்[தொகு]

  • சில மனிதர்கள் (சிறுகதைகள்)
  • உருப்பெறும் உணர்வுகள் (சிறுகதைகள், 2001)
  • வைரப் பனைமரம் (சிறுகதைகள், 2008)
  • சத்திய தரிசனம் (சிறுவர் கதைகள், 2008)
  • பிறந்து விட்ட புது யுகத்தில் (சிறுகதைகள், 2013)

விருதுகள்[தொகு]

இவரது வைரப் பனைமரம் என்ற சிறுவர் கதைத்தொகுதிக்கு 2008 ஆம் ஆண்டின் மிகச் சிறந்த இலக்கிய நூல் என்ற விருதை இலங்கை இலக்கியப் பேரவையும், யாழ் இலக்கிய வட்டமும் இணைந்து வழங்கின.

மேற்கோள்கள்[தொகு]

  1. "எழுத்தாளர்கள் பிறக்கிறார்கள் அவர்கள் உருவாக்கப்படுவதில்லை சந்திரா தனபாலசிங்கத்துடனான நேர்காணல்". வீரகேசரி. 15 சூன் 2014. பார்க்கப்பட்ட நாள் 15 சூன் 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சந்திரா_தனபாலசிங்கம்&oldid=2716266" இலிருந்து மீள்விக்கப்பட்டது