மண்டூகம் (சிற்பநூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்தியச் சிற்ப மரபில் மண்டூகம் அல்லது சண்டிதம் என்பது, 32 வகைகளாகச் சொல்லப்படும் தள அமைப்புக்களில் ஒன்று. "மண்டூகம்" என்பது சமசுக்கிருத மொழியில் "தவளை" என்னும் பொருள் தருவது. இது ஒவ்வொரு பக்கமும் எட்டாகப் பிரிக்கப்பட்டு மொத்தம் அறுபத்து நான்கு (8 x 8) பதங்களைக் (நிலத்துண்டு) கொண்டது. இந்த அமைப்பில், நடுவில் வரக்கூடிய நான்கு பதங்கள் பிரம்மாவுக்கு உரியன. மீதியுள்ள அறுபது பதங்களுள் சில பதங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு தேவருக்கு உரியவை. சில இடங்களில் இரண்டு பதங்களைச் சேர்த்து ஒருவருக்கு உரித்தாக்கப்பட்டு உள்ளன. வேறு சில பதங்கள் ஒவ்வொன்றும் இரண்டாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவும் (அரைப் பதம்) வெவ்வேறு தேவர்களின் பதங்களாக அமைகின்றன. இவ்வாறு 64 பதங்களில் உருவாகும் மொத்தம் 45 பிரிவுகள் 45 தேவர்களுக்கு உரியவையாக உள்ளன.

குறிப்புகள்[தொகு]

உசாத்துணைகள்[தொகு]

  • Acharya, Prasanna Kumar., Architecture of Manasara, Translated from Original Sanskrit Text, New Barathiya Book Corporation, Delhi, 2010.
  • பவுன்துரை, இராசு., தமிழகக் கோயிற்கட்டடக்கலை மரபு - மயன் அறிவியல் தொழில்நுட்பம், மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம், 2004.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மண்டூகம்_(சிற்பநூல்)&oldid=1641056" இலிருந்து மீள்விக்கப்பட்டது