தூரெட் நோய்க்குறியீடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(தொரட் கூட்டறிகுறி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தூரெட் நோய்க்குறியீடு
Tourette syndrome
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள்
சிறப்புநரம்பியல்
ஐ.சி.டி.-10F95.2
ஐ.சி.டி.-9307.23
ம.இ.மெ.ம137580
நோய்களின் தரவுத்தளம்5220
மெரிசின்பிளசு000733
ஈமெடிசின்med/3107 neuro/664
ம.பா.தD005879

தூரெட் நோய்க்குறியீடு அல்லது தொரட் கூட்டறிகுறி (Tourette syndrome) என்பது குழந்தைப் பருவத்திலேயே தொடங்கும் ஒரு மரபுவழி சார்ந்த நரம்பியல் மனநல சீர்கேடு ஆகும். இது பல உடல் இயக்கம் சார்ந்த நடுக்கங்களையும் குறைந்தபட்சம் ஒரு குரல் ஒலி சார்ந்த நடுக்கத்தையும் வெளிப்படுத்தும் தன்மையுடையதாகும். இந்த நடுக்கங்கள் உடலை களைப்புறச் செய்வதாகவும் நலிவுறச் செய்வதாகவும் இருக்கும். நடுக்கச் சீர்கேடுகளின் தொகுப்பில் ஒரு பகுதியாக டூரெட்ஸ் நோய்க் குறியீடு வரையறுக்கப்படுகிறது. இதில் குறுகியகால மற்றும் நீண்டகால நடுக்கங்களும் அடங்கும்.

சொடுக்குகள் எனப்படும் அனிச்சையான திடீர்த் தசைத்துடிப்புகள் அல்லது அசைவுகள் மற்றும் திடீரென்று தம்மை அறியாமல் சொல் ஒன்றைக் கூறல் எனபன இந்த நரம்பியல் மற்றும் உளவியல் சார்ந்த கூட்டறிகுறியின் சிறப்பம்சமாகும்.

டூரெட்ஸ் நோய்க்குறியீடானது ஒரு காலத்தில் மிகவும் அரிதான, மிக வினோதமான நோய்க்குறியீடாகக் கருதப்பட்டது. இதில் வரக்கூடிய இயங்கு சொடுக்கில், பாதிக்கப்பட்டவர் தனது உடலின் ஏதேனும் ஒரு பாகத்தைத் தம்மை அறியாமல் அசைப்பார். எடுத்துக்காட்டாக, கையை நெஞ்சில் அடித்தல், முகத்தைச் சுளித்தல் போன்றன. இது பெரும்பாலும் நயமற்ற வார்த்தைகள் அல்லது முறையற்ற இழிவான தகாத சொற்கள் பேசுதல் (இழிமொழி நோயுடன்) தொடர்புடையதாகக் கருதப்பட்டது. ஆனால் டூரெட்ஸ் பாதிப்புக்குள்ளானோரில் குறைந்த அளவு மக்களிடம் மட்டுமே இந்த அறிகுறிகள் காணப்படுகின்றன.[1] டூரெட்ஸ் நோய்க்குறியீடு இப்போது ஓர் அரிதான நோய்க்குறியீடாகக் கருதப்படவில்லை. ஆனால் இதனால் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் மிதமாகவே பாதிக்கப்படுவதால் இதனை எப்போதும் சரியாக கண்டுபிடிக்க முடியாமல் போகலாம். ஆயிரம் குழந்தைகளில் ஒன்று முதல் பத்து பேர் டூரெட்ஸ் பாதிப்புடையவர்களாக இருக்கின்றனர்.[2] அந்த ஆயிரம் நபர்களில் பத்து நபர்கள் மிகவும் பொதுவான நடுக்கச் சீர்கேடுகளான கண் சிமிட்டுதல், இருமுதல், தொண்டையைக் கனைத்தல், ஒலியெழுப்பும் விதத்தில் மூச்சை உள்ளிழுத்தல் மற்றும் முகத் தசைகளை அசைத்தல் போன்ற நடுக்கச் சீர்கேடுகளைக்[3][4] கொண்டவர்களாக இருக்கலாம். டூரெட்ஸ் பாதிப்புக்குள்ளான நபர்கள் வழக்கமான ஆயுள் எதிர்பார்ப்பு மற்றும் அறிவுக்கூர்மையைக் கொண்டிருப்பர். பெரும்பாலான குழந்தைகளுக்கு நடுக்கங்களின் தீவிரத்தன்மை அவர்கள் வாலிபப் பருவத்தைக் கடக்கும் போது குறைந்துவிடுகிறது. வாலிபப் பருவத்தில் உச்ச அளவிலான டூரெட்ஸ் ஏற்படுவதும் அரிதானதாகும். டூரெட்ஸ் நோய்க்குறியீடுள்ள பிரபல நபர்கள் எல்லாத் துறைகளிலும் காணப்படுகின்றனர்.[5]

டூரெட்ஸ் ஏற்படுவதற்கான நோய்க்காரணியாக மரபு வழி மற்றும் சூழல் சார் காரணிகள் பங்கு வகிக்கின்றன. ஆனால் இது ஏற்படுவதற்கான துல்லியமான காரணங்கள் இன்னும் அறியப்படவில்லை. பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இதற்கு மருந்து உட்கொள்ளுதல் தேவையற்றதாக இருக்கிறது. நோயாளியின் ஒவ்வொரு நடுக்கத்திற்கும் திறம் வாய்ந்த மருந்தளிப்புகள் ஏதும் இல்லை. உத்தரவாதத்துடன் கூடிய சில மருந்துகளும் சிகிச்சைகளும் பயன்படுத்துவது உதவக்கூடும். பொதுவாக விளக்கமளித்தல் மற்றும் நம்பிக்கையூட்டல் ஆகியவை மட்டுமே போதுமான சிகிச்சையாக இருக்கின்றன.[6] எந்த சிகிச்சைத் திட்டத்திலும் கற்பித்தல் முக்கியப் பங்கு வகிக்கிறது.[7]

1885 ஆம் ஆண்டு டூரெட்ஸ் பாதிப்புக்குள்ளான ஒன்பது நோயாளிகள் குறித்த தகவலை வெளியிட்ட ஜியார்ஜஸ் ஆல்பர்ட் எட்வர்ட் ப்ரூட்டஸ் கில்லஸ் டெ லா டூரெட் (Georges Albert Édouard Brutus Gilles de la Tourette) (1859–1904) என்ற பிரெஞ்சு மருத்துவர் மற்றும் நரம்பியலாளரின் சார்பாக ஜீன்-மார்ட்டீன் சார்கோட் (Jean-Martin Charcot) (1825–1893) என்பவர் இந்த நோய்க்குறியீடுக்கு இந்தப் பெயரை வைத்தார்.

வகைப்பாடு[தொகு]

நடுக்கங்கள் என்பவை திடீரென, திரும்பத் திரும்ப, ஒரே மாதிரியாக, சீரற்ற முறையில் செய்யப்படும் அசைவுகள் (இயக்க நடுக்கங்கள்) மற்றும் வாயால் ஒலியெழுப்பும் செயல்கள் (குரல் ஒலி நடுக்கங்கள்) ஆகியவை ஆகும், இதில் தனித்த வெவ்வேறு உடல் தசைப் பகுதிகள் ஈடுபடுத்தப்படும்.[8] இயக்க நடுக்கங்கள் அசைவுகள் சார்ந்த நடுக்கங்களாகும். குரல் ஒலி நடுக்கங்கள் என்பவை மூக்கு, வாய் அல்லது தொண்டை வழியாக காற்றை நகர்த்துவதன் மூலம் ஏற்படும் தன்னிச்சையாக, கட்டுப்பாடின்றி உருவாக்கப்படும் சப்தங்களாகும்.

டூரெட்ஸ் நோய்க்குறியீடானது, மனம் சார்ந்த சீர்கேடுகளுக்கான நோயியல்பு மற்றும் புள்ளி விவரக் கையேட்டில் (Diagnostic and Statistical Manual of Mental Disorders) (டி.எஸ்.எம்) வகைப்படுத்தப்பட்டுள்ள பல்வேறு நடுக்கச் சீர்கேடுகளில் ஒன்றாகும். அவை, வகை (இயக்க அல்லது குரல் ஒலி நடுக்கங்கள்) மற்றும் கால அளவைச் (குறுகியகால அல்லது நீண்டகால) சார்ந்து வகைப்படுத்தப்பட்டுள்ளன. குறுகியகால நடுக்கச் சீர்கேடானது பல இயக்க நடுக்கங்கள், குரல் ஒலி நடுக்கங்கள் அல்லது இரண்டும் கொண்டதாக இருக்கிறது. இது நான்கு வாரங்கள் முதல் பன்னிரண்டு மாதங்கள் இடையிலான காலம் நீடிக்கிறது. நீண்டகால நடுக்கச் சீர்கேடானது ஒற்றை அல்லது பல இயக்கச் சீர்கேடாகவோ அல்லது குரல் ஒலி நடுக்கங்களாகவோ இருக்கிறது (ஆனால் குரல் மற்றும் ஒலி சீர்கேடுகள் இரண்டும் ஏற்படாது). இவை ஓராண்டுக்கும் மேலாக நீடித்திருக்கும்.[8] பல இயக்க நடுக்கங்களும் குறைந்த பட்சம் ஒரு குரல் ஒலி நடுக்கமும் ஒராண்டுக்கு மேல் இருந்தால், அதைக் கொண்டு டூரெட்ஸ் பாதிப்பு கண்டறியப்படுகிறது.[9] உலக சுகாதார நிறுவனம் (நோய்கள் மற்றும் அது தொடர்புடைய சுகாதாரப் பிரச்சினைகள் குறித்த சர்வதேச புள்ளி விவர வகைப்பாடு, (International Statistical Classification of Diseases and Related Health Problems) ஐ.சி.டி-10 குறியீடுகள்) மூலமாகவும் நடுக்கச் சீர்கேடுகள் வரையறுக்கப்படுகின்றன.[10]

டூரெட்ஸ் பாதிப்பானது, நடுக்கச் சீர்கேடுகளின்[11] தொகுப்பின் மிகவும் தீவிர வெளிப்பாடாக இருந்த போதிலும், பெரும்பாலான நிகழ்வுகள் மிதமானவையாகவே உள்ளன.[12] டூரெட்ஸ் பாதிப்புக்குள்ளான மக்களிடையே தீவிரத்தன்மையின் அறிகுறிகள் மாறுபடுகின்றன. மேலும் மிதமான அளவில் பாதிக்கப்பட்ட நோயாளிகளில் இப்பாதிப்பு இருப்பதே கண்டறியப்படாமலும் இருக்கலாம்.[8]

பண்பியல்புகள்[தொகு]

நடுக்கங்கள் என்பவை "சாதாரண இயக்க நடவடிக்கைகளின் பின்னணியில் விட்டு விட்டு திடீரென்று ஒழுங்கற்று நிகழ்கின்ற மற்றும் எதிர்பாராதவிதமாக நிகழ்கின்ற" அசைவுகள் அல்லது ஒலிகள் ஆகும்.[13] இவை "சாதாரண நடவடிக்கைகள் தவறாக நடைபெறுவது" போன்ற தோற்றத்தைக் கொண்டிருக்கும்.[14] டூரெட்ஸ் பாதிப்புடன் தொடர்புடைய நடுக்கங்கள் அதன் எண்ணிக்கை, அடுத்தடுத்து நிகழும் நிலை, தீவிரத்தன்மை மற்றும் அவை உடலில் ஏற்படும் இடங்கள் ஆகியவற்றில் மாறுபடுகின்றன. நடுக்கங்களின் தீவிரத்தன்மை மற்றும் அடுத்தடுத்து நிகழும் நிலை அதிகரித்தலும் குறைதலுமான களைப்புறு நிலை மற்றும் நலிவுறு நிலை ஆகியவை ஒவ்வொரு நபருக்கும் மாறுபட்ட விதத்தில் ஏற்படுகின்றன. பிணியின் அதீத தாக்கத்திலும் கூட நடுக்கங்கள் ஏற்படும். இது நபருக்கு நபர் மாறுபடும்.[8]

இழிமொழி நோய் (சமூகத்தில் ஆட்சேபணைக்குரிய அல்லது விலக்கப்பட்ட வார்த்தைகள் அல்லது வாக்கியங்களை தன்னிச்சையாக சொல்லுதல்) என்பது டூரெட்ஸ் பாதிப்படைந்தவர்களுக்கான அறிகுறியாக மிகவும் பிரபலமாக கருதப்பட்டது. ஆனால் டூரெட்ஸ் பாதிப்பின் நோய் அறுதியிடலுக்கு இந்த அறிகுறி இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. மேலும் டூரெட்ஸ் நோயாளிகளில் சுமார் 10 சதவீதத்தினரே இந்த அறிகுறியைக் கொண்டுள்ளனர்.[15] சொல்வதைச் சொல்லல் (Echolalia) (மற்றவர்கள் சொல்வதை திரும்பச் சொல்லுதல்) மற்றும் சொல்லியதை திரும்பத் திரும்பக்கூறல் (palilalia) (தான் சொல்லியதையே மீண்டும் மீண்டும் சொல்லுதல்) ஆகிய நிலைகள் டூரெட்ஸ் நோயாளிகளில் சிலருக்கு ஏற்படுகின்றன,[8] அதே சமயம் மிகவும் பொதுவான ஆரம்ப இயக்க மற்றும் குரல் சார்ந்த நடுக்கங்கள் முறையே கண் சிமிட்டுதல் மற்றும் தொண்டையைக் கனைத்தல் ஆகியவை ஆகும்.[16]

