நோயெதிர்ப்பியவேதியியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எதிர்ப்பான்-எதிர்ப்பிக் கூட்டுத்தொகுதி
எதிர்ப்பான்-எதிர்ப்பிக் கூட்டுத்தொகுதி

நோயெதிர்ப்பியவேதியியல் (Immunochemistry) என்பது நோயெதிர்ப்பு அமைப்பின் அடிப்படையான மூலக்கூற்று இயங்குமுறைகளைக் குறித்து பயிலும் வேதியியலின் ஒரு பிரிவாகும். இப்பிரிவு எதிர்ப்பான்களின் பண்புகள், எதிர்ப்பிகள், எதிர்ப்பான்கள் - எதிர்ப்பிகளுக்கிடையேயான ஊடாடல்கள் குறித்து அறிந்து கொள்வதை முதன்மையாகக் கொண்டுள்ளது[1]. பல்வேறுவிதமான நோயெதிர்ப்பியவேதியியல் செய்முறைகள் உருவாக்கப்பட்டு, திருத்தப்பட்டு நச்சுயிரியல் (Virology) முதற்கொண்டு மூலக்கூற்றுப் பரிணாமம் (Molecular Evolution) வரை பலதரப்பட்ட அறிவியல் ஆய்வுகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. நோயெதிர்ப்பியவேதியியலின் தொடக்க கால உதாரணமாக சிபிலிசு கண்டறியும் சோதனையைக்[2] கூறலாம்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Immunochemistry, Gold Book.
  2. Beck, A. (2009). "The role of the spirochaete in the Wassermann reaction". Journal of Hygiene 39 (03): 298. doi:10.1017/S0022172400011943. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=நோயெதிர்ப்பியவேதியியல்&oldid=1672871" இலிருந்து மீள்விக்கப்பட்டது