இந்துஸ்தான் போட்டோ ஃபிலிம்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்துஸ்தான் புகைப்பட நிறுவனம்
வகைபொதுத்துறை நிறுவனம்
நிறுவுகை1960
தலைமையகம்உதகமண்டலம், தமிழ் நாடு
தொழில்துறைஒளிப்படவியல்
உற்பத்திகள்படல மறை, புகைப்பட தாள், வேதிப்பொருள்
இணையத்தளம்http://hpf-india.com/

இந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ் , நீலகிரி மாவட்டத்திலுள்ள ஒரே பொதுத் துறை நிறுவனமும், தெற்காசியாவில் அமைக்கப்பட்ட ஒரே பிலிம் தொழிற்சாலையுமாகும் .[1]

துவக்கம் மற்றும் செயல்பாடு[தொகு]

1960ம் ஆண்டு உதகையில் உதயமான இந்நிறுவனம் 1967ம் ஆண்டு, அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியால் தொழிற்சாலையின் முதல் உற்பத்தி துவங்கிவைக்கப்பட்டது. இதில், 5000 தொழிலாளர்கள் நேரடியாகவும், 1 லட்சம் பேர் மறைமுகமாகவும் பயனடைந்து வந்தனர். ஆலையை விரிவுப்படுத்த எண்ணிய ஒன்றிய அரசு 500 கோடி ரூபாயில் புதிய எக்சு-கதிர் தொழிற்சாலையை, உதகை இந்து நகர் பகுதியில் அமைத்து, மேலும் பல தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பை கொடுத்தது.[1]

புதிய பொருளாதாரக் கொள்கையின் தாக்கம்[தொகு]

1991ம் ஆண்டு புதிய பொருளாதாரக் கொள்கையால் அன்னிய முதலீட்டார்களும், தனியார் பிலிம் நிறுவனங்களும் இந்தியச் சந்தையில் காலடி எடுத்து வைத்ததால், ஆலை நலிவுற்றது. இத் தொழிற்சாலை 1995-இல் பெரும் நிதி நெருக்கடியைச் சந்தித்ததால், 1996-ஆம் ஆண்டு தொழிற்சாலைகளின் மறுசீரமைப்பு வாரியத்தின் கட்டுப்பாட்டில் ஒப்படைக்கப்பட்டது.[2] ஆலையில் பணிபுரிந்து வந்த 5400 தொழிலாளர்களை படிப்படி யாக குறைக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்தது. அதன் விளைவாக 2014 ஆம் ஆண்டில் , 660 தொழிலாளர்கள் மட்டுமே பணிபுரிந்து வந்தனர் .[1]

ஆலையின் வளர்ச்சி[தொகு]

உதகைமண்டலத்தின் இந்து நகரில் 500 கோடிகள் செலவில் புதிய எக்ஸ்-ரே தொழிற்சாலையை விரிவுபடுத்தியது. இதன்மூலம் உதகை தொழிற்சாலையின் வளர்ச்சிக்கு உதவ முடியும் என்று ஒன்றிய அரசு நினைத்தது.[1]

தொழிற்சாலை மூடல்[தொகு]

2013 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் நடைபெற்ற பொதுத் துறை நிறுவனங்களுக்கான மறுசீரமைப்பு வாரியக் கூட்டத்தில், இந்த ஆலையில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் விருப்ப ஓய்வு வழங்கவும், அதற்காக 2007-ஆம் ஆண்டின் ஊதிய மறுசீரமைப்பின்படி இத் தொகை வழங்கப்படுமெனவும், இதற்கான இறுதி அறிவிப்பை நீதிமன்றம் வெளியிடும் எனவும் தெரிவிக்கப்பட்டது .விருப்பு ஓய்வு திட்டத்துக்கு நிதி 2014 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளதால், ஆலை மூடப்படுவது உறுதியாகியுள்ளது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 ஆர்.டி.சிவசங்கர் (1 மார்ச் 2014). "உதகை ஹெச்.பி.எஃப். தொழிற்சாலையை மூட முடிவு- ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்". தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 2 மார்ச் 2014. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  2. "உதகை ஹெச்.பி.எஃப். தொழிற்சாலை தப்புமா?". தினமணி. 20 பிப்ரவரி 2014. பார்க்கப்பட்ட நாள் 2 மார்ச் 2014. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)