பிள்ளையார் பாளையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பிள்ளையார் பாளையம் காஞ்சிபுரம் நகராட்சியைச் சார்ந்த ஒரு பகுதி. இப்பகுதியின் ஒவ்வொரு தெருவிலும் ஒரு பிள்ளையார் கோவில் இருப்பதால் பிள்ளையார் பாளையம் என அழைக்கப்படுவதாகக் கூறுவர்.

இப்பகுதி மக்களின் முக்கியத் தொழில் நெசவு பட்டுப் புடவைகளை நெய்தல். இங்கு உருவாக்கப்படும் காஞ்சி பட்டுப் புடவைகள் உலகத்தரம் வாய்ந்தவை. இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் மக்கள் பட்டுப் புடவைகளை வாங்க இங்கு நெசவாளர்களை தேடி வருகின்றனர். தற்சமயம் இந்த தொழில் நலிவடைந்து உள்ளதால் பலரும் வேறுபல தொழிற்சாலைகளுக்கு வேலைக்குச் செல்கின்றனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிள்ளையார்_பாளையம்&oldid=1669135" இலிருந்து மீள்விக்கப்பட்டது