தேசியத் தகவல் மையம் (இந்தியா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தேசியத் தகவல் மையம்
சுருக்கம்தே.த.மை.
உருவாக்கம்1976 (48 ஆண்டுகளுக்கு முன்னர்) (1976)
வகைஎண்ணிம தகவல்
தலைமையகம்புது தில்லி
தலைமையகம்
  • இந்தியா முழுவதும்
சேவை பகுதி
இந்தியா
ஆட்சி மொழி
ஆங்கிலம் மற்றும் இந்தி
பொது இயக்குனர்
ராஜேஷ் கெரா[1]
தாய் அமைப்பு
மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
வரவு செலவு திட்டம்
11.5 பில்லியன் (US$140 மில்லியன்) [2]
பணிக்குழாம்
3,500 (ஏப்ரல் 2023)[3]
வலைத்தளம்nic.in

தேசிய தகவலியல் மையம் (National Informatics Centre) என்பது இந்திய அரசின் தகவல் தொடர்பியல் மற்றும் கணினி மயமாக்கல் அமைச்சகத்தின் மின்னணு மற்றும் தகவல் தொடர்பியல் துறையின் கீழ் செயல்படும் ஒரு அமைப்பாகும்.[4][5] இந்த அமைப்பானது விஞ்ஞான யுகத்தில் நவீன இந்தியாவை வடிவமைப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது. டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியான கணினி மயமாக்கலுக்கு இந்த அமைப்பு பேருதவி புரிகிறது. அரசாங்க வலைதளங்களை வடிவமைப்பது, அவற்றை பராமிப்பது, அரசு சேவைகளை கணினி மயமாக்குவது, அரசு அலுவலர் கணினி கணக்குகளை நிர்வகிப்பது, அரசாங்க வலைதளங்களுக்கு முகவரி ஒதுக்கீடு செய்வது போன்ற பணிகளை இவ்வமைப்பு செய்து வருகிறது.[6]

நிர்வாகம் மற்றும் அமைப்பு[தொகு]

இவ்வமைப்பு இணைய விபர மேலாளரின் கீழ் இயங்குகிறது.அவருக்கு உதவியாக இணைய பராமரிப்பு அணி செயல்படுகிறது. இணைய பராமரிப்பு அணி என்பது முதுநிலை தொழில்நுட்ப இயக்குனர்,தொழில்நுட்ப இயக்குனர்,முதன்மை மின்னணு அமைப்பு பகுத்தாய்நர்,மின்னணு அமைப்பு பகுத்தாய்நர் ஆகியோரைக் கொண்டுள்ளது.[7]

வரலாறு[தொகு]

பெருக வந்த நவீன யுகத்தின் கணினி மயமாக்கல் தேவைகளைக் கருத்தில் கொண்டு அதனைச் சமாளிக்கும் விதத்தில் இந்திய அரசாங்கத்தால் 1976ஆம் ஆண்டு இந்த அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. அன்று முதல் இன்று வரை இந்திய நாட்டின் மத்திய அரசு, 36 மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்கள்,688 மாவட்ட நிருவாகங்களின் கணினி மயமாக்கல் தேவைகளைப் பூர்த்தி செய்துள்ளது.[8]

மேற்கொள்கள்[தொகு]

  1. "Shri Rajesh Gera joins as Director General, National Informatics Centre (NIC)". Press Information Bureau. 1 June 2022. https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1830151. 
  2. Government (2019), ப. 324.
  3. Agarwal, Surabhi (28 May 2018). "NIC launches fourth data centre in Bhubaneswar" – via The Economic Times.
  4. "தேசிய தகவலியல் மையம்". http://www.nic.in/about-us. 
  5. "தேசிய தகவலியல் மையம் அமைச்சகம் மற்றும் துறை விபரம்". http://www.nic.in/contact. 
  6. "தேசிய தகவலியல் மையத்தின் பணிகள்". http://www.nic.in/services. 
  7. "தேசிய தகவலியல் மையம் நிர்வாகம் மற்றும் அமைப்பு". http://www.nic.in/contact. 
  8. "தேசிய தகவலியல் மையம் வரலாறு" இம் மூலத்தில் இருந்து 2016-05-17 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160517034548/http://www.nic.in/node/41. 

வெளி இணைப்புகள்[தொகு]