இயக்க நடுக்கங்களுக்கான எடுத்துக்காட்டுகள்

பிற அசைவுச் சீர்கேடுகளின் (எடுத்துக்காட்டாக கொரிய வலிப்பு (choreas), டைஸ்டோனியா(dystonias), தசைச் சொடுக்கு (myoclonus) மற்றும் அசைவிழப்பு (dyskinesias)) அசாதாரணமான அசைவுகளுக்கு மாறாக டூரெட்ஸ் பாதிப்பின் நடுக்கங்கள் ஒரே மாதிரியானவையாகவும், தற்காலிகமாக ஒடுக்கக்கூடியதாகவும், சீரற்றதாகவும் பெரும்பாலும் முன்னதாக ஓர் உந்தும் தாக்க அறிகுறியை ஏற்படுத்தக்கூடியதாகவும் இருக்கின்றன.[17] தும்மல் வரும்போது அல்லது அரிப்பு ஏற்படும் போது சொறிய வேண்டும் என்று தோன்றுவது போலவே டூரெட்ஸ் பாதிப்புக்குள்ளான பெரும்பாலானோர் நடுக்கம் ஏற்படும் சற்று முன்னர் அதற்கான உந்தல் இருப்பது குறித்து உணரக்கூடும். இந்த பாதிப்பு உள்ளவர்கள், பதற்றம் மற்றும் அழுத்தம் அல்லது ஆற்றல் அதிகரிக்கும் நிலையில் நடுக்கச் செயலைச் செய்ய வேண்டும் என்ற உந்தல் உருவாவதாக விவரிக்கின்றனர். அந்த உணர்வு சரியாகும் வரை அல்லது அவர்கள் இயல்பாக உணரும் வரையிலும் அதைச் செய்தே ஆக வேண்டும் என்பது போல், விழிப்புணர்வுடனேயே இவற்றை வெளியேற்ற வேண்டும் என முடிவெடுக்கின்றனர்[18][19].[19][20] முன்னெச்சரிக்கை உணர்ச்சியின் எடுத்துக்காட்டுகளாக தொண்டையில் ஏதோவொன்று இருப்பது போன்ற உணர்வு அல்லது தோள்களில் குறிப்பிட்ட இடங்களில் அசெளகரியம் ஏற்படும் உணர்வு போன்றவற்றைக் கூறலாம். இவை தொண்டையை தூய்மைப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்திற்கும் தோள்களை அசைக்கும் எண்ணத்திற்கும் வழிவகுக்கின்றன. நமைச்சல் ஏற்படும் போது சொறிந்து கொள்வதால் ஏற்படும் உணர்வு போலவே இந்த உண்மையான நடுக்கங்கள் இறுக்கம் அல்லது உணர்வைச் சரிசெய்வதாகத் தோன்றக்கூடும். கண்களில் ஏற்படும் அசெளகரியமான உணர்வைச் சரி செய்வதற்காக கண்களைச் சிமிட்டுதல் மற்றொரு எடுத்துக்காட்டு ஆகும். நடுக்கங்கள், அசைவுகள் அல்லது ஒலி எழுப்புவதன் மூலமாக வெளிப்படுத்துவதற்கு முன்பு ஏற்படும் இந்த உந்தல்களும் உணர்வுகளும் "முன்னெச்சரிக்கை உணர்வு நிகழ்வு" அல்லது முன்னெச்சரிக்கை உந்தல்கள் எனக் குறிப்பிடப்படுகின்றன. நடுக்கங்களுக்கு முன்பு ஏற்படும் இந்த உணர்வுகளின் காரணமாக இந்த நடுக்கங்கள் தன்னிச்சையாக நடைபெறுபவை என்று குறிப்பிடப்படுவதற்கு மாறாக பகுதியளவு தன்னிச்சையாக அல்லது "தன்னிச்சையற்று " நடைபெறுபவை என விவரிக்கப்படுகின்றன. பாதிக்கப்பட்டவர்கள் தேவையற்ற முன்னெச்சரிக்கை உணர்வுகளுக்கு அவர்கள் விருப்பத்தின் பெயரில் , கட்டுப்படுத்தும் விதமாகப் புரியும் பிரதிவினையாக இவை நிகழலாம்.[15] டூரெட்ஸ் நோய்க்குறியீட்டின் அறுதியிடல் செயலில் நடுக்கங்கள் கருத்தில் கொள்ளப்படுவதில்லை எனினும், இந்தப் பாதிப்பின் நடுக்கங்களைப் பற்றிய வெளியீடுகளில் உள்ள விளக்கங்களில், நடுக்கங்கள் பிரதான அறிகுறிகள் எனக் கூறப்படுகிறது.[21][22]

நடுக்கங்களால் பாதிக்கப்படும் நபர்கள் அவர்களின் நடுக்கங்களை சில நேரங்களில் குறிப்பிட்ட நேரத்திற்கு அடக்கி வைத்திருக்க முடியும் எனினும், அதன் பிறகு இது பெரும்பாலும் திடீரென்று நடுக்கங்கள் அதிகமாக ஏற்பட வழிவகுக்கிறது.[6] டூரெட்ஸ் பாதிப்புக்குள்ளான நபர்கள் அவர்களுடைய அறிகுறிகளை வெளிப்படுத்துவதற்கு ஒதுக்குப்புறமான பகுதிகளைத் தேடலாம் அல்லது பள்ளியில் அல்லது பணிபுரியும் இடங்களில் அவர்கள் அதனை அடக்கி வைத்த நேரத்திற்குப் பிறகு நடுக்கங்கள் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிக்கலாம்.[14] டூரெட்ஸ் பாதிப்புக்குள்ளான சில நபர்களுக்கு முன்னெச்சரிக்கை உணர்வுகள் எதுவும் தோன்றாமல் இருக்கலாம். வயது வந்தோரைக் காட்டிலும் குழந்தைகளுக்கு, நடுக்கங்கள் தொடர்பான முன்னெச்சரிக்கை உணர்வுகளைப் பற்றிய விழிப்புணர்வு குறைவாகவே இருக்கும். அவர்கள் வளர வளர அவர்களது விழிப்புணர்வு அதிகரிக்கும்.[13] அவர்கள் முன்னெச்சரிக்கை உணர்வுகளைப் பற்றி அறிவதற்கு முன்பே பல ஆண்டுகளாக அவர்களுக்கு நடுக்கங்கள் இருந்திருக்கலாம். குழந்தைகள் மருத்துவ மனைகளில் இருக்கும் போது நடுக்கங்களை அடக்கக் கூடும். அதனால் அவர்களுக்குத் தெரியாதபடி கண்காணிக்கப்பட வேண்டிய அவசியம் ஏற்படலாம்.[23] நடுக்கங்களை அடக்கும் திறனானது நபருக்கு நபர் மாறுபடும். மேலும் இந்த திறனானது குழந்தைகளைக் காட்டிலும் வயது வந்தோரிடம் மிகவும் மேம்பட்டு இருக்கலாம்.

டூரெட்ஸ் நோய்க்குறியீடின் "வழக்கமான" நிகழ்வாக எதையும் குறிப்பிட முடியாத போதும்,[6] இந்தப் பாதிப்பானது, தொடங்கிய வயது மற்றும் அறிகுறிகளின் தீவிரத்தன்மையின் வரலாறு போன்றவற்றைப் பொறுத்து நம்பத்தகுந்த ஒரு குறிப்பிட்ட கால அளவு நீடிக்கிறது. நடுக்கங்கள் பதினெட்டு வயது வரையிலும் ஏற்படலாம் ஆனால் இப்பாதிப்பானது ஐந்திலிருந்து ஏழு வரையிலான வயதிலேயே தொடங்குகிறது.[8] யேல் குழந்தைகள் ஆய்வு மையத்தைச்[24] (Yale Child Study Center) சேர்ந்த லெக்மேன் (Leckman) மற்றும் பலர் இணைந்து 1998 ஆம் ஆண்டு வெளியிட்ட ஆய்வில், எட்டு முதல் பன்னிரண்டு வயதுக்கு இடையிலுள்ள (சராசரியாக பத்து வயது) நபர்களுக்கு நடுக்கங்களின் தீவிரத்தன்மை மிகவும் அதிகம் இருப்பதாக வெளியிடப்பட்டிருந்தது. மேலும் பெரும்பாலான நோயாளிகளுக்கு வாலிபப் பருவத்தைக் கடக்கும் போது நடுக்கங்கள் நிதானமாகக் குறைந்து விடுவதாகவும் வெளியிடப்பட்டிருந்தது.[20] கண் சிமிட்டுதல், முக அசைவுகள், இருமல் மற்றும் தொண்டையைக் கனைத்தல் போன்றவை முதலில் ஏற்படும் பொதுவான நடுக்கங்கள் ஆகும். ஆரம்ப நடுக்கங்கள், தலை, கழுத்து மற்றும் முகப் பகுதிகள் போன்ற அதிக தசைகள் அடங்கிய பகுதிகளான மத்திய உடல் மண்டலங்களில் அதிகமாக ஏற்படுகின்றன.[6] இது பிற சீர்கேடுகளில் (பாலுணர்வு கிளர்வசைவுகள் (இனப்பெருக்க உறுப்பை அசைத்து இன்பம் அடையும் பழக்கம்) மற்றும் மன இறுக்கச் சீர்கேடுகளின் ஒரே மாதிரியான வெளிப்பாடுகள் போன்றவை) காணப்படும் ஒரே மாதிரியான அசைவுகளுக்கு முற்றிலும் மாறானவையாகும். பொதுவாக இந்த ஒரே மாதிரியான அசைவுகள் குறைந்த வயதுகளில் ஏற்படும், மிகவும் சமச்சீரானதாக, ஒரு ஒழுங்கிலும் இருபுறம் இருக்கும் இயல்புடையதாகவும் இருக்கின்றன. மேலும் அதில் உடலின் வெளி உறுப்புகள் ஈடுபடுத்தப்படும் (எ.கா., கைகளை அசைத்தல்).[25] இந்தப் பாதிப்பின் ஆரம்ப கட்டங்களில் தோன்றும் நடுக்கங்கள், பல சந்தர்ப்பங்களில் ஒவ்வாமைகள், ஆஸ்த்துமா மற்றும் பார்வைக் குறைபாடுகள் போன்ற மற்ற நிலைகளுக்கான அறிகுறிகளாகக் குழப்பிக்கொள்ளப்படுகின்றன. குழந்தை மருத்துவர்கள், ஒவ்வாமையியல் மருத்துவர்கள் மற்றும் கண் மருத்துவர்கள் ஆகியோரே பொதுவாக குழந்தைகளுக்கு நடுக்கங்கள் இருப்பதைக் கவனிக்கிறார்கள்.[8]

மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெறுவதற்கு பரிந்துரைக்கப்படும் அளவிற்கு அறிகுறிகள் தென்படும் நோயாளிகளில், மனதை அலைக்கழிக்கும், நிர்ப்பந்திக்கும் சீர்கேடு (obsessive–compulsive disorder) (ஒ.சி.டி) மற்றும் கவனப் பற்றாக்குறை அதியியக்கச் சீர்கேடு (attention-deficit hyperactivity disorder) (எ.டி.எச்.டி) போன்ற பாதிப்புகள் பெரும்பாலும் டூரெட்ஸ் பாதிப்புடன் தொடர்புடையதாக இருக்கின்றன.[20] டூரெட்ஸ் பாதிப்புக்குள்ளான அனைவரும் எ.டி.எச்.டி அல்லது ஒ.சி.டி அல்லது மற்ற ஒரே நேரத்தில் இரு நோய்கள் கொண்ட நிலைகள் (டூரெட்ஸ் தவிர்த்து அதே நேரத்தில் கண்டறியப்படும் மற்ற நோய் நிலைகள்) போன்றவற்றால் பாதிக்கப்பட்டிருப்பதில்லை. எனினும் சிகிச்சை பெற்றுவரும் மக்களில் அதிக சதவீதத்திலான நோயாளிகளுக்கு எ.டி.எச்.டி பாதிப்பு இருக்கிறது.[20][26] டூரெட்ஸ் பாதிப்புக்குள்ளான நோயாளிகளின் பத்து வருட அறிக்கைகளை ஆய்வு செய்ததில், அதில் சுமார் 40 சதவீத நோயாளிகள் "டி.எஸ் மட்டும்" அல்லது "வெறும் டி.எஸ்" பாதிப்பு மட்டும் கொண்டவர்களாக இருப்பதாகத் தெரியவந்ததாக ஓர் ஆய்வாளர் கூறியிருக்கிறார். மேலும் எ.டி.எச்.டி, ஒ.சி.டி மற்றும் மற்ற சீர்கேடுகள் ஏதும் இல்லாமல் டூரெட் நோய்க்குறியீடு மட்டும் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.[27][28] மற்றொரு ஆய்வாளர், நடுக்கச் சீர்கேடுகளால் பாதிக்கப்பட்ட 656 நோயாளிகளில் 57 சதவீதத்தினர் சிக்கலற்ற நடுக்கங்களைக் கொண்டிருந்தனர் எனத் தெரிவித்தார். அதே சமயம் அதில் 43 சதவீதத்தினர் நடுக்கங்களுடன் கூடுதலாக மற்ற ஏதேனும் ஒரு நோயையும் கொண்டிருந்தனர் என்றார்.[14] நடுக்கங்களுடன் கூடுதலாக குறிப்பிடத்தக்க பிற நோய் நிலைகளையும் கொண்டிருக்கும் நோயாளிகளை விவரிப்பதற்கு "முதிர்ச்சியடைந்த டூரெட்ஸ் " (Full-blown Tourette's) என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது.[14]

காரணங்கள்[தொகு]

டூரெட்ஸ் பாதிப்பு ஏற்படுவதற்கான துல்லியமான காரணம் கண்டறியப்படவில்லை. ஆனால் மரபு வழி மற்றும் சூழல் சார் காரணிகள் இதில் தொடர்புடையதாக இருப்பது நன்கு நிரூபிக்கப்பட்டுள்ளது.[29] மிகத் தீவிரமான டூரெட்ஸ் பாதிப்புக்குள்ளானவர்கள் பெரும்பாலும் மரபு வழி சார்ந்தே பாதிக்கப்படுகின்றனர் என மரபியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இருந்த போதும் மரபு வழியில் எந்த விதத்தில் பாதிக்கப்படுகிறார்கள் என்பது துல்லியமாக கண்டறியப்படவில்லை.[30] மேலும் இது தொடர்பான எந்த மரபணுவும் கண்டறியப்படவில்லை.[6] சில நோயாளிகளின் டூரெட்ஸ் தொடர்ச்சியற்றதாக இருக்கிறது. அதாவது அது அவர்களின் பெற்றோர்களிடம் இருந்து மரபு வழியில் வராததாக இருக்கிறது.[31] பிற நோயாளிகளில், நடுக்கங்களானவை டூரெட்ஸ் தவிர்த்த மற்ற சீர்கேடுகளுடன் தொடர்புடையதாக இருக்கும். இந்த நிகழ்வு டூரெட்டிசம் (tourettism) என அறியப்படுகிறது.[32]

மூளையின் மத்திய பகுதியில் தள முடிச்சுக்கள் இருக்கின்றன. குளோபஸ் பல்லிடஸ், மூளை நரம்பு முடிச்சு, கரும்பொருள் மற்றும் சிறுமூளை ஆகியவை அருகில் உள்ள அதற்கு தொடர்புடைய அமைப்புகளாகும்.

டூரெட் நோய்க்குறியீடினால் பாதிக்கப்பட்ட மூளைக் கட்டமைப்புகள்

டூரெட்ஸ் பாதிப்புக்குள்ளான நபர் அவருடைய குழந்தைக்கு அந்த மரபணுக்களை கடத்துவதற்கு சுமார் 50 சதவீதம் வாய்ப்புள்ளது. அனால் டூரெட்ஸ் என்பது மாறுபட்ட வெளிப்பாடுகள் மற்றும் முற்று பெறாத ஊடுருவல் ஆகியவை கொண்ட நிலையாக இருக்கிறது.[33] ஆகையால் இவ்வாறு மரபுவழி பாதிப்புக்கு உட்படும் தன்மையை மரபு ரீதியாகக் கொண்டிருக்கும் அனைவருக்கும் அறிகுறிகள் தோன்றுவதில்லை. சொல்லப்போனால் நெருங்கிய குடும்ப உறுப்பினர்களிடையேயும் கூட அறிகுறிகளின் தீவிரத்தன்மை வேறுபடலாம் அல்லது அறிகுறிகள் எதுவும் தோன்றாமலும் இருக்கலாம். மரபணுக்களானது டூரெட்ஸ் பாதிப்பை மிதமான நடுக்கச் சீர்கேடாகவோ (குறுகியகால அல்லது நீண்டகால நடுக்கங்கள்) அல்லது நடுக்கங்களற்ற மனதை அலைக்கழிக்கும் நிர்ப்பந்திக்கும் அறிகுறிகள் மூலமாகவோ வெளிப்படுத்தக்கூடும். மரபுவழியின் காரணமாக இப்பாதிப்புக்குள்ளான சிறுவர் சிறுமிகளில் மிகவும் குறைவான அளவினருக்கு மட்டுமே மருத்துவ கவனிப்பு தேவைப்படும் அளவிற்கு தீவிர அறிகுறிகள் வெளிப்படுகின்றன.[34] மரபுவழியில் ஏற்படும் பாதிப்புக்கு உட்படும் தன்மை கொண்டிருப்பதில், பாலினம் ஒரு பங்குவகிப்பதாகத் தெரிகிறது. பெண்களைக் காட்டிலும் ஆண்கள் அதிகமாக நடுக்கங்களை வெளிப்படுத்துகின்றனர்.[23]

