தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சிக் கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சிக் கழகம்
தலைமையகம்திரு.வி.க. தொழிற்பேட்டை, கிண்டி, சென்னை - 600032
முதன்மை நபர்கள்ஜெ.சி.தி. பிரபாகர், வில்லிவாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்
உரிமையாளர்கள்தமிழ்நாடு அரசு
இணையத்தளம்sidco.tn.nic.in/

தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சிக் கழகம் (TANSIDCO) என்பது தமிழக அரசின் கட்டுப்பாட்டின்கீழ் இயங்கும் ஓர் நிறுவனமாகும்[1]. மாநிலங்கள் அளவில் சிறுதொழில்களை மேம்படுத்துவதற்காக இந்திய அரசினால் இந்நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டு, சிறு தொழில்கள் தொடங்குவதற்கு தேவையான அடிப்படை உட்கட்டமைப்பு வசதி, அரசு மானியங்கள், மற்றும் தொழில்நுட்ப உதவி ஆகியவற்றை இந்நிறுவனம் வழங்குகிறது. சிறுதொழில்துறை வளா்ச்சியில், மகாராட்டிரம், குசராத்தைத் தொடர்ந்து மாநிலங்கள் அளவில் தமிழகம் மூன்றாமிடத்தில் உள்ளது[2].

தொழிற்பேட்டைகள்[தொகு]

1958ம் ஆண்டு, தமிழகத்தின் கிண்டி மற்றும் விருதுநகரில் தொழிற்பேட்டைகள் தொடங்கப்பட்டு, தற்போது 94 இடங்களில் விரிவுபடுத்தப்பட்டு செயல்பட்டு வருகிறது.

மாவட்டம் எண் தொழிற்பேட்டை தொடங்கிய
ஆண்டு
பரப்பளவு
(ஏக்கர்)
சென்னை 1 கிண்டி 1958 404.08
2 அரும்பாக்கம் 1979 3.72
3 வில்லிவாக்கம் 1979 2.04
4 கொடுங்கையூர் 1979 7.88
திருவள்ளூர் 5 அம்பத்தூர் 1963 1167.00
6 காக்கலூர் 1988 199.00
7 காக்கலூர் அலகு II 2009 84.01
8 திருமழிசை 1988 160.85
9 கும்மிடிப்பூண்டி 1988 25.24
10 ஆர்.கே. பேட்டை 1996 8.15
11 விச்சூர் 1994 59.16
12 திருமுல்லைவாயில்
(பெண்களுக்கான தொழிற்பேட்டை)
2001 225.80
காஞ்சிபுரம் 13 காஞ்சிபுரம் 1967 37.95
14 மறைமலைநகர் 1981 39.50
15 ஆலத்தூர் 1984 150.00
16 திருமுடிவாக்கம்
(பெண்களுக்கான தொழிற்பேட்டையும் சேர்த்து)
1984 150.00
வேலூர் 17 காட்பாடி 1968 19.48
18 அரக்கோணம் 1968 11.09
18 அரக்கோணம் அலகு II 1984 150.00
19 ராணிபேட்டை 1972 113.44
20 முகுந்தராயபுரம் 1980 86.19
21 வன்னிவேடு 1987 16.44
22 விண்ணமங்கலம் 2009 10.49
திருவண்ணாமலை 23 திருவண்ணாமலை 1968 15.56
கிருஷ்ணகிரி 24 கிருஷ்ணகிரி 1965 41.86
25 உத்தங்கரை 1995 45.28
26 ஒசூர் (சிப்காட்) 1976 95.15
27 ஒசூர் (புதியது) 1999 18.80
28 பர்கூர் 1995 13.05
29 பர்கூர் அலகு II 2009 18.59
29 பொல்லுப்பள்ளி 2009 60.96
தர்மபுரி 30 தர்மபுரி 1965 20.28
31 கடகத்தூர் 2009 7.02

இவற்றையும் பார்க்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Tamil Nadu Small Industries Development Corporation Limited. Official Website". Archived from the original on 2012-08-22. பார்க்கப்பட்ட நாள் 2014-06-14.
  2. The Hindu. 'Awareness seminar'.