பயனர்:Saravanannc/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஓர்சே அருங்காட்சியகம் (பிரெஞ்சு: Musée d'Orsay) பிரான்சு நாட்டின் பாரிசு நகரில் உள்ள அருங்காட்சியகங்களில் ஒன்று. இது செயின் ஆற்றின் இடது கரையில் அமைந்துள்ளது. 1900 ஆண்டு நிறுவப்பட்ட, முன்னால் ரயில் நிலையமான ‘‘கார் தோர்சே’’(பிரெஞ்சு: Gare d'Orsay) மீது அமைக்கப்பட்டுள்ளது. இங்கு 1848 முதல் 1915 படைக்கப்பட்ட ஓவியங்கள், சிற்ப்பங்கள், அறைகலன்கள் மற்றும் புகைப்படங்கள் காட்சிக்கு வைக்கபட்டிருகின்றன.

உலகிலுள்ள உணர்வுப்பதிவுவாத(impressionist) இயக்கம் மற்றும் பிந்தய உணர்வுப்பதிவுவாத(post-impressionist) இயக்கத்தை சேர்ந்த ஓவியர்களின் படைப்புகள் இங்கு பெருமளவில் காட்சிபடுத்த பட்டுள்ளன. இவைகளுள், எடுவார்ட் மனே (Édouard Manet), எட்கார் டெகாஸ் (Edgar Degas), பியரே-ஒகஸ்டே ரெனோயிர் (Pierre-Auguste Renoir), போல் செசான்னே (Paul Cezanne) ஜார்ஜ் சூரத் (Georges Seurat), அல்பிரட் சிஸ்லே (Alfred Sisley), போல் காகுயின் (Paul Gauguin), வான் கோக் (Van Gogh) மற்றும் குளோட் மொனெட்டின் (Claude Monet) ஓவியங்களும் அடங்கும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Saravanannc/மணல்தொட்டி&oldid=1605953" இலிருந்து மீள்விக்கப்பட்டது