கோலின் பார்ரெல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோலின் பார்ரெல்
பிறப்புகோலின் ஜேம்ஸ் பார்ரெல்
31 மே 1976 ( 1976-05-31) (அகவை 47)
டப்ளின், அயர்லாந்து
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1996–இன்று வரை
பிள்ளைகள்2
வலைத்தளம்
Official website

கோலின் ஜேம்ஸ் பார்ரெல் (ஆங்கில மொழி: Colin Farrell) (பிறப்பு: 1976 மே 31) என்பவர் அயர்லாந்து நாட்டு நடிகர் ஆவார். இவர் முதன் முதலில் பிபிசி நாடகத் தொடரான பாலிகிஸ்ஸாங்கல் (1998) இல் தோன்றினார், பின்னர் நாடகத் திரைப்படமான தி வார் சோன் (1999) திரைப்படத்தில் அறிமுகமானார், மேலும் போர் நாடகத் திரைப்படமான டைகர்லேண்ட் (2000) இல் முக்கிய பாத்திரத்தை ஏற்று நடித்ததன் மூலம் ஹாலிவுட் திரைப்படத்துறையில் அறிமுகமானார்.

அதை தொடர்ந்து போன் பூத் (2002), எஸ்.டப்ல்யூ.அ.டீ (2003), டேர்டெவில் (2003), டோட்டல் ரீகால், தி பேட்மேன் (2022)[1] உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்ததன் மூலம் எல்லோருக்கும் பரிசியமான நடிகர் ஆனார். இவர் 2003ல் மக்கள் பத்திரிக்கையின் மிகவும் அழகானவரில் 50 பெயரில் ஒருவராக தெரிவு செய்யப்பட்டார்.

ஆரம்ப வாழ்க்கை[தொகு]

பார்ரெல் 31 மே ,1976 ஆண்டு டப்ளின், அயர்லாந்துதில் பிறந்தார். இவரது தந்தை ஷாம்ரோக் ரோவர்ஸ் கால்பந்து விளையாடுபவர் மற்றும் இவர் ஒரு சுகாதார உணவு கடை ஒன்றை நடத்துகின்றார்.[2][3] இவரது மாமா, டாமி பார்ரெல் இவர் ரோவர்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். பார்ரெல் கத்தோலிக்க மதத்தைப் பின்பற்றி வளர்க்கப்பட்டார். இவருக்கு ஈமான் ஜிஆர்[4] என்ற ஒரு மூத்த சகோதரரும மற்றும் கிளாடின்,[5] கேத்தரின்[6] என்ற இரண்டு சகோதரிகள் உண்டு.

மேற்கோள்கள்[தொகு]

  1. Otterson, Joe (6 December 2021). "Colin Farrell to Reprise Penguin Role in 'The Batman' Spinoff Series for HBO Max (EXCLUSIVE)". Variety. https://variety.com/2021/tv/news/colin-farrell-pengui-the-batman-spinoff-series-hbo-max-1235127412/. 
  2. "Colin Farrell Biography (1976–)". Filmreference.com. பார்க்கப்பட்ட நாள் 25 January 2011.
  3. "Colin's Grief for Grandfather..." Showbizireland.com. 24 May 2006. பார்க்கப்பட்ட நாள் 25 January 2011.
  4. McGoldrick, Debbie (24 June 2009). "Colin Farrell's brother marries". Irish Central. http://www.irishcentral.com/culture/entertainment/colin-farrells-brother-marries-49008596-237648361.html. 
  5. "COLIN FARRELL SHOWS HIS BROTHERLY LOVE AT "VICE" PREMIERE". Hello. பார்க்கப்பட்ட நாள் 28 July 2006.
  6. "Colin Farrell". People. பார்க்கப்பட்ட நாள் 25 January 2011.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோலின்_பார்ரெல்&oldid=3412315" இலிருந்து மீள்விக்கப்பட்டது