குருகு (குன்றம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குருகு பெயர்க் குன்றம் என்பது கௌஞ்சமலை. ‘நாவலந் தண்பொழில்’ என்னும் தமிழகத்துக்கும், வடபொழில் எனப்பட்ட வட-இந்தியாவுக்கும் இடையில் இந்த மலை இது. கௌஞ்சம் என்றும், கிரவுஞ்சம் என்றும் வடசொல்லால் வழங்கப்படும் பறவை குருகு என்னும் தமிழ்ச்சொல்லால் குறிக்கப்படும். [1] [2]

இதனை முருகப்பெருமான் உடைத்தான் என்னும் செய்தி புராணக் கதைகளில் வருகிறது. [3] [4] [5]

அடிக்குறிப்பு[தொகு]

  1. நாவலந் தண்பொழில் வடபொழில் ஆயிடைக் குருகொடு பெயர் பெற்ற மால்வரை உடைத்து (பரிபாடல் 5-9)
  2. டாக்டர் உ வே. சாமிநாதய்யர் அடிக்குறிப்பு
  3. குருகு பெயர்க் குன்றம் சிலப்பதிகாரம் 24-9-4 24-11-4
  4. மணிமேகலை 5-13
  5. குருகு எறி வேலோய் - பரிபாடல் 19-36
"https://ta.wikipedia.org/w/index.php?title=குருகு_(குன்றம்)&oldid=1611582" இலிருந்து மீள்விக்கப்பட்டது