நெதர்லாந்து தேசிய காற்பந்து அணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
 நெதர்லாந்து
Shirt badge/Association crest
அடைபெயர்ஆரஞ்சு
ஆலந்து
கிளாக்வர்க் ஆரஞ்சு[1]
லா நரன்யா மெக்கானிக்கா[2]
பறக்கும் டச்சுக்காரர்கள்[3]
கூட்டமைப்புKoninklijke Nederlandse Voetbalbond (KNVB)
கண்ட கூட்டமைப்புஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் ஒன்றியம் (ஐரோப்பா)
தலைமைப் பயிற்சியாளர்லூயி வான் கால்[4]
துணைப் பயிற்சியாளர்டேனி பிளைன்டு
பாட்றிக் குளுவெர்ட்டு[4]
அணித் தலைவர்இராபின் வான் பெர்சீ
Most capsஎட்வின் வான் சார் (130)
அதிகபட்ச கோல் அடித்தவர்இராபின் வான் பெர்சீ (41)
தன்னக விளையாட்டரங்கம்ஆம்சுடர்டாம் (52,500)
தெ குயிப் (51,137)
பீஃபா குறியீடுNED
பீஃபா தரவரிசை8
அதிகபட்ச பிஃபா தரவரிசை1[5] (ஆகத்து 2011 – செப்டம்பர் 2011)
குறைந்தபட்ச பீஃபா தரவரிசை25 (மே 1998)
எலோ தரவரிசை5
அதிகபட்ச எலோ1 (மார் 1911 – மார் 1912, சூன் 1912, ஆகத்து 1920; சூன் 1978, சூன் 1988 – சூன் 1990, சூன்–செப் 1992, சூன் 2002, சூன்–செப் 2003, அக் 2005, சூன் 2008, சூலை 2010.)
குறைந்தபட்ச எலோ56 (அக்டோபர் 1954)
உள்ளக நிறங்கள்
வெளியக நிறங்கள்
முதல் பன்னாட்டுப் போட்டி
 பெல்ஜியம் 1–4 நெதர்லாந்து நெதர்லாந்து
(ஆண்ட்வெர்ப், பெல்ஜியம்; 30 ஏப்ரல் 1905)
பெரும் வெற்றி
நெதர்லாந்து நெதர்லாந்து 11–0 சான் மரீனோ 
(ஐந்தோவன், நெதர்லாந்து; 2 செப்டம்பர் 2011)
பெரும் தோல்வி
இங்கிலாந்து இங்கிலாந்து அமெச்சூர்கள் அணி 12–2 நெதர்லாந்து நெதர்லாந்து
(டார்லிங்டன், இங்கிலாந்து; 21 திசம்பர் 1907)[6]
உலகக் கோப்பை
பங்கேற்புகள்9 (முதற்தடவையாக 1934 இல்)
சிறந்த முடிவுஇரண்டாமிடம், 1974, 1978 மற்றும் 2010
ஐரோப்பிய கால்பந்தாட்டப் போட்டி
பங்கேற்புகள்9 (முதற்தடவையாக 1976 இல்)
சிறந்த முடிவுவாகையாளர்கள், 1988

நெதர்லாந்து தேசிய கால்பந்து அணி (Netherlands national football team, டச்சு: Nederlands nationaal voetbalelftal) பன்னாட்டு காற்பந்தாட்டத்தில் நெதர்லாந்து சார்பாக விளையாடும் தேசிய அணியாகும். இதனை நெதர்லாந்தில் காற்பந்தாட்டத்தை ஒழுங்குபடுத்தும் டச்சு அரச கால்பந்துச் சங்கம் (KNVB) நிர்வகித்து வருகின்றது.

இந்த அணியை ஆரஞ்சு என்றும் டச்சு பதினொருவர் (Het Nederlands Elftal) என்றும் கால்பந்து இரசிகர்கள் குறிப்பிடுகின்றனர். மிகுதியான உலகக்கோப்பை இறுதியாட்டங்களில் பங்கேற்று ஒருமுறையும் இறுதியாட்டத்தில் வெல்லாத பெருமை டச்சு அணிக்கு உள்ளது. இவர்கள் இரண்டாமவர்களாக 1974, 1978 மற்றும் 2010 உலகக்கோப்பைகளில் வந்துள்ளனர்; இந்த இறுதியாட்டங்களில் முறையே, மேற்கு செருமனி, அர்கெந்தீனா மற்றும் எசுப்பானியா வென்றனர். ஐரோப்பிய கால்பந்தாட்டப் போட்டியில் 1988இல் வெற்றி கண்டுள்ளனர். 1970களில் இவர்களது அணி தனது உச்சத்தை எட்டியிருந்தது.

மேற்சான்றுகள்[தொகு]

  1. "Holland Football Facts". Holland.com. 2013-07-25. Archived from the original on 2014-05-15. பார்க்கப்பட்ட நாள் 2013-07-25.
  2. "Imparable: la Maquina Naranja". El Nuevo Herald. 2010-06-19. Archived from the original on 2013-10-12. பார்க்கப்பட்ட நாள் 2013-07-25.
  3. "Holland's media-friendly football pros". Radio Netherlands Worldwide. 2011-12-17. Archived from the original on 2013-10-12. பார்க்கப்பட்ட நாள் 2013-07-25.
  4. 4.0 4.1 "Van Gaal bondscoach, Oranje, Blind assistent" (in Dutch). Voetbal International. 6 சூலை 2012. http://www.vi.nl/nieuws/224046/VAN-GAAL-BONDSCOACH-ORANJE-BLIND-ASSISTENT.htm. பார்த்த நாள்: 6 சூலை 2012. 
  5. The Netherlands reached the top spot in the FIFA ranking on ஆகத்து 10, 2011. FIFA will publish the ranking on ஆகத்து 24.
  6. Note that this match is not considered to be a full international by the English FA, and does not appear in the records of the England team