மரபுவழி சாராத, சூழல் சார்ந்த, தொற்றுக்கள் அல்லது சமூக உளப்பிணி காரணிகள் போன்றவை டூரெட்ஸ் பாதிப்பு ஏற்படுவதற்கு காரணமாக இல்லாவிட்டாலும் அதன் தீவிரத்தன்மையில் முக்கியப் பங்கு வகிக்கலாம்.[6] தன்னுடல் தாக்குமை செயல்பாடுகள் நடுக்கம் தொடங்குவதைப் பாதிக்கக்கூடும் மற்றும் சில நோயாளிகளுக்கு நோய் பாதிப்பை மோசமாக்கலாம். 1998 ஆம் ஆண்டில் அமெரிக்காவைச் சேர்ந்த மன ஆரோக்கியத்துக்கான தேசிய நிறுவனத்தைச் (National Institute of Mental Health) சேர்ந்த ஒரு குழு கருதுகோள் ஒன்றை முன்மொழிந்தது. மனதை அலைக்கழிக்கும் நிர்ப்பந்திக்கும் சீர்கேடு (ஒ.சி.டி) மற்றும் நடுக்கச் சீர்கேடுகள் போன்றவை ஸ்ட்ரெப்டோகோக்கைக்குப் பிந்தைய தன்னுடல் தாக்குமை செயல்பாட்டின் விளைவாக குழந்தைகளுக்கு ஏற்படக்கூடும் என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.[35] அந்தக் கருதுகோளின் படி, வகைப்படுத்தப்பட்ட ஐந்து அறுதியிடல் பண்பளவைகளுக்கு ஏற்ற குழந்தைகள், ஸ்ட்ரெப்டோகோக்கல் தொற்றுக்களுடன் தொடர்புடைய குழந்தைகளுக்கான தன்னுடன் தாக்குமை நரம்பிய மனநலச் சீர்கேடுகள் (Pediatric Autoimmune Neuropsychiatric Disorders Associated with Streptococcal infections) (PANDAS) கொண்டிருப்பவர்களாக வகைப்படுத்தப்பட்டனர்.[36] இந்த தொடர் கருதுகோளே மருத்துவமனை மற்றும் பரிசோதனைக் கூட ஆராய்ச்சியின் மையமாக உள்ளது, ஆனால் இது இன்னும் நிரூபிக்கப்படவில்லை.[37][38]

மரபு வழி சார்ந்த டூரெட்ஸ் பாதிப்புக்கு உட்படும் தன்மையை பாதிக்கும் துல்லியமான இயங்கு முறை இன்னும் கண்டறியப்படவில்லை. இதற்கான துல்லியமான நோய்க்காரணமும் அறியப்படாததாகவே இருக்கிறது. மூளை நரம்பு முடிச்சு, தள முடிச்சுக்கள் மற்றும் முன் புறணி போன்ற மேற்பட்டை மற்றும் புறணியடி மண்டலங்களில் ஏற்படும் செயல் பிறழ்ச்சியின் விளைவாக நடுக்கங்கள் ஏற்படுவதாக நம்பப்படுகிறது.[29] நரம்பிய உடற்கூறியல் மாதிரிகள், மூளையின் புறணி மற்றும் புறணியடியை இணைக்கும் சுற்றுக்களில் உள்ள பாதிப்பைக் காண்பிக்கின்றன.[6] இயல்நிலை வரைவு நுட்பங்கள், தள முடிச்சுக்கள் மற்றும் முன் புறணியில் பாதிப்பைக் காண்பிக்கின்றன.[39]

OCD இன் சில வகைகளை மரபியல் ரீதியாக டூரெட்ஸ் பாதிப்புடன் தொடர்புப்படுத்தலாம்.[20][40] ஒ.சி.டியின் ஒரு உப வகையானது நோய்க்காரணி ரீதியாக டூரெட்ஸ் உடன் தொடர்புடையதாக இருப்பதாகக் கருதப்படுகிறது. மேலும் காரணிகளின் மாறுபட்ட வெளிப்பாடுகள் நடுக்கங்களின் வெளிப்பாடுகளுக்கு முக்கியமானவையாக இருக்கலாம்.[41] எனினும் டூரெட் நோய்க்குறிக்கும் எ.டி.எச்.டி க்கும் மரபு ரீதியான தொடர்பு முழுமையாக இன்னும் கண்டறியப்படவில்லை.[28]

அறுதியிடல்[தொகு]

மனம் சார்ந்த சீர்கேடுகளுக்கான அறுதியிடல் மற்றும் புள்ளி விவரக் கையேட்டின் (டி.எஸ்.எம்-IV-டி.ஆர்) திருத்தப்பட்ட நான்காவது பதிப்பின் படி, ஓராண்டு காலத்தில் தொடர்ந்து மூன்று மாதங்கள் நடுக்கங்கள் ஏதும் இல்லாமல் இருப்பதில்லை என்றபட்சத்தில், பல இயக்க மற்றும் ஒன்று அல்லது பல குரல் சார்ந்த நடுக்கங்கள் (இவை ஒரே நேரத்தில் ஏற்பட்டிருக்க வேண்டும் என்பதில்லை) ஏற்பட்டால், அந்த நபருக்கு டூரெட்ஸ் பாதிப்பு இருப்பதாக அறுதியிடலாம். இதற்கு முந்தைய டி.எஸ்.எம்-IV கையேட்டில் "சமூகம், பணிபுரியும் இடங்கள் அல்லது மற்ற முக்கிய பகுதிகளில் குறிப்பிடத்தக்க இடர்பாடு அல்லது குறிப்பிடத்தக்க வலுக்குறை" ஏற்படுவதும் சேர்க்கப்பட்டிருந்தது. ஆனால் இது மிகவும் சமீபத்திய கையேட்டில் நீக்கப்பட்டுவிட்டது. டூரெட்ஸ் பாதிப்புக்குள்ளான நோயாளிகளைச் சோதனை செய்யும்பொழுது மருத்துவர்கள் மற்ற அளவைகள் ஏற்படுவதைக் கண்டனர் ஆனால் குறிப்பிடத்தக்க இடர்பாடோ அல்லது வலுக்குறையோ ஏற்படவில்லை அதன் அடிப்படையிலேயே இது நீக்கப்பட்டது.[42] பாதிப்படைந்தவருக்கு 18 வயதுக்கு முன்பே நிச்சயம் இந்த பாதிப்பு துவங்கியிருக்கும். மேலும் இது "ஏதேனும் ஒரு பொருளினால் அல்லது பொது மருத்துவ நிலையினால் உருவான நேரடி உடலியக்கவியல் பாதிப்புகளுக்கு" உரியதாகக் கருதப்பட முடியாது.[9] ஆகவே டூரெட்ஸ் பாதிப்புக்கான அறுதியிடலுக்கான அவதானிப்புகளின் போது, மன இறுக்கம் அல்லது டூரெட்டிசம் நிலை உருவாவதற்கான காரணங்களால் உருவாகும் நடுக்கங்கள் அல்லது நடுக்கங்கள் போன்ற அசைவுகள் உள்ளிட்ட பிற மருத்துவ நிலைகளைக் கருத்தில் கொள்ளக்கூடாது.

வார்ப்புரு:Clips of tics டூரெட்ஸ் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறதா என்பதைக் கண்டறியும் முறைகளில் பயன்படுத்தப்படும் குறிப்பிட்ட மருத்துவ அல்லது திரையிடல் சோதனைகள் எதுவும் ஏதுமில்லை.[20] பெரும்பாலும் இப்பாதிப்பானது அடிக்கடி தவறாக அறுதியிடப்படுகிறது அல்லது குறைவாக அறுதியிடப்படுகிறது. இதன் தீவிரத்தன்மையானது மிதமான (பெரும்பாலான நோயாளிகளில்) அல்லது நடுநிலையான நிலையில் இருந்து தீவிரமான (இது அரிதானது ஆனால் மிகவும் பரவலாக அறியப்படும் மற்றும் வெளிப்படுத்தப்படும் நிலை) நிலை வரையில் பல் வேறு அளவுகளில் இருப்பது இதற்கு ஒரு பகுதி காரணமாகும்.[24] இருமல், கண் சிமிட்டுதல் மற்றும் ஆஸ்த்துமாவிலுள்ளதைப் போன்ற நடுக்கங்கள் போன்றவை தவறாக அறுதியிடப்பகின்றன.[15]

இதற்கான நோயறிதல் பாதிக்கப்பட்டவருக்கு ஏற்படும் அறிகுறிகள் மற்றும் குடும்ப வரலாறு ஆகியவற்றைக் கண்காணிப்பதைச் சார்ந்து அமைகிறது.[15] மேலும் அதற்கு அடுத்து நடுக்கச் சீர்கேடுகளுக்கான இரண்டாம் நிலை காரணங்கள் புறக்கணிக்கப்படுகின்றன.[34] குடும்பத்தில் ஏற்கனவே யாருக்கேனும் நடுக்கங்கள் அல்லது மனதை அலைக்கழிக்கும் சீர்கேடுகள் இருந்திருக்கக்கூடிய குடும்ப வரலாற்றைக் கொண்ட நோயாளிகளுக்கு, வழக்கமான நோய்த் தொடக்கம் ஏற்பட்டால், அவர்களுக்கு அடிப்படையான உடல் சோதனை மற்றும் நரம்பு தொடர்பான பரிசோதனைகளே அறுதியிடலுக்குப் போதுமானதாக இருக்கலாம்.[11]

இப்பாதிப்புக்குள்ளாகி இருக்கும் அதே நேரத்தில் மற்ற நோய்கள் இருக்கும் நிலை (எ.டி.எச்.டி அல்லது ஒ.சி.டி போன்றவை) இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.[15] ஆனால் மற்ற பாதிப்புகளும் இருப்பதால் நடுங்கங்கள் ஏற்படலாம் என மருத்துவர் கருதினால் அதற்கான சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு அவற்றைப் புறக்கணிக்க வேண்டியது அவசியம். எடுத்துக்காட்டாக நடுக்கங்கள் மற்றும் வலிப்புத்தாக்கம் ஆகியவற்றுக்கு இடையில் குழப்பங்கள் ஏற்படும் சூழல்களில் இ.இ.ஜி சோதனைகள் மேற்கொள்வதன் மூலமாகவோ அல்லது எம்.ஆர்.ஐ நிலைகளைக் காட்டும் அறிகுறிகள் உள்ளனவா எனச் சோதிப்பதன் மூலமாகவோ மூளையின் அசாதாரணத் தன்மைகளைப் புறக்கணிக்கலாம்.[43] நடுக்கங்களுக்குக் காரணமான தைராய்டு சுரப்புக் குறையைப் புறக்கணிப்பதற்காக டி.எஸ்.எச் நிலைகளை அளவிடலாம். மூளை இயல்நிலை வரைவு பரிசோதனைகள் பொதுவாக போதுமானதாக இருப்பதில்லை.[43] பதின்ம வயதினர்கள் மற்றும் வயது வந்தோர்க்கு நடுக்கங்கள் மற்றும் மற்ற நடத்தை சார்ந்த அறிகுறிகள் திடீரென ஏற்பட்டால், கொகைன் மற்றும் மற்ற வினையூக்கிகள் பயன்படுத்தியிருக்கிறார்களா என்பதை அறிவதற்கான சிறுநீர் பரிசோதனை தேவைப்படலாம். குடும்ப வரலாறைப் பார்க்கும் போது அதில் யாருக்கேனும் கல்லீரல் கோளாறுகள் இருந்தால் குருதி நிணநீரில் தாமிரம் மற்றும் செருலோபிளாஸ்மின் அளவுகளை சோதனை செய்வதன் மூலமாக வில்சன்'ஸ் நோய் இருக்கிறதா என்பதை சோதித்தறிந்து அதைப் புறக்கணிக்கலாம்.[11] இப்பாதிப்படைந்த பெரும்பாலான நோயாளிகள் நடுக்கங்கள் ஏற்படுவதன் வரலாற்றினைக் கண்காணிப்பதன் அடிப்படையிலே கண்டறியப்படுகின்றனர்.[6][34]

நடுக்கங்கள் ஏற்படுவதற்கான இரண்டாம் நிலை காரணங்கள் (மரபு வழி டூரெட் நோய்க்குறியீடுடன் தொடர்பில்லாதவை) பொதுவாக டூரெட்டிசம் என்று குறிப்பிடப்படுகின்றன.[32] டைஸ்டோனியா, கொரியாஸ், மற்ற மரபுவழி நிலைகள் மற்றும் நடுக்கங்கள் ஏற்படுவதற்கான இரண்டாம் நிலை காரணங்கள் ஆகியவற்றை, டூரெட் நோய்க்குறியீடுக்கான மாறுபட்ட நோயறிதல் முறைகளின் மூலம் புறக்கணிக்க வேண்டும்.[11] வளர்ச்சி சார் சீர்கேடுகள், மன இறுக்க வகை சீர்கேடுகள்[44] மற்றும் ஒத்த தன்மையுள்ள அசைவு சீர்கேடு,[45][46] சிடன்ஹாம்'ஸ் கொரியா, தான்தோன்று டைஸ்டோனியா; மற்றும் ஹண்டிங்க்டன்'ஸ் நோய், நியூரோஅகண்டோசைட்டோசிஸ், ஹால்லர்வோர்டன்-ஸ்பார்ட்ஸ் நோய்க்குறியீடு, டுசென்னெ தசைத் திசு இறப்பு, வில்சன்'ஸ் நோய் மற்றும் முகிழுருவான திசு தடிமனாதல் போன்ற மரபு வழி சார்ந்த நோய் நிலைகள் ஆகியவை உள்ளிட்ட நிலைகள் அனைத்துமே நடுக்கங்கள் அல்லது ஒத்த தன்மையுள்ள அசைவுகளை வெளிப்படுத்துபவை ஆகும். டவுன் நோய்க்குறியீடு, கிளைன்ஃபெல்ட்டர்'ஸ் நோய்க்குறியீடு, எக்ஸ்.ஒய்.ஒய் நோய்க்குறியீடு மற்றும் உடையக்கூடிய X நோய்க்குறியீடு போன்ற மரபுத்திரி சீர்கேடுகள் உள்ளிட்டவை சாத்தியமுள்ள பிற பாதிப்புகள் ஆகும். மருந்துத் தூண்டலால் ஏற்படும் நடுக்கங்கள், தலையில் அடிபடுதல், மூளையழற்சி, வலிப்புத்தாக்கம் மற்றும் கார்பன் மோனாக்சைடு நச்சேற்றம் உள்ளிட்டவை நடுக்கங்களின் பெறப்படும் காரணங்கள் (வெளியிலிருந்து பெறப்படும்) ஆகும்.[11][32] லெஸ்ச்-நைஹான் நோய்க்குறியீடின் அறிகுறிகளையும் டூரெட் நோய்க்குறியீட்டுடன் குழப்பிக்கொள்ளக்கூடும்.[25] மேற்கண்டவற்றில் பெரும்பாலானவை நடுக்கச் சீர்கேடுகளைக் காட்டிலும் மிகவும் அரிதானவை ஆகும். மேலும் மருத்துவம் சார் சோதனை அல்லது திரையிடல் சோதனைகளுக்கு நோயாளியை உட்படுத்தாமல் நோயாளியின் முந்தைய முழுமையான நோய்குறித்த வரலாறு மற்றும் பரிசோதனை இவற்றைக் கொண்டே இந்தத் தேவையற்ற காரணங்களைப் புறக்கணிக்க முடியும்.[6]

திரையிடல்[தொகு]

