பி உயிரணு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
"பி" உயிரணு
அடையாளங்காட்டிகள்
MeSHD001402
FMA62869
உடற்கூற்றியல்

பி உயிரணுக்கள் அல்லது பி செல்கள் என்பவை மாறும் நோயெதிர்ப்புத் அமைப்பின் தாதுசார் நோயெதிர்ப்புத் திறன் பணிகளில் மையமாகப் பணியாற்றும் நிணநீர்க் குழிய வகைகளுள் (வெண்குருதியணு) ஒன்றாகும். இச்செல்களின் வெளிப்பரப்பிலுள்ள புரதமான பி உயிரணு ஏற்பிககளைக் (BCR) கொண்டு பிற நிணநீர்க் குழியங்களிலிருந்து ("டி" உயிரணுக்கள், இயற்கையாகக் கொல்லும் உயிரணுக்கள்) இவற்றை வேறுபடுத்தி அறியலாம். இத்தகு சிறப்பு ஏற்பிகள் இருப்பதால் பி உயிரணுக்கள் குறிப்பட்ட எதிர்ப்பிகளுடன் பிணைவதற்கு ஏதுவாகின்றது. பறவைகளில் ஃபப்ரிசியசின் இழைமப்பையில் (bursa of Fabricius) "பி" செல்கள் முதிர்வடைகின்றன[1]. பாலூட்டிகளில் முதிர்வடையாத "பி" செல்கள் எலும்பு மச்சையில் உருவாகின்றன[2].

மேற்கோள்கள்[தொகு]

  1. Bursa of Fabricius
  2. Alberts B, Johnson A, Lewis J, Raff M, Roberts k, Walter P (2002) Molecular Biology of the Cell. Garland Science: New York, NY pg 1367. "T cells and B cells derive their names from the organs in which they develop. T cells develop in the thymus, and B cells, in mammals, develop in the bone marrow in adults or the liver in fetuses."
"https://ta.wikipedia.org/w/index.php?title=பி_உயிரணு&oldid=2746466" இலிருந்து மீள்விக்கப்பட்டது