வளிம வண்ணப்படிவுப் பிரிகை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வளிம வண்ணப்படிவுப் பிரிகை
ஒரு வண்ணப்படிவுப் பிரிகைக் கருவி
சுருக்கம்GC
வகுப்புவண்ணப்படிவுப் பிரிகை
பகுப்பாய்வுக் கூறுகள்கரிம
கனிம
எளிதில் ஆவியாகும் தன்மை கொண்டதாக இருக்கவேண்டும்.
பிற நுட்பங்கள்
தொடர்பு உள்ளவைமென்படல வண்ணப்படிவுப் பிரிகை
உயர் செயற்றிற நீர்ம வண்ணப்படிவுப் பிரிகை
இணைந்தவைவளிம வண்ணப்படிவுப் பிரிகை-பொருண்மைப் பிரிகை

வளிம வண்ணப்படிவுப் பிரிகை (Gas chromatography) என்பது வண்ணப்படிவுப் பிரிகையின் பொதுவான ஒரு வகை ஆகும். இது பகுப்பாய்வு வேதியியலில், சிதைவடையாமல் ஆவியாகக் கூடிய சேர்வைகளைப் பிரித்துப் பகுப்பாய்வு செய்வதற்குப் பயன்படுகிறது. குறித்த பொருளொன்றின் தூய்மையைச் சோதித்தல், ஒரு கலவையில் உள்ள வேறுபட்ட கூறுகளைப் பிரித்து எடுத்தல் போன்றவற்றுக்கு வண்ணப்படிவுப் பிரிகை முறை பயன்படுத்தப்படுகின்றது. சில வேளைகளில் சேர்வையை அடையாளம் காண்பதற்கும் இந்த முறை பயன்படுவதுண்டு. முன்னொருக்க வண்ணப்படிவுப் பிரிகை முறையில் கலப்புள்ள சேர்வையிலிருந்து தேவையான அளவுக்குத் தூய்மையான சேர்வையைத் தயாரிப்பதற்கும் இம்முறையைப் பயன்படுத்துகின்றனர்.[1][2]

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Pavia, Donald L., Gary M. Lampman, George S. Kritz, Randall G. Engel (2006). Introduction to Organic Laboratory Techniques (4th Ed.). Thomson Brooks/Cole. பக். 797–817. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-495-28069-9. 
  2. "Gas Chromatography". Linde AG. Archived from the original on 17 ஜூலை 2013. பார்க்கப்பட்ட நாள் 11 March 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

வெளியிணைப்புக்கள்[தொகு]