டூரெட்ஸ் பாதிப்புக்குள்ளான அனைவரும் பிற நோய் பாதிப்பும் உடையவர்களாக இருப்பதில்லை என்ற போதும், சிறப்பு மருத்துவ மையங்களில் இந்த பாதிப்பின் சிகிச்சைக்காக வரும் பெரும்பாலான நோயாளிகளுக்கு இயக்க மற்றும் குரல் ஒலி நடுக்கங்களுடன் பிற நோய் பாதிப்புகள் ஏற்பட்டிருப்பதற்கான அறிகுறியும் தென்படுகின்றன.[28] கவனப்பற்றாக்குறை அதியியக்கச் சீர்கேடு (எ.டி.டி அல்லது எ.டி.எச்.டி), மனதை அலைக்கழிக்கும் சீர்கேடு (ஒ.சி.டி), கற்றல் குறைபாடுகள் மற்றும் தூக்கச் சீர்கேடுகள் உள்ளிட்டவை இது தொடர்புடைய மற்ற பாதிப்புகள் ஆகும்.[3] டூரெட்ஸ் மற்றும் எ.டி.எச்.டி ஆகிய இருபாதிப்புக்குள்ளான நோயாளிகள், பலவந்தமான நடவடிக்கைகள், பலவீனமான செயல்பாடுகள் அல்லது புலனுணர்வு சார்ந்த குறைபாடுகளை வெளிப்படுத்துவதால், இருபாதிப்புள்ள நிலைகள் இருக்கிறதா என்பதைக் கண்டறிவதும் சிகிச்சையளிப்பதும் முக்கியமாகலாம்.[20][26][47] குழந்தைகளுக்கு நடுக்கங்கள் ஏற்படும் போது, அது தடைபடும் நிகழ்வானது பொதுவாக இருபாதிப்புகள் தன்மை கொண்ட பாதிப்புகளினால் அதிகமாகிறது. இதனால் குழந்தைகளுக்கு அதிக சிரமம் ஏற்படும்.[6] எ.டி.எச்.டி பாதிப்பு இல்லாத நிலையில் உள்ள நடுக்கச் சீர்கேடுகள், சீர்குலைக்கும் நடவடிக்கைகள் அல்லது பலவீனமான செயல்பாடுகள் போன்ற விளைவுகளை ஏற்படுத்துவதில்லை.[4] அதே சமயம் இரு நோய் பாதிப்புக்கு உள்ள நோயாளிகளுக்கு பள்ளியில், குடும்பத்தில் அல்லது நெருங்கிய உறவினர்களிடம் பலவீனமான செயல்பாடுகள் அதிகமாக உள்ளன. மேலும் அவர்களுக்கு சிகிச்சை தேவையா இல்லையா என்பதையும் இதுவே தீர்மானிக்கிறது.[14]

ஒ.சி.டி மற்றும் எ.டி.எச்.டி போன்ற இருபாதிப்புள்ள நிலைகளானவை நடுக்கங்களைக் காட்டிலும் அதிக பலவீனம் மேற்படுத்துபவையாக இருப்பதன் காரணமாக, நடுக்கங்களுடன் கூடிய நோயாளிகளின் பாதிப்பை மதிப்பிடுவதில் இந்த நிலைகள் முக்கியத்துவம் பெறுகின்றன. சாமுவேல் சின்னர் (Samuel Zinner, MD), "நடுக்கச் சீர்கேடுகளைக் காட்டிலும் இருநோய் பாதிப்புள்ள நிலையே, நடவடிக்கை சார்ந்த செயல்பாடுகளின் நிலையை நிர்ணயிப்பதில் மிகவும் வலிமையானது என்பதை கவனிப்பது மிகவும் முக்கியமானதாகும்" என்று கூறியுள்ளார்.[6] நடுக்கச் சீர்கேடுகளுக்காகச் சோதிக்கப்படும் நோயாளிகளின் முதல்கட்ட பரிசோதனையில் நோயாளியின் நடுக்கம் தொடர்பான குடும்ப வரலாறு, எ.டி.எச்.டி, மனதை அலைக்கழிக்கும் அறிகுறிகள், மற்ற நீண்டகால மருத்துவ, உளவியல் ரீதியான மற்றும் நரம்பு சம்பத்தப்பட்ட பாதிப்புகளின் நிலைகள் உள்ளடக்கிய முழுமையாக பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும். கற்றல் குறைபாடுகளுடன் கூடிய டி.எஸ் குறைபாடுள்ள குழந்தைகள் மற்றும் வயது வந்தோர் ஆகியோருக்கு உளவிய கற்பித்தல் சோதனை தேவையானதாக இருக்கிறது. குறிப்பாக எ.டி.எச்.டி பாதிப்பும் உள்ள குழந்தைகளுக்கு இது அவசியம்.[43] இருநோய் பாதிப்புகளைக் அறுதியிடாமல் விடுவதன் விளைவாக செயலியல் பலவீனக் குறைபாடுகள் ஏற்படலாம். மேலும் இதனைக் கண்டறிந்து அதற்கு தகுந்த சிகிச்சை அளிப்பதன் மூலமாக அவர்களின் செயல்பாடுகளை மேம்படுத்தலாம். மன அழுத்தம், தூக்கச் சிக்கல்கள், சமூகத்தில் அசெளகரியமான உணர்வு மற்றும் தன்னைத்தானே காயப்படுத்திக் கொள்ளுதல் உள்ளிட்ட சிக்கல்கள் இதனால் ஏற்படலாம்.[11]

நிருவகித்தல்[தொகு]

Little white pills on a counter, next to a pill bottle and labels
குளோனிடைன் (அல்லது குளோனிடைன் படிவு) என்பது டூரட்டேக்களுக்கு மருத்துவம் தேவைப்படும் போது முதலில் முயற்சித்துப் பார்க்கப்படும் மருந்துகளில் ஒன்றாகும்.

டூரெட்ஸ் பாதிப்புக்குள்ளானவர்களுக்கான சிகிச்சை முறையில், முதலில் நோயாளிக்குள்ள மிகவும் சிக்கலான அல்லது பலவீனப்படுத்தும் அறிகுறிகளைக் கண்டறிந்து அவற்றைச் சமாளிப்பதற்கு உதவுவதே முக்கியமாகக் கருதப்படுகிறது.[6] டூரெட்ஸ் பாதிப்புள்ள பெரும்பாலான நோயாளிகள் மிதமாகவே பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அதனால் அவர்களுக்கு மருந்தியல் சம்பந்தப்பட்ட சிகிச்சை தேவையில்லை.[12] மாறாக அவர்களுக்கு உளவியல் சார் நடத்தை சிகிச்சை, கல்வி மற்றும் ஐயத்தைப் போக்குதல் போன்றவை போதுமானதாக இருக்கும்.[48] சிகிச்சை அவசியம் என்ற நிலையில், இந்தப் பாதிப்புக்கான சிகிச்சைகளை நடுக்கங்களுக்கானவை மற்றும் இருநோய் பாதிப்புள்ள நிலைகளுக்கானவை என இரு வகையாகப் பிரிக்கலாம். இவை இருக்கும்பட்சத்தில், இந்த சிகிச்சைகளால் ஏற்படும் பலவீன விளைவு நடுக்கங்களால் ஏற்படுவதைக் காட்டிலும் அதிகமாகும்.[43] நடுக்கங்கள் ஏற்படும் அனைத்து நோயாளிகளும் இருநோய் பாதிப்புக்குள்ளானவர்களாக இருக்க மாட்டார்கள்.[28] ஆனால் அந்த பாதிப்புகள் ஏற்படும் நோயாளிகளுக்கு அத்ததைய பாதிப்புகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்படும்.

டூரெட்ஸ் பாதிப்பு குணமாவதற்கு மருந்துகள் இல்லை. மேலும் எந்தவித பாதகமான விளைவுகளையும் ஏற்படுத்தாமல் நோயாளியின் பாதிப்பைத் தணிக்கக்கூடிய உலகளவில் பயன்தரத்தக்க மருந்துகளும் ஏதுமில்லை. நடுக்கச் சீர்கேடுகளுக்கான நிருவகித்தல் திட்டத்தில் அறிவு, கல்வி மற்றும் புரிந்துகொள்ளுதல் போன்றவை முக்கியமானவையாக உள்ளன.[6] டூரெட்ஸ் பாதிப்பின் அறிகுறிகளுக்கான நிருவகித்தலில், மருந்தியல் சார்ந்த, நடத்தை சார்ந்த மற்றும் உளவியல் சார்ந்த சிகிச்சைகள் உள்ளன. மருந்து சிகிச்சை என்பது மிகவும் தீவிரமான அறிகுறிகளுக்காக மட்டுமே மேற்கொள்ளப்படுகின்றது. மன அழுத்தம் மற்றும் சமூகத்தில் இருந்து தனித்திருத்தல் ஆகியவற்றைத் தவிர்ப்பதற்கு அல்லது சீர்படுத்துவதற்கு உதவும் பொருட்டு மற்றும் குடும்ப ஆதரவை மேம்படுத்தும் பொருட்டு மற்ற சிகிச்சைகளும் (ஆதரவு உளவியல் சிகிச்சை அல்லது புலனறிவு நடத்தை சார் சிகிச்சை போன்றவை) மேற்கொள்ளப்படலாம். நோயாளி, அவரது குடும்பம் மற்றும் சுற்றியுள்ள சமூகம் (நண்பர்கள், பள்ளி மற்றும் தேவாலயம் போன்ற இடங்கள்) ஆகியோருக்கு கற்பித்தல் என்பது முதன்மையான சிகிச்சை அம்சமாக உள்ளது. மேலும் மிதமான பாதிப்புக்குள்ளான நோயாளிகளுக்கு இதுவே போதுமானதாக உள்ளது.[6][49]

4-[4-(4-chlorophenyl)-4-hydroxy-1-piperidyl]-1-(4-fluorophenyl)-butan-1-one
ஹாலோபெரிடோல் மூலக்கூறின் மாதிரி. ஹாலோபெரிடோல் என்பது உளப்பிணிக்கெதிரான மருந்தாகும். இது சில நேரங்களில் தீவிரமான டூரெட்டீக்கள் ஏற்பட்டிருக்கும் சமயங்களில் பயன்படுத்தப்படுகின்றது.

அறிகுறிகள் செயல்பாடுகளில் குறுக்கிடும் போது அதைச் சரிசெய்ய உதவும் பொருட்டு மருந்துகள் இருக்கின்றன.[34] ரிஸ்பெரிடோன் (risperidone) (வர்த்தகப் பெயர்:[50] ரிஸ்பெரிடால் (Risperdal)), ஜிப்ராசிடோன் (ziprasidone) (ஜியோடோன் (Geodon)), ஹாலோபெரிடோல் (haloperidol) (ஹால்டோல் (Haldol)), பிமோசைடு (pimozide) (ஓராப் (Orap)) மற்றும் ஃப்ளூபெனாசின் (fluphenazine) (ப்ரோலிக்சின் (Prolixin)) போன்ற வழக்கமான மற்றும் அசாதாரண நடத்தை மாற்று மருந்துகள் இச்சிகிச்சையில் மிகவும் ஆற்றல் மிக்கவைகளாக நிரூபிக்கப்பட்ட மருந்துப் பிரிவுகளாக உள்ளன. மேலும் இவை நீண்டகால மற்றும் குறைந்தகால பாதகமான விளைவுகள் கொண்டவையாக இருக்கலாம்.[43] குளோனிடைன் (clonidine) (வர்த்தகப் பெயர்: கேட்டபிரெஸ் (Catapres)) மற்றும் குவான்ஃபாசைன் (guanfacine) (டெனெக்ஸ் (Tenex)) போன்ற அதீத மன அழுத்தத்திற்கு எதிராக செயல்படுபவைகளும் நடுக்கங்களுக்குச் சிகிச்சையளிப்பதற்காக பயன்படுத்தப்படுகின்றன. இவற்றில் ஆற்றல் மாறுபட்டு இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆனால் இவை நடத்தை மாற்று மருந்துகளைக் காட்டிலும் குறைவான பக்க விளைவுகள் கொண்டதாக இருப்பதாகத் தெரியவந்துள்ளது.[1] வினையூக்கிகள் மற்றும் பிற மருந்துகள் நடுக்கச் சீர்கேடுகளுடன் சேர்ந்து எ.டி.எச்.டி பாதிப்புக்குள்ளாகும் போது சிகிச்சையளிப்பதற்கு பயனுள்ளதாக இருக்கலாம். வினையூக்கி சிகிச்சை முயற்சிகள் தோல்வியடையும் போது பல்வேறு மருந்துப் பிரிவுகளைச் சேர்ந்த மருந்துகள் பயன்படுத்தப்படலாம். அவற்றில் குவான்ஃபாசின் (guanfacine) (வர்த்தகப் பெயர்: டெனெக்ஸ் (Tenex)), அடாக்சிடின் (atomoxetine) (ஸ்ட்ராட்டெர (Strattera)) மற்றும் மன அழுத்தத்திற்கு எதிரான ட்ரைசைக்ளிக்குகள் போன்றவையும் அடங்கும். குளோமிப்ராமைன் (Clomipramine) (அனாஃப்ரானில் (Anafranil)), ஏ ட்ரைசைக்ளிக் மற்றும் ஃப்ளூ ஆக்சிடைன் (fluoxetine) (ப்ரோஷாக் (Prozac)), செர்ட்ராலின் (sertraline) (ஜோலோஃப்ட் (Zoloft)) மற்றும் ஃப்ளூவோ ஆக்சமைன் (fluvoxamine) (லுவோக்ஸ் (Luvox)) ஆகியவை உள்ளடக்கிய மன அழுத்ததிற்கு எதிரான மருந்துகளின் பிரிவான எஸ்.எஸ்.ஆர்.ஐகள் போன்ற மருந்துகள் டூரெட் பாதிப்புடன் மனதை அலைக்கழிக்கும் சீர்கேட்டின் அறிகுறிகள் தென்படும் நோயாளிகளுக்குப் பயன்படுத்தப்படலாம். நிகோடின் தொகுப்புகள் உள்ளிட்ட மற்ற பல்வேறு மருந்துகளும் இப்பாதிப்புக்கு முயற்சி செய்யப்பட்டு வருகின்றன, ஆனால் அவற்றின் பயன்பாடு குறித்த சான்றுகள் நம்பத்தக்கவையாக இல்லை.[43]

நடுக்கங்களினால் ஏற்படும் பாதிப்பினால் மருத்துவரைச் சந்திக்கும் குழந்தைகளில் பெரும்பாலானோர் தீவிரமான நடுக்கங்கள் உடையவர்களாகவோ மற்றும் உடலைக் களைப்புறச்செய்யும் மற்றும் நலிவுறச் செய்யும் நடுக்கங்கள் உடையவர்களாகவோ இருப்பதன் காரணமாக உடனடியாக மருந்துகள் தருவது அல்லது அடிக்கடி மருந்துகளை மாற்றுவது சரியான முறையல்ல.[6] பெரும்பாலும் விளக்கமளித்தல், ஐயத்தைப் போக்குதல், நிலைமையைப் புரியவைத்தல் மற்றும் ஆதரவான சூழ்நிலை ஆகியவை கிடைத்தால் நடுக்கங்கள் படிப்படியாக தணிந்துவிடலாம்.[6] மருந்துகள் பயன்படுத்தப்படும் போது, மருந்து வழங்குதலின் குறிக்கோள் அறிகுறிகளை நீக்குவது அல்ல. அறிகுறிகளை நிர்வகிப்பதற்கு தரப்படும் இந்த மருந்துகள் எந்த பாதகமான விளைவுகளையும் ஏற்படுத்தாத அளவில் குறைந்த அளவில் தரப்பட வேண்டும். அவ்வாறு அதிகமாக கொடுக்கப்பட்டால் அவை, பாதிக்கப்பட்டவருக்கு ஏற்பட்ட அறிகுறிகளைக் காட்டிலும் அதிகமான அளவில் சிக்கல்களை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.[6]

