கொங்கு தேச ராஜாக்கள் (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கொங்கு தேச ராஜாக்கள் என்பது தொன்ம நூலாகும். இதை வரலாற்று நூலாக எடுத்துக்கொள்ள முடியாது என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இந்த நூலில் உள்ள கதைப்படி கங்கநாட்டை முதலில் ரெட்டி வம்சமும்,[1] பின்னர் கங்க வம்சமும்,[1],[2] அரசாண்டதாக சொல்கிறது. இந்த கதை நூலில் கூறப்படும் கங்க வம்ச அரசர்கள் வரலாற்று கால அரசர்களாக இருந்தாலும் கங்கநாட்டை கொங்குநாட்டாக சித்தரித்ததோடு அல்லாமல் கங்கநாட்டை ஆண்ட அரசர்களை எல்லாம் தவறாக கொங்கு நாட்டு அரசர்களாக கூறுகிறது இந்நூல்.

கதையில் கூறப்படும் ரெட்டி வம்சம்[தொகு]

கதையில் கூறப்படும் கங்க வம்சம்[தொகு]

இவர்கள் வரலாற்று கால அரசர்கள். இருந்தாலும் கங்கநாட்டை கொங்குநாட்டாக சித்தரித்ததோடு அல்லாமல் கங்கநாட்டை ஆண்ட அரசர்களை எல்லாம் கொங்கு நாட்டு அரசர்களாக கூறுகிறது நூல்.

  1. கொங்கணி வர்மன்
  2. மாதவ மகாதிராயன்
  3. அரிவர்ம மகாதிராயன்
  4. விஷ்ணுகோப மகாதிராயன்
  5. வளத்துக் கொண்ட மாதவ மகாதிராயன்
  6. கிருட்டிண வர்மன்
  7. கொங்கணி வர்மன்-I
  8. துர்வினிதன்
  9. புஷ்கராயன்
  10. திருவிக்கிரமராயன்
  11. பூவிக்கிரமராயன்
  12. கொங்கணி மகாதிராயன்
  13. ராஜகோவிந்தராயன்
  14. சிவகாமராயன்
  15. பிரிதிவி கொங்கணி மகாதிராயன்
  16. இராஜமல்ல தேவராயன்
  17. கெந்த தேவராயன்
  18. சத்தியவாக்கிய ராயன்
  19. குணதுத்தும ராயன்
  20. இராஜமல்ல தேவராயன்- I

ஆய்வாளர் தரப்பு கண்டனங்கள்[தொகு]

கொங்கு தேச ராஜாக்கள் என்னும் இந்த பழங்கதை நூலை தொடர்ந்து ஆய்வுத்துறை மாணவர்கள் வரலாற்று நூல் போல் பயன்படுத்துவதை நீலகண்ட சாஸ்திரி தன் "Historical Method in Relation to Indian History" நூலில் கண்டித்துள்ளார்.[3] இது வரலாற்று ஆவணமாகக் காட்ட இது எந்த ஒரு சான்றையும் காட்டவில்லை என்பதும் ஆய்வாளர்கள் கருத்தாகும். இதை மதுரைத் தல வரலாறு என்றும் புராணக்கதையையும் கெலடி நிருப விஜயம் என்னும் வரலாற்றுக்கு ஒத்து வராத நூல்களையும் தழுவி எழுதப்பட்டது என்பதால் இதில் உள்ள எல்லா வரலாறுகளையும் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர் ஆய்வாளர்கள்.[4]

சான்றாவணம்[தொகு]

  1. 1.0 1.1 கொங்கு நாட்டு வரலாறு- (பக்கம்-92-95)-ஆசிரியர்- கோ. ம. இராமச்சந்திரன் செட்டியார்-பேரூர்ப் புலவர் பேரவை-கோயமுத்தூர்-முதற்பதிப்பு-2004-
  2. கொங்கு நாட்டு வரலாறு- (பக்கம்-91)-ஆசிரியர்- கோ. ம. இராமச்சந்திரன் செட்டியார்-அண்ணாமலைப் பல்கலைக் கழகம்-1954-
  3. The Kongudesarajakkal is another chronicle which has been on the whole rather overrated by students of South Indian History. Of course there are parts of this chronicle which will escape this condemnation.[1]
  4. But it pretends to give us a systematic chronology which it is very difficult to fit into the definitely known facts of South Indian History. ' The Keladinripa Vijaya is a Kanarese chronicle [2]