லால்குடி விஜயலட்சுமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(லால்குடி விஜயலக்சுமி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

இலால்குடி விஜயலட்சுமி தமிழ்நாட்டைச் சேர்ந்த கருநாடக இசைக் கலைஞர் ஆவார். இவர் ஒரு வயலின் கலைஞர் மற்றும் பாடகர்.

பிறப்பும், இசைப் பயிற்சியும்[தொகு]

இவர், வயலின் மேதை இலால்குடி ஜெயராமனுக்கு மகளாக 1963 ஆம் ஆண்டில் பிறந்தார். தனது இளம் வயதில் கருநாடக இசைப் பயிற்சியை தனது தாத்தா வீ. ஆர். கோபால ஐயரிடமிருந்து பெறத் தொடங்கினார். தொடர்ந்து தனது தந்தை இலால்குடி ஜெயராமனிடம் கற்றுத் தேர்ந்தார். இவரின் சகோதரராகிய இலால்குடி ஜி. ஜே. ஆர். கிருஷ்ணனும் ஒரு வயலின் கலைஞர் ஆவார்.

இசை வாழ்க்கை[தொகு]

ஒரு வயலின் கலைஞராக 1979 ஆம் ஆண்டு தனது இசைப் பயணத்தை தொடங்கினார். தனது சகோதரருடன் இணைந்து வயலின் வாசித்து இசை நிகழ்ச்சிகள் நடத்துகிறார். கருநாடக இசைப் பாடகர்களுக்கு பக்க வாத்தியமாகவும் வயலின் வாசித்து வருகிறார்.

பெற்ற விருதுகள்[தொகு]

  • சங்கீத சூடாமணி விருது, 2009 வழங்கியது: ஸ்ரீ கிருஷ்ண கான சபா, சென்னை
  • நாத சேவிகா பட்டம், 2014; வழங்கியது: நாதபிரம்மம் இசை இதழ்[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. ‘Naada Kovida’ title for T.V. Gopalakrishnan, தி இந்து, டிசம்பர் 15,2014

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=லால்குடி_விஜயலட்சுமி&oldid=3915571" இலிருந்து மீள்விக்கப்பட்டது