ஒ.சி.டி பாதிப்பு ஏற்பட்டிருக்கும் போது புலனறிவு சார்ந்த நடத்தை சார் சிகிச்சை (Cognitive behavioral therapy) (சி.பி.டி) பயனுள்ள சிகிச்சையாக இருக்கிறது.[51] மேலும் நடுக்கங்களுக்கான சிகிச்சையில் தலைகீழான பழக்கங்களின் பயன்பாடு பலனளிப்பதாக இருப்பதாக நிரூபிக்கும் ஆதாரங்கள் அதிகிரித்துவருகின்றன.[52] உடற்பயிற்சி, யோகாசனம் அல்லது தியானம் போன்ற இளைப்பாறல் நுட்பங்கள், நடுக்கங்களை அதிகரிக்கும் அழுத்தத்தைத் தணிப்பதற்கு பயன் நிறைந்ததாக இருக்கலாம். ஆனால் பெரும்பாலான நடத்தை சார் நடவடிக்கைகள் (தலைகீழான பழக்கங்கள் தவிர்த்து இளைப்பாறல் பயிற்சிகள் மற்றும் உடல் இயங்கல் மாற்றக் குறிப்பு போன்றவை) முறையாக மதிப்பீடு செய்யப்படவில்லை, மேலும் அவை டூரெட்ஸ் பாதிப்புக்கான சிகிச்சைகளில் பரிசோதனை ரீதியான ஆதரங்களைக் கொண்டிருக்கவில்லை.[53]

நோய் முன்கணிப்பு[தொகு]

Three men and two women stand near the Mona Lisa. All are dressed formally, one woman in a spectacular pink gown.
ஃபிரெஞ்சு எழுத்தாளராக இருந்தவரும், துணிகரச் செயல்புரிந்தவரும் மற்றும் கலாச்சார அமைச்சராக இருந்தவருமான ஆண்ட்ரெ மால்ராக்ஸ் (André Malraux) (1901–1976) என்பவருக்கு டூரெட் நோய்க்குறி இருந்தது.[54][55][56][57] அதிபர் கென்னடி (Kennedy), மேரீ-மேட்லெயின் லையக்ஸ் (Marie-Madeleine Lioux), மால்ராக்ஸ் (Malraux), ஜாக்கி கென்னடி (Jackie Kennedy) மற்றும் துணைத் தலைவர் ஜான்சன் (Johnson) ஆகியோர் அடங்கிய இந்த புகைப்படம் 1963 ஆம் ஆண்டில் வாஷிங்க்டன், டிசியில் உள்ள தேசியக் கலைக்கூடத்தில் உள்ள மோன லிசா ஓவியத்தின் திறப்பு விழாவின் போது எடுக்கப்பட்டது.[58]

டூரெட் நோய்க்குறியீடு ஒரு வரம்பு கொண்ட சீர்கேடு ஆகும். இதன் தீவிரத்தன்மை மிதமானதிலிருந்து தீவிரமானது வரையிலான வரம்பைக் கொண்டது. பெரும்பாலான நோயாளிகள் மிதமான அளவில் பாதிப்புக்குள்ளாகியிருப்பர். அவர்களுக்கு சிகிச்சை எதுவும் தேவையில்லை.[12] இவ்விதமான நோயாளிகளுக்கு, சாதாரணமாக கவனித்தால் அவர்களுக்கு அந்த பாதிப்பு இருப்பதே தெரியாத அளவுக்கு அவர்களின் அறிகுறிகளின் தாக்கம் மிகவும் குறைவாக இருக்கும். ஒட்டுமொத்தமாக நோய் முன்கணிப்பு நேர்மறையானதாக இருக்கிறது. ஆனால் டூரெட் நோய்க்குறியீடினால் பாதிக்கப்பட்டுள்ள சிறுபான்மை அளவிலான குழந்தைகளுக்கு, வளர்ந்த வயது வரை தொடர்ந்து தீவிரமான அறிகுறிகளைக் கொண்டுள்ளனர்.[29] 19 வயதுடைய 46 நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வில், 80 சதவீதத்தினருக்கு அவர்களது அறிகுறிகளால் ஒட்டு மொத்த செயல்பாடுகளில் ஏற்பட்ட பாதிப்பு குறைந்த அளவில் இருந்து மிதமான அளவு வரை இருந்தன. மீதமிருந்த 20 சதவீதத்தினரது அறிகுறிகள் அவர்களது செயல்பாடுகளில் மிதமான பாதிப்புகளைக் கொண்டிருந்தன எனத் தெரியவந்தது.[8] அரிதான தீவிர பாதிப்புகள் உள்ள நோயாளிகளுக்கு பணியில் நீடித்திருக்க இயலாத நிலை அல்லது சமூக வாழ்க்கையில் முழுமை ஏற்படுவதில் தடை ஏற்படலாம். டூரெட்ஸ் பாதிப்புக்குள்ளான 31 நபர்களை வைத்து மேற்கொள்ளப்பட்ட பின் தொடர் ஆய்வில், அனைவருமே அவர்களது உயர்நிலை பள்ளிப்படிப்பை முடித்துவிட்டிருந்தனர் என்றும், அதில் 52 சதவீதத்தினர் குறைந்த பட்சம் 2 ஆண்டுகளாவது கல்லூரிப் படிப்பேனும் நிறைவு செய்திருந்தனர் என்றும் 71 சதவீதத்தினர் முழு நேரப் பணியாளர்களாக சேர்ந்திருந்தனர் அல்லது மேற்படிப்பு படித்துக் கொண்டிருந்தனர் என்றும் தெரியவந்தது.[59]

இந்நோய் அறிகுறி தீவிரமாக இருந்தபோதும் டூரெட்ஸ் பாதிப்புக்குள்ளானவர்கள் சாதாரண ஆய்ட் காலம் கொண்டவர்களாக இருக்கின்றனர். இதன் அறிகுறிகள் சிலருக்கு ஆயுள் முழுவதும் நீடிப்பதாகவும் நீண்ட காலம் நீடிப்பதாகவும் இருப்பினும், இந்த பாதிப்பானது உடலைச் சிதைப்பதாகவோ அல்லது உயிருக்கு ஆபத்தானதாகவோ இருப்பதில்லை. டூரெட்ஸ் பாதிப்புக்குள்ளானோரிடமும் நுண்ணறிவு இயல்பானதாகவே இருக்கும். இருந்த போதும் அவர்களுக்கு கற்றல் குறைபாடுகள் இருக்கலாம்.[15] வயது குறைவாக இருக்கும் போது ஏற்படும் நடுக்கங்களின் தீவிரத்தன்மையை வைத்து அவர்களது முதிய வயதில் நடுக்கங்களின் தீவிரத்தன்மை எவ்வாறு இருக்கும் என கணிக்க இயலாது.[15] மேலும் நோய் முன்கணிப்பு பொதுவாக சாதகமானதாகவே இருக்கிறது.[15] எனினும் குறிப்பிட்ட நோயாளிக்கு பாதிப்பு எப்படி இருக்கலாம் என்பதை முன்கணிப்பு செய்வதற்கான வழிகள் ஏதுமில்லை. டூரெட்ஸ் பாதிப்புடன் தொடர்புடைய மரபணு அல்லது மரபணுக்கள் இன்னும் கண்டறியப்படவில்லை. மேலும் இப்பாதிப்புக்கு சாத்தியமுள்ள "குணப்படுத்தும் மருந்துகள்" ஏதுமில்லை.[15] சாதாரண மக்களுக்கு ஏற்படுவதைக் காட்டிலும் அதிகளவில் இப்பாதிப்புக்குள்ளானோருக்கு ஒற்றைத் தலைவலிகள் மற்றும் தூக்கக் குழப்பங்கள் ஏற்படுவதாகத் தெரிகிறது.[15]

பெரும்பாலான குழந்தைகளில் இந்நிலையானது அவர்கள் வளர வளர மேம்படுவது பல்வேறு ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. நோயாளி ஒருவரை பரிசோதனை செய்யும் நேரத்தில் அவர்களது நடுக்கங்கள் அதன் அதி தீவிர நிலையில் இருக்கக்கூடும். மேலும் பாதிக்கப்பட்டவரது குடும்ப நபர்கள் மற்றும் நண்பர்கள் அவரது நிலையைப் புரிந்துகொள்வதன் மூலமாக அவரிடம் மேம்பாடான நிலையைக் காணலாம். புள்ளிவிவரங்களின் படி, நடுக்கத்தின் தீவிரத் தன்மை வெளிப்படும் உச்ச அளவு வயது என்பது பொதுவாக எட்டு வயதுக்கும் பன்னிரண்டு வயதுக்கு இடைப்பட்ட வயதாகும். அந்த வயதில் இருந்து வாலிப வயது வரையில் படிப்படியாக நடுக்கத்தின் தீவிரத்தன்மை பெரும்பாலானோருக்குக் குறைந்துவிடும். பருவமடைதலின் போது நடுக்கங்கள் அதிகரிப்பதாக பரவலாக நம்பப்படுகிறது, ஆனால் இதற்கு மாறாக, நடுக்கங்களின் தீவிரத் தன்மைக்கும் பருவமடைதலுக்கும் எந்த தொடர்பும் இல்லை என ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. பல நோயாளிகளில் வாலிபப் பருவத்திற்குப் பிறகு நடுக்க அறிகுறிகள் முழுமையாக தணிந்துவிடுகின்றன.[24][60] எனினும் வாலிபப்பருவத்தினருக்கு ஏற்படும் நடுக்கங்களை ஒளிநாடாவில் பதிவு செய்து மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில், குழந்தைப் பருவத்தை ஒப்பிடுகையில் நடுக்கங்கள் குறைவானதாக இருந்ததாகக் கண்டறியப்பட்டது, மேலும் நடுக்கத்தின் தீவிரத்தன்மை வாலிபப் பருவத்தில் மேம்படுவதாக அனைத்து மதிப்பீடுகளும் தெரியப்படுத்தின எனினும், 90% வாலிபப் பருவத்தினர் தொடர்ந்து நடுக்கங்கள் கொண்டிருந்தது தெரியவந்தது. நடுக்கங்கள் இல்லை என நினைத்துக் கொண்டிருந்த வாலிப வயதினரில் பாதி பேரிடம் நடுக்கங்களுக்கான ஆதாரங்கள் இருந்தது வெளிப்பட்டது.[59]

பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர்களில் பலர் அவர்கள் குழந்தைகளாக இருந்த போது இதே பாதிப்புக்கு ஆளாகியிருக்கலாம் என்பதனை அறிந்துகொள்ளாமலே இருக்கின்றனர். வளர வளர டூரெட்ஸ் பாதிப்பு தணிந்துவிடுவதன் காரணமாகவும் மிதமான அளவில் பாதிப்புடைய டூரெட்ஸ் இருப்பவர்கள் தற்போது அதிகளவில் ஏற்றுக்கொள்ளப்படுவதன் காரணமாகவும், பாதிக்கப்பட்ட குழந்தையின் பெற்றோர்களுக்கும் நடுக்கங்கள் இருந்தது அவர்களது சந்ததியினரை ஆய்வு செய்யும் வரை தெரியாமல் போகலாம். பாதிப்புக்குள்ளான குழந்தைகளை மருத்துவமனைக்கு அழைத்துவரும் பெற்றோர்கள் அவர்களுக்கும் குழந்தைப் பருவத்தில் நடுக்கங்கள் இருந்திருக்கலாம் என்பதை அறிந்த பிறகு அவர்களது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சோதனை செய்யப்படுவதும் பொதுவானதாகும்.

Top half of a male athlete who appears to be running
எவர்டோன் எஃப்.சியின் (Everton F.C.) கோல்கீப்பரான டிம் ஹோவார்ட் (Tim Howard), "டூரெட்ஸ் நோய்க்குறி ஒரு பிரச்சினை அல்ல. ... இது என்னை ஆடுகளத்திலோ வெளியிலோ எந்த விதத்திலும் பாதிக்கவில்லை" என்றார்.[61]

டூரெட்ஸ் பாதிப்புக்குள்ளான குழந்தைகள் அவர்களது நடுக்கங்கள் மற்றவர்களால் "வினோதமானதாக" பார்க்கப்பட்டால் சமூக ரீதியாக மிகவும் பாதிப்படையலாம். ஒரு குழந்தைக்கு செயலிழக்கச் செய்யும் நடுக்கங்கள் அல்லது சமூக அல்லது கல்வி சார்ந்த செயல்பாட்டில் குறுக்கிடும் நடுக்கங்கள் இருந்தால், ஆதரவு உளவியல் சிகிச்சை அல்லது பள்ளியில் தங்கி படிக்கும் வசதி அந்த குழந்தைக்கு உதவிபுரிவதாக அமையலாம்.[34] ஒருவரின் ஒட்டு மொத்த செயல்பாட்டில் நடுக்கங்களைக்காட்டிலும் இருநோய் பாதிப்பு நிலைகள் (எ.டி.எச்.டி அல்லது ஒ.சி.டி போன்றவை) பெருமளவு தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்பதன் காரணமாக, அறிகுறிகள் மற்றும் பலவீனப்படுத்தும் செயல்பாடுகள் இருக்கும் போது இருநோய் பாதிப்பு சார்ந்த முழுமையான பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.[11]

டூரெட்ஸ் பாதிப்புக்குள்ளான நபருக்கு ஆதரவான சூழ்நிலை மற்றும் குடும்பம் அமைவதன் காரணமாக இந்த சீர்கேட்டினை நிருவகிப்பதற்கான திறனை பாதிக்கப்பட்ட நபர் பெறலாம்.[62][63] டூரெட்ஸ் பாதிக்கப்பட்ட நபர் சமூகத்தின் முன்பு அவரது நடுக்கங்களை மறைத்துக்கொள்ள கற்றுக்கொள்ளலாம் அல்லது பெருமுயற்சியின் காரணமாக அவரது நடுக்கங்களை ஆற்றலாக மாற்றிவிடலாம். டூரெட்ஸ் பாதிக்கப்பட்ட நபர்களில் பலர் திறமை வாய்ந்த இசையமைப்பாளர்கள், விளையாட்டு வீரர்கள், பேச்சாளர்கள் மற்றும் அலுவலர்கள் என அனைத்துத் துறைகளிலும் காணப்படுகின்றனர். வாலிபப் பருவத்தில் ஏற்படும் நடுக்கங்கள் பெரும்பாலும் உண்மையான தீவிரத்தன்மையை வெளிப்படுத்துவதாக இல்லாமல் அவர்களது குழந்தைப் பருவத்தில் இருந்த தீவிரத்தன்மையின் காரணமாக அவர்களுக்கு தீவிரமான நடுக்கம் இருப்பதாக நினைத்துக் கொள்வதால் ஏற்படுவதாகவே இருக்கின்றன. புரிந்து கொள்ளப்படும் மற்றும் ஆதரவான சூழல் கிடைக்கும் பாதிக்கப்பட்ட குழந்தைகளைக் காட்டிலும், வீட்டில் அல்லது பள்ளியில் தவறாக புரிந்து கொள்ளப்படும், தண்டிக்கப்படும் அல்லது கேலி செய்யப்படும் குழந்தைகளுக்கு பாதிப்பு மிகவும் மோசமானதாக இருக்கும்.[8]

நோய் பரவல்[தொகு]

