கிளவுட் அட்லசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிளவுட் அட்லஸ்-திரைப்பட சுவரொட்டி

கிளவுட் அட்லஸ் என்பது 2012 ஆம் ஆண்டு வெளிவந்த ஆங்கிலத் திரைப்படம். டேவிட் மிச்செலல்லின் கிளவுட் அட்லஸ் நாவலைத் தழுவி இது படமாக்கப்பட்டது.

கதைக் களம்[தொகு]

நமது வாழ்க்கை நம்முடையது மட்டுமன்று. கருவறை முதல் கல்லறை வரை நாம் மற்றவர்களோடு இறந்த காலத்திலும் நிகழ்காலத்திலும் பிணைக்கப்பட்டிருக்கிறோம். நம்முடைய ஒவ்வொரு கருணைச் செயலாலும் குற்றத்தாலும் நாம் நம் வருங்காலத்தைச் செதுக்குகிறோம்

என்பது இப்படத்தில் கூறப்படும் விழுமியமாகும்.

இக்கதை ஆறு வேறுபட்ட காலங்களில் ஆறு வேறுபட்ட இடங்களில் நடக்கும் ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்த நிகழ்வுகளைக் காட்டுகிறது.

வரவேற்பு[தொகு]

2012 ஆம் ஆண்டு டொரோண்டோ சர்வதேசத் திரைப்பட விழாவில் இப்படம் காட்சியிடப்பட்ட போது பார்வையாளர்கள் 10 நிமிடம் எழுந்து நின்று கைதட்டினர்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Toronto Film Festival: Cloud Atlas premiere lands an emotional standing ovation for cast, including Halle Berry, Tom Hanks". Inside Movies. 9 September 2012. பார்க்கப்பட்ட நாள் 11 September 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிளவுட்_அட்லசு&oldid=2908195" இலிருந்து மீள்விக்கப்பட்டது