பேச்சு:மு. ரா. கந்தசாமிக் கவிராயர்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

[1] இதன்படி கச்சி ரங்கப்ப உடையார் கோவை எழுதிய கந்தசாமி கவிராயரும் மு. ரா. கந்தசாமி கவிராயரும் வெவ்வேறு நபர்கள்.--Booradleyp1 (பேச்சு) 16:15, 17 பெப்ரவரி 2014 (UTC)

ஆம் தவறு தான். ஆனால் ஓரு கந்தசாமிக் கவிராயர் உடுமலைப்பேட்டையை சார்ந்தவர், இன்னோருவர் முகவூர் சார்ந்தவர். யார் வேளாளர் புராணம் எழுதியவர் என்று தெரியவில்லை??? சிவகார்த்திகேயன் (பேச்சு) 03:59, 18 பெப்ரவரி 2014 (UTC)

இந்தக் கட்டுரை குறிப்பிடுவது முகவூரைச் சார்ந்தவரைத் தான் என நினைக்கிறேன். ஆனால் கட்டுரையில் தரப்பட்டுள்ள மேற்கோள் இணைப்புகளில் எங்கும் வேளாளர் புராணம் இவர் எழுதியதாகக் காணப்படவில்லையே?--Booradleyp1 (பேச்சு) 05:44, 18 பெப்ரவரி 2014 (UTC)

இந்தக் கட்டுரையில் இவர் வேளாளர் புராணம் எழுதியவர் என்ற குறிப்பு உள்ளது. அது முற்றிலும் தவறு. ஏனென்றால் அவர் குறித்து கடந்த ஒன்றரை வருடமாக ஆய்வு செய்து வருகிறேன். வேளாளர் புராணத்தை எழுதியவர் வீராட்சி மங்கலம் கந்தசாமி கவிராயர். சான்று (https://www.tamildigitallibrary.in/admin/assets/book/TVA_BOK_0006606_%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF_%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81.pdf) இந்த நூலின் முதல் வரியே அதுதான். மேலும் உடுமலைப் பேட்டையைச் சார்ந்த ஒரு கந்தசாமிக் கவிராயர் ஒருவர் இருப்பதாக உரையாடலில் இருக்கின்றது. அவரும் மு.ரா.கந்தசாமிக் கவிராயரும் ஒருவரே. மு.ரா.க. சில ஆண்டுகள் உடுமலைப்பேட்டை பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றியவர். அதற்கும் சான்று உள்ளது.--புதூர்காரன் (பேச்சு)