டூரெட் நோய்க்குறியீடானது உலகம் முழுவதும் உள்ள அனைத்து சமூகம் மற்றும் இனங்களிலும் காணப்படுகிறது.[64] மேலும் பெண்களைக் காட்டிலும் ஆண்களுக்கு மூன்றிலிருந்து நான்கு மடங்கு அதிகமாக இப்பாதிப்பு ஏற்படுகிறது.[65] டூரெட் நோய்க்குறியீடுக்கான நடுக்கங்கள் குழந்தைப் பருவத்தில் தொடங்கிவிடுகிறது. அது பாதிக்கப்பட்டவர் வளர வளர குறைந்து விடுகிறது அல்லது தணிந்துவிடுகிறது. ஆகையால் பெரும்பாலான வாலிபர்களுக்கு இதற்கான அறுதியிடல் தேவையற்றதாக இருக்கிறது. மேலும் நோய்ப் பரவலானது வாலிபப் பருவத்தினரைக் காட்டிலும் குழந்தைகளுக்கு மிகவும் அதிகமாக இருக்கிறது.[24] வாலிபப் பருவத்தினரைக் காட்டிலும் ஐந்திலிருந்து பன்னிரண்டு மடங்கு அதிகமாக குழந்தைகள் நடுக்கச் சீர்கேடுகளால் பாதிக்கப்பட்டிருக்க வாய்ப்புள்ளது.[66] பொதுவாக நூறில் ஒரு நபர் நடுக்கச் சீர்கேடுகளால் பாதிக்கப்பட்ட நபராக உள்ளார். இதில் குழந்தைப் பருவத்தில் ஏற்படும் நீண்ட கால நடுக்கங்கள் மற்றும் குறைந்த கால நடுக்கங்களும் அடங்கும்.[3] ஆயிரம் நபர்களில் ஒன்றிலிருந்து பத்து நபர்கள் வரையில் டூரெட்ஸ் பாதிப்புக்கு ஆளாகியிருப்பதாக பெரும்பாலான ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.[2] ஆயிரம் நபர்களில் ஆறிலிருந்து எட்டு குழந்தைகளுக்கு இப்பாதிப்பு இருப்பதாக பெரும்பாலான ஆய்வுகளில் தெரியவந்திருக்கிறது.[4] அமெரிக்காவில் 2000 ஆம் ஆண்டில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பைப் பயன்படுத்தி தோராயமாக 53,000–530,000 பள்ளி வயது குழந்தைகளிடம் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் டூரெட்ஸ் பாதிப்புக்குள்ளானோரின் நோய்ப் பரவல் வரம்பு ஆயிரத்திற்கு ஒன்றிலிருந்து பத்து நபர்கள் வரையில் இருந்தது.[4] மேலும் 2001 ஆம் ஆண்டு ஐக்கிய இராச்சியத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 553,000 நபர்களில் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையோரில் ஆயிரத்துக்கு பத்து பேர் டூரெட்ஸ் பாதிப்புக்குள்ளானவர்களாக இருந்தனர். பெரியவர்களில் பெரும்பாலான பாதிப்புகள் மிதமானவையாக இருக்கின்றன, பெரும்பாலும் இப்பாதிப்பு இருப்பது கிட்டத்தட்ட கண்டறிய முடியாதபடியே இருக்கிறது.[64]

டூரெட்ஸ் பாதிப்பானது பல்வேரு இருநோய் பாதிப்பு நிலைகளுடன் அல்லது உடன் நிகழ் நோய்களுடன் தொடர்புடையதாக இருக்கிறது. அத்தகைய பாதிப்புகளே பாதிக்கப்பட்ட குழந்தைகள் பலவீனமடைவதற்கான முக்கிய காரணமாக இருக்கின்றன.[20] சிறப்பு டூரெட்ஸ் மருத்துவமனைகளில் பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற அவசியமுள்ளபடி மிகவும் தீவிரமான அறிகுறிகள் வெளிப்படும் நோயாளிகளில், குறைந்த அளவிலான நோயாளிகள் மட்டுமே மற்ற பாதிப்புகள் இல்லாமல் இருக்கின்றனர்.[67] மேலும் மனதை அலைக்கழிக்கும் சீர்கேடு (ஒ.சி.டி) மற்றும் கவனப்பற்றாக்குறை அதியியக்கச் சீர்கேடு (எ.டி.எச்.டி) போன்ற பாதிப்புகள் சில சந்தர்ப்பங்களில் இதனுடன் சேர்ந்து ஏற்படுபவையாக இருக்கின்றன.[20][26] டூரெட்ஸ் பாதிப்புக்குள்ளான குழந்தைகளில் எ.டி.எச்.டி ஆனது செயல்பாட்டு ரீதியான பலவீனங்கள், பலவந்தமான நடவடிக்கைகள் மற்றும் நடுக்கத்தின் தீவிரத் தன்மை ஆகியவற்றுடன் தொடர்புடையதாக இருக்கிறது. தன்னைத் தானே காயப்படுத்திக் கொள்ளும் நடத்தைகள் (எஸ்.ஐ.பி), மனக்கலக்கம், மன அழுத்தம், ஆளுமைச் சீர்கேடுகள், எதிர்க்கூறு இணக்கமற்ற சீர்கேடு மற்றும் நடத்தைச் சீர்கேடுகள் உள்ளிட்டவை மற்ற இருநோய் பாதிப்புகளாகும்.[67] நோயாளிகளின் அறிக்கையை பத்து ஆண்டுகளாக ஆய்வு செய்த ஒரு ஆய்வாளர், டூரெட்ஸ் பாதிப்புக்குள்ளானோரில் 40 சதவீதத்தினர் "டி.எஸ் மட்டும்" அல்லது "துல்லிய டி.எஸ்" மட்டுமே கொண்டவர்களாக இருக்கின்றனர் என்பதனை வெளிப்படுத்தினார். அதாவது, எ.டி.எச்.டி, ஒ.சி.டி மற்றும் மற்ற சீர்கேடுகள் இல்லாமல் வெறும் டூரெட் பாதிப்பு மட்டுமே இருக்கிறது என்பதைக் குறிப்பிடுகிறார்.[27][28]

ஒரு காலத்தில் டூரெட் நோய்க்குறியீடு மிகவும் அரிதான ஒரு பாதிப்பாக கருதப்பட்டது. 1972 ஆம் ஆண்டு அமெரிக்காவில் தேசிய சுகாதார நிறுவனங்கள் (National Institutes of Health) (என்.ஐ.எச்) அமெரிக்காவில் நூறுக்கும் குறைவானவர்களே இப்பாதிப்புக்கு உள்ளாகியிருந்தனர் என்று கருதியது.[68] மேலும் 1973 ஆம் ஆண்டின் பதிவறிக்கை ஒன்று உலகளவில் 485 நோயாளிகள் மட்டுமே இப்பாதிப்புக்கு உள்ளாகியிருந்தனர் என தெரிவித்தது.[69] எனினும் 2000 ஆண்டிலிருந்து வெளிவந்த பல்வேறு ஆய்வுகள், நோய்ப் பரவலானது முன்பு கருதியிருந்ததைக் காட்டிலும் மிகவும் அதிகமானதாக இருப்பதைக் காட்டின.[70] நோய்ப் பரவல் விகிதத்தில் தற்போதைய மதிப்பீடுகளுக்கும் முந்தைய மதிப்பீடுகளுக்கும் இடையேயான முரண்பாடுகள் பல காரணிகளிலிருந்து உருவாகின்றன. மருத்துவமனையில் பரிந்துரைக்கப்பட்ட நோயாளிகளில் இருந்து எடுக்கப்பட்ட முந்தைய மாதிரிகளின் மூலமாக நிர்ணயிக்கப்பட்ட ஒருதலைச் சார்பு முடிவு, மிதமான நோயாளிகளைக் கண்டறிவதில் மதிப்பீடு முறைகள் தவறியது மற்றும் அறுதியிடல் முறை மற்றும் குறுமட்டங்களில் இருந்த மாறுபாடுகள் போன்றவை இதில் அடங்கும்.[71] 2000 ஆண்டுக்கு முன்பு மற்றும் 1980கள் வரையில் வெளியிடப்பட்ட பல்வேறு பரவலான சமூக ஆய்வுகளில், டூரெட்ஸ் நோய்க்குறியீடுக்கான பெரும்பாலான நோய்ப்பரவல் ஆய்வுகள், மூன்றாம் நிலை மருத்துவமனை அல்லது சிறப்பு மருத்துவமையில் பரிந்துரைக்கப்பட்ட நோயாளிகளை மட்டுமே சார்ந்து இருந்தன.[1][72] மிதமான அறிகுறிகள் கொண்ட குழந்தைகள் சிறப்பு மருத்துவமனைகளுக்குப் பரிந்துரைக்கப்படுவதில்லை. அதனால் இந்த ஆய்வுகள் தீவிர நோயாளிகளை மட்டுமே கருத்தில் கொண்ட ஒரு தலைச் சார்பு முடிவுகளைக் கொண்டிருந்தன.[1][73] நடுக்கங்கள் அதன் கடுமை மற்றும் வெளிப்பாட்டில் மாறுபட்டதாக இருப்பது, விட்டு விட்டு தோன்றுவது, மருத்துவர்கள், நோயாளிகள், குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் அல்லது ஆசிரியர்களால் கண்டுபிடிக்க இயலாமல் இருந்தல் ஆகியவற்றின் காரணமாக டூரெட் நோய்க்குறியீடுக்கான ஆய்வுகளில் பிழைகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகமுள்ளன.[6][74] டூரெட் நோய்க் குறியீடு பாதிப்புக்குள்ளானோரில் தோராயமாக 20 சதவீதத்தினர் அவர்களுக்கு நடுக்கங்கள் ஏற்படுவதை அறியாமலே உள்ளனர்.[6] நடுக்கங்கள் பொதுவாக கண்டறியப்பட முடியாமலும் கண்டறிவதற்கு சிரமமானதாகவும் இருக்கின்றன என்பதை சமீபத்திய ஆய்வுகள் ஏற்றுக்கொண்டுள்ளன. அதனால் பரிந்துரைகளைச் சார்ந்திருந்த பழைய ஆய்வுகளைக் காட்டிலும் புதிய ஆய்வுகளில் நேரடி வகுப்பறைக் கண்காணிப்பு மற்றும் பல்வேறு தகவலளிப்பவர்கள் (பெற்றோர், ஆசிரியர் மற்றும் பயிற்சி பெற்ற கண்காணிப்பாளர்கள்) பயன்படுத்தப்படுவதால் அதிகளவு நோயாளிகள் கண்டறியப்பட்டனர்.[49][75] அறுதியிடல் குறுமட்டம் மற்றும் மதிப்பீட்டு முறை ஆகியவை மிதமாக பாதிக்கப்பட்ட நோயாளிகளையும் கண்டறியும் விதமாக மாறியதன் காரணமாக, மதிப்பீட்டில் நோய்ப் பரவல் அளவு அதிகரித்தது.[71]

வரலாறு மற்றும் ஆராய்ச்சிப் போக்குகள்[தொகு]

A woman faints into the arms of a man standing behind her, with another woman, apparently a nurse, reaching to help. An older man stands beside her, gesturing as if making a point; another man behind him takes notes at a desk.
பிரெஞ்சு நரம்பியலாளர் மற்றும் பேராசிரியர் ஜீன்-மார்ட்டின் சார்கோட் (Jean-Martin Charcot) (1825–1893) என்பவர் அவருடன் இருப்பவரான ஜியார்ஜஸ் ஆல்பர்ட் எட்வார்ட் ப்ரூடஸ் கில்லெஸ் டெ லா டூரெட் (Georges Albert Édouard Brutus Gilles de la Tourette) சார்பாக இந்நோய்க்குறியீடுக்கு இப்பெயரை வைத்தார்.சல்பட்ரையர் மருத்துவமனையைச் சேர்ந்த "மிரட்சியடைந்த" பெண் நோயாளியை வைத்து சார்கோட் பாடம் எடுக்கும் காட்சி படத்தில் இடம்பெற்றிருக்கிறது.

1489 ஆம் ஆண்டு ஜேக்கப் ஸ்ப்ரிங்கர் மற்றும் ஹென்ரிச் கிரெமர் (Jakob Sprenger and Heinrich Kraemer) எழுதிய Malleus maleficarum ("சூனியக்காரியின் சுத்தியல்") என்ற புத்தகத்தில் முதன் முறையாக டூரெட் நோய்குறியீடைப் பற்றி சொல்லப்பட்டிருந்தது. ஒரு மதகுருவின் நடுக்கங்கள் "தீய ஆவியினால் உண்டாவதாக நம்பப்படுவதாக" அந்தப் புத்தகத்தில் விவரிக்கப்பட்டிருந்தது.[76] 1825[77] ஆம் ஆண்டில் பிரெஞ்சு மருத்துவரான ஜீன் மார்க் காஸ்பர்டு இடார்டு (Jean Marc Gaspard Itard) டூரெட் நோய்குறியீடுள்ள நோயாளியைப் பற்றி முதலில் அறிக்கையளித்ததர். அவரது காலத்தில் சமுதாயத்தில் உயர்ந்த இடத்தில் இருந்த பெண்மணியான மார்கஸ் டி டெம்பெயரைப் (Marquise de Dampierre) பற்றி அந்த அறிக்கையில் விவரித்திருந்தார்.[12] ஜீன்-மார்டின் கேர்காட் (Jean-Martin Charcot) என்ற செல்வாக்குமிக்க பிரெஞ்சு மருத்துவர் அவரது சகமருத்துவரான பிரெஞ்சு மருத்துவரும் நரம்பியல் வல்லுனருமான ஜார்ஜஸ் ஆல்பர்ட் எடோர்டு புரூட்டஸ் ஜில்லெஸ் டி லா டூரெட்டேவிடம் (Georges Albert Édouard Brutus Gilles de la Tourette), சல்பட்ரையர் மருத்துவமனையில் இருந்த நோயாளிகளை ஆய்வு செய்து நரம்புத்தளர்ச்சி மற்றும் கொரிய வலிப்பு ஆகியவற்றிலிருந்து வேறுபட்டிருந்த ஒரு நோயைப் பற்றி அறியுமாறு பணித்தார்.[23]

1885 ஆம் ஆண்டில் நரம்புகள் சார்ந்த நோய்க்கான ஆய்வை புரூட்டஸ் ஜில்லெஸ் டி லா டூரெட்டே வெளியிட்டார். ஒன்பது நோயாளிகளைக் கொண்டு ஆய்வு நடத்திய அவர், புதிதான மருத்துவ வகை ஒன்று கண்டிப்பாக வரையறுக்கப்பட வேண்டுமென அந்த ஆய்வில் தெரிவித்திருந்தார்.[78] பின்னர் ஜில்லெஸ் டி லா டூரெட் வின் பெயரை கார்கோட் அந்த நோய்க்கு வைத்தார்.[23][79]

நடுக்கங்களைப் பற்றி விவரிப்பதிலும் சிகிச்சையளிப்பதிலும் அடுத்த நூற்றாண்டில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டது. இருபதாம் நூற்றாண்டின் போது இந்த நோய்க்குறியீட்டினைப் பற்றிய உளவியல் ரீதியான காரணங்களைக் கருத்தில் கொள்ளும் மருத்துவப் பார்வை மேலோங்கியது.[23] 1918-1926 வரை மூளையழற்சி கொள்ளை நோய் பரவி பெரும்பாலானோருக்கு நடுக்கச் சீர்கேடுகள் பாதிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து டூரெட் நோய்க்குறியீடு உள்ளிட்ட இயக்க சீர்கேடுகள் உயிரினங்களின் மூலமாக் வந்திருக்க சாத்தியக்கூறு இருப்பது உணரப்பட்டது.[80]

1960கள் மற்றும் 1970களின் போது நடுக்கங்களுக்கான ஹாலோ பெரிடலின் (Haldol) நலம் பயக்கும் விளைவுகள் அறிந்துகொள்ளப்பட்டது. டூரெட் நோய்க்குறியீட்டிற்கான உளவியல் பகுப்பாய்வு ரீதியான அணுகுமுறைகள் கேள்விக்கு உள்ளாக்கப்பட்டன.[81] 1965 ஆம் ஆண்டில் "நவீன நடுக்கச் சீர்கேடு ஆராய்ச்சியின் தந்தை"[82] என அழைக்கப்பட்ட ஆர்தர் கே. ஷாப்பிரோ டூரெட்ஸ் நோயாளிகளுக்கு ஹாலோபெரிடோலைப் பயன்படுத்தி சிகிச்சையளித்து மருத்துவ அணுகுமுறைகளை விமர்சித்து ஆவணங்களை வெளியிட்ட போது இந்த நோய்க்குறியீட்டிற்கான சிகிச்சை முறையில் திருப்பம் உண்டானது.[80]

1990களிலிருந்து டூரெட்ஸ் பற்றிய பெரும்பாலான நடுநிலையான பார்வைகள் உருவாயின. அதன் படி உயிரியல் ரீதியான நோய் தொற்றிக்கொள்ளும் தன்மை மற்றும் சுற்றுப்புறச் நிகழ்வுகள் ஆகியவையும் குறுக்கிடுவதாகக் கருதப்பட்டது.[6][23] 2000 ஆம் ஆண்டில் அமெரிக்க மனநல அமைப்பு (American Psychiatric Association) டி.எஸ்.எம்-IV-டி.ஆரை வெளியிட்டது. டி.எஸ்.எம்-IV-இன் உரையைத் திருத்தி, நடுக்கச் சீர்கேடுகளின் நோய்க்குறியீடுகளானது கடுந்துன்பம் அல்லது செயல்பாட்டு ரீதியான பலவீனப்படுத்தல் போன்றவற்றுக்கு காரணமாகாது என எழுதப்பட்டது.[83]

1999 ஆம் ஆண்டு முதல் கண்டறிந்த உண்மைகளால் டி.எஸ் அறிவியலானது மரபியல், நரம்பிய இயல்நிலை வரைவு, நரம்பிய உளவியல் மற்றும் நரம்புநோயியல் போன்ற துறைகளில் முன்னேறியது. டூரெட் நோய்க்குறியீட்டை எவ்வளவு சிறப்பாக வகைப்படுத்தலாம் என்பதிலும், மற்ற இயக்க சீர்கேடுகள் அல்லது மனநல சீர்கேடுகளை சார்ந்து எவ்வளவு நெருக்கமாக டூரெட்ஸ் உள்ளது என்பதிலும் கேள்விகள் இன்னும் எழுகின்றன. கொள்ளை நோய் பற்றிய சரியான தரவை இன்றும் பெறமுடியவில்லை. மேலும் தற்போது அளிக்கப்படும் சிகிச்சைகள் அபாயங்களுடனும் எப்போதும் பொறுத்துக்கொள்ள முடியாததாகவே உள்ளன.[84] உயர்-விவர ஊடகமானது ஆழமான மூளை கிளர்ச்சியூட்டல் போன்ற பாதுகாப்பு அல்லது செயல்படுத்தும் திறன் உறுதியடையாத சிகிச்சைகளில் கவனம் செலுத்துகின்றன. செயல்திறன் மற்றும் பக்க விளைவுகளைப் பற்றி ஆய்வு செய்யப்படாத மாற்று சிகிச்சை முறைகளை பல பெற்றோர்கள் பின்பற்றுகின்றனர்.[37]

சமூகம் மற்றும் பண்பாடு[தொகு]

Half-length portrait of a large, squinting man with a fleshy face, dressed in brown and wearing an 18th-century wig
சாமுவேல் ஜான்சன் (Samuel Johnson) (1709–1784) சுமார் 1772. ஜான்சன் டூரெட் நோய்க்குறி உடையவராக இருந்திருக்க வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.

டூரெட்ஸ் நோய்க்குறியீட்டால் பாதிக்கப்பட்டுள்ள அனைவருக்குமே சிகிச்சையோ மருந்தோ தேவையில்லை. குறிப்பாக, சிகிச்சையின் காரணமாக அவர்களுக்கு ஏதேனும் "இழப்பு" ஏற்படலாம் என்ற நிலையில் இவை கண்டிப்பாக தேவையில்லை.[85][86] இந்த பாதிப்புக்கு உட்படும் மரபியல் ரீதியான தன்மையினால் ஏதேனும் நன்மைகள் இருக்கலாம் என சிலர் நம்புகின்றனர்.[86] "டி.எஸ் மட்டும்" (இரு நோய் பாதிப்பு இல்லாத நிலையுடைய டூரெட்ஸ் ) பாதிக்கப்பட்டுள்ள சிறுவர்கள் வழக்கத்திற்கு மாறாக தனித்திறமை பெற்றிருப்பதாக மருத்துவ அறிக்கைகள் உள்ளதாக ஆதாரங்கள் உள்ளன: டி.எஸ் மட்டும் பாதிக்கப்பட்டுள்ள சிறுவர்களிடம் உள்ள நன்மைகளை நரம்பிய உளவியல் ஆய்வுகள் கண்டறிந்துள்ளன.[28][87] டி.எஸ் மட்டும் பாதிக்கப்பட்டுள்ள சிறுவர்கள் தங்களை ஒத்த வயதுடையவர்களைவிட வேகமாக செயல்படுகிறார்கள் என இயக்க ஒருங்கிணைவுடைய காலச் சோதனைகளில் கண்டறியப்பட்டதாக ஒரு ஆய்வு கூறுகிறது.[88]

இசைக் கலைஞர்கள், தடகள வீரர்கள் மற்றும் கதையாசிரியர்கள் என அனைத்துத் துறைகளிலும் டூரெட் நோய்க்குறியீடு பாதிப்புக்குள்ளான பிரபலங்கள் பலர் உள்ளனர். மனதை அலைக்கழிக்கும் இயல்புகளை அனுகூலமாக பயன்படுத்தியதற்கு மிகச் சிறந்த உதாரணமாக பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஆங்கில எழுத்தாளர் சாமுவேல் ஜான்சன் (Samuel Johnson) உள்ளார். அவருக்கு டூரெட்ஸ் நோய்க்குறியீடு இருந்ததற்கான ஆதாரத்தை ஜேம்ஸ் போஸ்வெல் (James Boswell) வெளியிட்டிருந்தார்.[89][90] 1747 ஆம் ஆண்டு ஆங்கில மொழி அகராதி யை ஜான்சன் எழுதினார். அவர் ஒரு மிகச்சிறந்த எழுத்தாளராகவும், கவிஞராகவும், விமர்சகராகவும் இருந்தார்.

மொசார்ட்டுக்கும் (Mozart) டூரெட்ஸ் இருந்ததாக ஊகஞ்செய்யப்பட்டாலும்,[91][92] அதற்கான நம்பகமான ஆதாரங்களை எந்த நிறுவனமும் வல்லுநர்களும் சமர்ப்பிக்கவில்லை[92]. ஏற்கனவே உள்ள ஆதாரங்களிலும் பிரச்சினைகள் உள்ளன.[93]

பொழுதுபோக்குத் துறையானது, டூரெட் நோய்க்குறியீடுடன் உள்ளவர்களை இழி மொழி குறைபாடு நடுக்கம் மட்டுமே கொண்டுள்ளவர்களாகவும் நையாண்டி செய்யும் விதமாகவும் சமுதாயத்திற்குப் பொருந்தாதவர்கள் போல கேலி செய்வதாக விமர்சிக்கப்படுகிறது. பொழுதுபோக்குத் துறையில் அவ்வாறு செய்வதால் டூரெட்ஸ் நோய்க்குறியீட்டால் பாதிக்கப்பட்டுள்ளவர்களை பொதுமக்கள் தவறாகக் கருதுகின்றனர்.[94] டூரெட்ஸ் நோய்க்குறியீட்டின் இழி மொழிக் குறைபாடானது, ஐக்கிய ஒன்றியம்[95] மற்றும் பிரிட்டிஷ் ஊடகங்களின் வானொலி மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கும் தீனியாக உள்ளது.[96]

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 Schapiro NA. "Dude, you don't have Tourette's:" Tourette's syndrome, beyond the tics. Pediatr Nurs. 2002 May–Jun;28(3):243–6, 249–53. PubMed Full text (free registration required).
  2. 2.0 2.1 Lombroso PJ, Scahill L. "Tourette syndrome and obsessive–compulsive disorder". Brain Dev . 2008 Apr;30(4):231–7. PubMed
  3. 3.0 3.1 3.2 Tourette Syndrome Fact Sheet பரணிடப்பட்டது 2005-03-23 at the வந்தவழி இயந்திரம். National Institute of Neurological Disorders and Stroke/National Institutes of Health (NINDS/NIH),February 14, 2007. Retrieved on May 14, 2007.
  4. 4.0 4.1 4.2 4.3 Scahill L, Williams S, Schwab-Stone M, Applegate J, Leckman JF. "Disruptive behavior problems in a community sample of children with tic disorders". Adv Neurol. 2006;99:184–90. PubMed
  5. Portraits of adults with TS. Tourette Syndrome Association. Retrieved on January 4, 2007.
  6. 6.00 6.01 6.02 6.03 6.04 6.05 6.06 6.07 6.08 6.09 6.10 6.11 6.12 6.13 6.14 6.15 6.16 6.17 6.18 6.19 Zinner (2000).
  7. Peterson BS, Cohen DJ. "The treatment of Tourette's Syndrome: multimodal, developmental intervention". J Clin Psychiatry. 1998;59 Suppl 1:62–72; discussion 73–4. PubMed. Quote: "Because of the understanding and hope that it provides, education is also the single most important treatment modality that we have in TS."
  8. 8.0 8.1 8.2 8.3 8.4 8.5 8.6 8.7 8.8 Leckman JF, Bloch MH, King RA, Scahill L. "Phenomenology of tics and natural history of tic disorders". Adv Neurol. 2006;99:1–16. PubMed
  9. 9.0 9.1 American Psychiatric Association (2000). DSM-IV-TR: Tourette's Disorder. Diagnostic and Statistical Manual of Mental Disorders , 4th ed., text revision (DSM-IV-TR), ISBN 0-89042-025-4. Available at BehaveNet.com Retrieved on August 10, 2009.
  10. ICD Version 2007. World Health Organization. Retrieved on August 10, 2009.
  11. 11.0 11.1 11.2 11.3 11.4 11.5 11.6 Bagheri, Kerbeshian & Burd (1999).
  12. 12.0 12.1 12.2 12.3 What is Tourette syndrome? Tourette Syndrome Association. Archived May 24, 2006.
  13. 13.0 13.1 The Tourette Syndrome Classification Study Group. "Definitions and classification of tic disorders". Arch Neurol. 1993 Oct;50(10):1013–16. PubMed Archived April 26, 2006.
  14. 14.0 14.1 14.2 14.3 14.4 Dure LS 4th, DeWolfe J. "Treatment of tics". Adv Neurol. 2006;99:191–96. PubMed
  15. 15.00 15.01 15.02 15.03 15.04 15.05 15.06 15.07 15.08 15.09 Singer HS. "Tourette's syndrome: from behaviour to biology". Lancet Neurol. 2005 Mar;4(3):149–59. PubMed
  16. Malone DA Jr, Pandya MM. "Behavioral neurosurgery". Adv Neurol. 2006;99:241–47. PubMed
  17. Jankovic J. "Differential diagnosis and etiology of tics". Adv Neurol. 2001;85:15–29. PubMed
  18. "Sensory phenomena in obsessive-compulsive disorder and tic disorders: a review of the literature". CNS Spectr 13 (5): 425–432. May 2008. doi:10.1017/s1092852900016606. பப்மெட்:18496480. http://www.cnsspectrums.com/aspx/article_pf.aspx?articleid=1540. 
  19. 19.0 19.1 Kwak C, Dat Vuong K, Jankovic J. "Premonitory sensory phenomenon in Tourette's syndrome". Mov Disord . 2003 Dec;18(12):1530–33. PubMed
  20. 20.0 20.1 20.2 20.3 20.4 20.5 20.6 20.7 20.8 Swain JE, Scahill L, Lombroso PJ, King RA, Leckman JF. "Tourette syndrome and tic disorders: a decade of progress". J Am Acad Child Adolesc Psychiatry . 2007 Aug;46(8):947–68 PubMed
  21. Scahill LD, Leckman JF, Marek KL. "Sensory phenomena in Tourette's syndrome". Adv Neurol . 1995;65:273–80. PubMed
  22. Miguel EC, do Rosario-Campos MC, Prado HS, et al. "Sensory phenomena in obsessive–compulsive disorder and Tourette's disorder". J Clin Psychiatry. 2000 Feb;61(2):150–56. PubMed
  23. 23.0 23.1 23.2 23.3 23.4 23.5 Black, KJ. Tourette Syndrome and Other Tic Disorders. eMedicine (March 30, 2007). Retrieved on August 10, 2009.
  24. 24.0 24.1 24.2 24.3 Leckman JF, Zhang H, Vitale A, et al. "Course of tic severity in Tourette syndrome: the first two decades" பரணிடப்பட்டது 2012-01-13 at the வந்தவழி இயந்திரம் (PDF). Pediatrics. 1998;102 (1 Pt 1):14–19. PubMed. Retrieved on October 28, 2006.
  25. 25.0 25.1 Rapin I. "Autism spectrum disorders: relevance to Tourette syndrome". Adv Neurol. 2001;85:89–101. PubMed
  26. 26.0 26.1 26.2 Spencer T, Biederman J, Harding M, et al. "Disentangling the overlap between Tourette's disorder and ADHD". J Child Psychol Psychiatry . 1998 Oct;39(7):1037–44. PubMed
  27. 27.0 27.1 Denckla MB. "Attention-deficit hyperactivity disorder (ADHD) comorbidity: a case for "pure" Tourette syndrome?" J Child Neurol . 2006 Aug;21(8):701–3. PubMed
  28. 28.0 28.1 28.2 28.3 28.4 28.5 Denckla MB. "Attention deficit hyperactivity disorder: the childhood co-morbidity that most influences the disability burden in Tourette syndrome". Adv Neurol. 2006;99:17–21. PubMed
  29. 29.0 29.1 29.2 Walkup JT, Mink JW, Hollenback PJ, (eds). Advances in Neurology, Vol. 99, Tourette Syndrome. Lippincott, Williams & Wilkins, Philadelphia, PA, 2006, p. xv. ISBN 0-7817-9970-8 பிழை காட்டு: Invalid <ref> tag; name "AN2intro" defined multiple times with different content
  30. Robertson MM (2000), p. 425.
  31. Asmus F, Schoenian S, Lichtner P et al. "Epsilon-sarcoglycan is not involved in sporadic Gilles de la Tourette syndrome". Neurogenetics 2005;6(1):55–6. PubMed
  32. 32.0 32.1 32.2 Mejia NI, Jankovic J. "Secondary tics and tourettism" (PDF). Rev Bras Psiquiatr . 2005;27(1):11–17. PubMed
  33. van de Wetering BJ, Heutink P. "The genetics of the Gilles de la Tourette syndrome: a review". J Lab Clin Med. 1993 May;121(5):638–45. PubMed
  34. 34.0 34.1 34.2 34.3 34.4 Tourette Syndrome: Frequently Asked Questions. Tourette Syndrome Association. Archived January 6, 2006.
  35. Swedo SE, Leonard HL, Garvey M, et al. . "Pediatric autoimmune neuropsychiatric disorders associated with streptococcal infections: clinical description of the first 50 cases" பரணிடப்பட்டது 2011-06-11 at the வந்தவழி இயந்திரம் (PDF). Am J Psychiatry. 1998 Feb;155(2):264–71. PubMed Retrieved on September 11, 2007.
  36. PANDAS. NIH. Retrieved on November 25, 2006.
  37. 37.0 37.1 Swerdlow, NR. "Tourette Syndrome: Current Controversies and the Battlefield Landscape". Curr Neurol Neurosci Rep . 2005, 5:329–31. PubMed
  38. Immune activation:
  39. Haber SN, Wolfer D. "Basal ganglia peptidergic staining in Tourette syndrome. A follow-up study". Adv Neurol . 1992;58:145–50. PubMed
    * Peterson B, Riddle MA, et al. "Reduced basal ganglia volumes in Tourette's syndrome using three-dimensional reconstruction techniques from magnetic resonance images". Neurology. 1993;43:941–49. PubMed
    * Moriarty J, Varma AR, et al. "A volumetric MRI study of Gilles de la Tourette's syndrome". Neurology. 1997;49:410–5. PubMed
  40. Pauls DL, Towbin KE, Leckman JF, et al. "Gilles de la Tourette's syndrome and obsessive–compulsive disorder. Evidence supporting a genetic relationship". Arch Gen Psychiatry. 1986 Dec;43(12):1180–82. PubMed
  41. Miguel EC, do Rosario-Campos MC, Shavitt RG, et al. "The tic-related obsessive–compulsive disorder phenotype and treatment implications". Adv Neurol. 2001;85:43–55. PubMed
  42. Summary of Practice: Relevant changes to DSM-IV-TR. பரணிடப்பட்டது 2008-05-11 at the வந்தவழி இயந்திரம் Diagnostic and Statistical Manual of Mental Disorders. Retrieved on January 25, 2007.
  43. 43.0 43.1 43.2 43.3 43.4 43.5 Scahill L, Erenberg G, Berlin CM Jr, Budman C, Coffey BJ, Jankovic J, Kiessling L, King RA, Kurlan R, Lang A, Mink J, Murphy T, Zinner S, Walkup J; Tourette Syndrome Association Medical Advisory Board: Practice Committee. "Contemporary assessment & pharmacotherapy of Tourette syndrome". NeuroRx. 2006 Apr;3(2):192–206. PubMed
  44. Ringman JM, Jankovic J."Occurrence of tics in Asperger's syndrome and autistic disorder". J Child Neurol. 2000 Jun;15(6):394–400. PubMed
  45. Jankovic J, Mejia NI. "Tics associated with other disorders". Adv Neurol. 2006;99:61–8. PubMed
  46. Freeman, RD. Tourette's Syndrome: minimizing confusion. Roger Freeman, MD, blog. Retrieved on February 8, 2006.
  47. Sukhodolsky DG, Scahill L, Zhang H, et al. "Disruptive behavior in children with Tourette's syndrome: association with ADHD comorbidity, tic severity, and functional impairment". J Am Acad Child Adolesc Psychiatry . 2003 Jan;42(1):98 –105. PubMed
    * Hoekstra PJ, Steenhuis MP, Troost PW, et al. "Relative contribution of attention-deficit hyperactivity disorder,obsessive–compulsive disorder, and tic severity to social and behavioral problems in tic disorders". J Dev Behav Pediatr . 2004 Aug;25(4):272–79. PubMed
    * Carter AS, O'Donnell DA, Schultz RT, et al. "Social and emotional adjustment in children affected with Gilles de la Tourette's syndrome: associations with ADHD and family functioning. Attention Deficit Hyperactivity Disorder". J Child Psychol Psychiatry . 2000 Feb;41(2):215–23. PubMed
  48. Robertson MM, (2000), p. 435.
  49. 49.0 49.1 Stern JS, Burza S, Robertson MM. "Gilles de la Tourette's syndrome and its impact in the UK". Postgraduate Medicine Journal. 2005 Jan;81(951):12–9. PubMed
  50. Medication trade names may differ between countries. In general, this article uses North American trade names.
  51. Coffey BJ, Shechter RL. "Treatment of co-morbid obsessive compulsive disorder, mood, & anxiety disorders". Adv Neurol. 2006;99:208–21. PubMed
  52. Himle MB, Woods DW, Piacentini JC, Walkup JT. "Brief review of habit reversal training for tourette syndrome". J Child Neurol. 2006 Aug;21(8):719–25. PubMed
  53. Woods DW, Himle MB, Conelea CA. "Behavior therapy: other interventions for tic disorders". Adv Neurol. 2006;99:234–40. PubMed
  54. Kammer T. "Mozart in the neurological department—who has the tic?" (PDF).Front Neurol Neurosci. 2007;22:184–92. PubMed [131] Retrieved on September 10, 2007
  55. What is Tourette Syndrome? Tourette Syndrome Foundation of Canada. Retrieved on 2010-01-15.
  56. Todd, Olivier. Malraux: A Life. Knopf, 2005.
  57. Guidotti TL. André Malraux: a medical interpretation (PDF). J R Soc Med. 1985 May;78(5):401–6. PubMed
  58. Liebmann, Lisa. Lisa Liebmann on the Mona Lisa. TATEetc. Issue 6 / Spring 2006. Retrieved on March 1, 2008.
  59. 59.0 59.1 Pappert EJ, Goetz CG, Louis ED, et al. "Objective assessments of longitudinal outcome in Gilles de la Tourette's syndrome." Neurology. 2003 Oct 14;61(7):936–40. PubMed
  60. Burd L, Kerbeshian PJ, Barth A, et al. "Long-term follow-up of an epidemiologically defined cohort of patients with Tourette syndrome". J Child Neurol . 2001;16(6):431–37. PubMed
  61. Soccer Goalie with Tourette Syndrome Gains International Attention as Role Model. Tourette Syndrome Association press release, July 25, 2003. Retrieved on March 1, 2008.
  62. Leckman & Cohen (1999), p. 37. "For example, individuals who were misunderstood and punished at home and at school for their tics or who were teased mercilessly by peers and stigmatized by their communities will fare worse than a child whose interpersonal environment was more understanding and supportive."
  63. Cohen DJ, Leckman JF, Pauls D. "Neuropsychiatric disorders of childhood: Tourette’s syndrome as a model". Acta Paediatr Suppl 422; 106–11, Scandinavian University Press, 1997. "The individuals with TS who do the best, we believe, are: those who have been able to feel relatively good about themselves & remain close to their families; those who have the capacity for humor and for friendship; those who are less burdened by troubles with attention and behavior, particularly aggression; and those who have not had development derailed by medication."
  64. 64.0 64.1 Robertson MM. "The prevalence and epidemiology of Gilles de la Tourette syndrome. Part 1: the epidemiological and prevalence studies". J Psychosom Res. 2008 Nov;65(5):461–72. PubMed
  65. Bagheri, Kerbeshian and Burd (1999) report that TS is "three to nine times more frequent in males than in females". Zinner (2000) says, "Data from most studies suggest ...[a] male:female ratio typically ranging from 2:1 to 4:1." Leckman & Cohen (1999), p.180, Table 10.1 report a range based on six studies of 1.6:1 to 9.3:1 male:female ratio. Robertson part 1 (2008), p. 465 says, "All studies agree that GTS occurs more in males than in females, with a figure of approximately 4:1." The most commonly reported ratio (3:1 to 4:1) is from the Tourette Syndrome Association's "What is Tourette syndrome?" and the NINDS/NIH Tourette Syndrome Fact Sheet.
  66. Leckman JF, Peterson BS, Pauls DL, Cohen DJ. "Tic disorders". Psychiatr Clin North Am. 1997 Dec;20(4):839–61. PubMed
  67. 67.0 67.1 Robertson MM. "The prevalence and epidemiology of Gilles de la Tourette syndrome. Part 2: tentative explanations for differing prevalence figures in GTS, including the possible effects of psychopathology, aetiology, cultural differences, and differing phenotypes". J Psychosom Res. 2008 Nov;65(5):473–86. PubMed
  68. Cohen DJ, Jankovic J, Goetz CG, (eds). Advances in neurology, Vol. 85, Tourette syndrome. Lippincott, Williams & Wilkins, Philadelphia, PA, 2001, p. xviii. ISBN 0-19-850717-8.
  69. Abuzzahab FE, Anderson FO. "Gilles de la Tourette's syndrome; international registry". Minnesota Medicine . 1973 Jun;56(6):492–6. PubMed
  70. Scahill, L. "Epidemiology of Tic Disorders". Medical Letter: 2004 Retrospective Summary of TS Literature. Tourette Syndrome Association. The first page (PDF), is available without subscription. Retrieved on June 11, 2007.
    * Kadesjö B, Gillberg C. "Tourette's disorder: epidemiology and comorbidity in primary school children". J Am Acad Child Adolesc Psychiatry . 2000 May;39(5):548–55. PubMed
    * Kurlan R, McDermott MP, Deeley C, et al. "Prevalence of tics in schoolchildren and association with placement in special education". Neurology. 2001 Oct 23;57(8):1383–8. PubMed
    * Khalifa N, von Knorring AL. "Prevalence of tic disorders and Tourette syndrome in a Swedish school population". Dev Med Child Neurol . 2003 May;45(5):315–19. PubMed
    * Hornsey H, Banerjee S, Zeitlin H, Robertson M. "The prevalence of Tourette syndrome in 13–14-year-olds in mainstream schools". J Child Psychol Psychiatry . 2001 Nov;42(8):1035–39. PubMed
  71. 71.0 71.1 Scahill, L. "Epidemiology of Tic Disorders". Medical Letter: 2004 Retrospective Summary of TS Literature. Tourette Syndrome Association. The first page (PDF), is available without subscription. Retrieved on June 11, 2007.
  72. Zohar AH, Apter A, King RA et al. "Epidemiological studies". In J.F. Leckman & D.J. Cohen (Eds.), Tourette's syndrome – tics, obsessions, compulsions: Developmental psychopathology and clinical care (pp. 177–92). Wiley & Sons, 1999. ISBN 0-415-92151-1.
  73. Coffey BJ, Park KS. "Behavioral and emotional aspects of Tourette syndrome". Neurol Clin. 1997 May;15(2):277–89. PubMed
  74. Hawley, JS. Tourette Syndrome. eMedicine (June 23, 2008). Retrieved on August 10, 2009.
  75. Leckman JF. "Tourette's syndrome". Lancet. 2002 Nov 16;360(9345):1577–86. PubMed
  76. Teive HA, Chien HF, Munhoz RP, Barbosa ER. "Charcot's contribution to the study of Tourette's syndrome". Arq Neuropsiquiatr . 2008 Dec;66(4):918–21. PubMed as reported in Finger S. "Some movement disorders." In Finger S (ed). Origins of neuroscience: the history of explorations into brain function. New York: Oxford University Press, 1994:220–239.
  77. Itard JMG. "Mémoire sur quelques functions involontaires des appareils de la locomotion, de la préhension et de la voix". Arch Gen Med. 1825;8:385–407. From Newman, Sara. "Study of several involuntary functions of the apparatus of movement, gripping, and voice" by Jean-Marc Gaspard Itard (1825) History of Psychiatry . 2006 17: 333–39. எஆசு:10.1177/0957154X06067668
  78. Gilles de la Tourette G, Goetz CG, Llawans HL, trans. "Étude sur une affection nerveuse caractérisée par de l'incoordination motrice accompagnée d'echolalie et de coprolalie". In: Friedhoff AJ, Chase TN, eds. Advances in Neurology: Volume 35. Gilles de la Tourette syndrome. New York: Raven Press; 1982;1–16. Discussed at Black, KJ. Tourette Syndrome and Other Tic Disorders. eMedicine (March 30, 2007). Retrieved on August 10, 2009. Original text (in French). Retrieved on August 10, 2009.
  79. Enersen, Ole Daniel. Georges Albert Édouard Brutus Gilles de la Tourette. WhoNamedIt.com Retrieved on May 14, 2007.
  80. 80.0 80.1 Blue, Tina. Tourette syndrome. பரணிடப்பட்டது 2008-04-12 at the வந்தவழி இயந்திரம் Essortment 2002. Pagewise Inc. Retrieved on August 10, 2009.
  81. Rickards H, Hartley N, Robertson MM. "Seignot's paper on the treatment of Tourette's syndrome with haloperidol. Classic Text No. 31". Hist Psychiatry. 1997 Sep;8 (31 Pt 3):433–36. PubMed
  82. Gadow KD, Sverd J. "Attention deficit hyperactivity disorder, chronic tic disorder, and methylphenidate". Adv Neurol. 2006;99:197–207. PubMed
  83. What is DSM-IV-TR? பரணிடப்பட்டது 2010-09-08 at the வந்தவழி இயந்திரம் Psychnet-UK. Retrieved on May 14, 2007.
  84. Walkup JT, Mink JW, Hollenback PJ, (eds). (2006) pp. xvi–xviii
  85. Sacks, O (1985). The man who mistook his wife for a hat: and other clinical tales . Harper and Row, New York, pp. 92–100. ISBN 0-415-92151-1.
  86. 86.0 86.1 Leckman & Cohen (1999), p. 408. ISBN 0-415-92151-1.
  87. Schuerholz LJ, Baumgardner TL, Singer HS, et al. "Neuropsychological status of children with Tourette's syndrome with and without attention deficit hyperactivity disorder". Neurology. 1996 Apr;46(4):958–65. PubMed
  88. Schuerholz LJ, Cutting L, Mazzocco MM, et al. "Neuromotor functioning in children with Tourette syndrome with and without attention deficit hyperactivity disorder". J Child Neurol. 1997 Oct;12(7):438–42. PubMed
  89. Samuel Johnson. Tourette Syndrome Association. Archived April 7, 2005.
  90. Pearce JM. "Doctor Samuel Johnson: 'the great convulsionary' a victim of Gilles de la Tourette's syndrome" (PDF). Journal of the Royal Society of Medicine . 1994 Jul;87(7):396–9. PubMed
  91. Simkin, Benjamin. Medical and Musical Byways of Mozartiana. Fithian Press, 2001. ISBN 1-56474-349-7 Review பரணிடப்பட்டது 2005-12-07 at the வந்தவழி இயந்திரம், Retrieved on May 14, 2007.
    * Simkin B. "Mozart's scatological disorder". BMJ . 1992 Dec 19–26;305(6868):1563–7. PubMed
  92. 92.0 92.1 Did Mozart really have TS? Tourette Syndrome Association. Archived April 7, 2005.
  93. Kammer T. " பரணிடப்பட்டது 2012-02-07 at the வந்தவழி இயந்திரம்Mozart in the neurological department—who has the tic?" பரணிடப்பட்டது 2012-02-07 at the வந்தவழி இயந்திரம் (PDF). Front Neurol Neurosci. 2007;22:184–92. PubMed எஆசு:10.1159/0000102880 Retrieved on September 10, 2007
    * Ashoori A, Jankovic J. "Mozart's movements and behaviour:a case of Tourette's syndrome?" J Neurol Neurosurg Psychiatry . 2007 Nov;78(11):1171–5 எஆசு:10.1136/jnnp.2007.114520 PubMed.
    * Sacks O. "Tourette's syndrome and creativity". BMJ. 1992 Dec 19–26;305(6868):1515–6. PubMed
  94. Holtgren, Bruce. "Truth about Tourette's not what you think". Cincinnati Enquirer (January 11, 2006). "As medical problems go, Tourette's is, except in the most severe cases, about the most minor imaginable thing to have. ... the freak-show image, unfortunately, still prevails overwhelmingly. The blame for the warped perceptions lies overwhelmingly with the video media – the Internet, movies and TV. If you search for 'Tourette' on Google or YouTube, you'll get a gazillion hits that almost invariably show the most outrageously extreme examples of motor and vocal tics. Television, with notable exceptions such as Oprah, has sensationalized Tourette's so badly, for so long, that it seems beyond hope that most people will ever know the more prosaic truth."
  95. Oprah and Dr.Laura – Conflicting Messages on Tourette Syndrome. Oprah Educates; Dr. Laura Fosters Myth of TS as "Cursing Disorder" Tourette Syndrome Association (May 31, 2001). Archived October 6, 2001.
    * [http://www.tsa-usa.org/news/DrPhil.htm Letter of response to Dr. Phil.
    Tourette Syndrome Association. Retrieved on May 8, 2006.
    * Letter of response to Garrison Keillor radio show. Tourette Syndrome Association. Retrieved on May 8, 2006.
    * Big Brother: Tourette's housemate 'exploited'. Mail online, (May 19, 2006). Retrieved on September 19, 2008.
  96. Guldberg, Helene. Stop celebrating Tourette's. Spiked (May 26, 2006). Retrieved on December 26, 2006.

குறிப்புதவிகள்[தொகு]

மேலும் படிக்க[தொகு]

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தூரெட்_நோய்க்குறியீடு&oldid=3759589" இலிருந்து மீள்விக்கப்பட்டது