சோகாமேளர் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சோகாமேளர்
இயக்கம்சி. வி. ராமன்
தயாரிப்புவிஜயமாருதி பிக்சர்சு, மதராஸ்
கதைஜி. சுந்தர பாகவதர்
இசைஜி. சுந்தர பாகவதர்
நடிப்புகொத்தமங்கலம் சீனு
எம். ஆர். ராதா
கொளத்து மணி
கே. அரங்கநாயகி
டி. கே. புஷ்பவல்லி
பி. எஸ். ஞானம்
வெளியீடு1942
நீளம்15856 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

சோகாமேளர் 1942 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சி. வி. ராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கொத்தமங்கலம் சீனு, எம். ஆர். ராதா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.[1]

கொத்தமங்கலம் சீனு (வி. எஸ். சிறிநிவாசன்) சோகாமேளராகப் பாடி நடித்திருந்தார். ஜி. சுந்தர பாகவதர் (இசையமைப்பாளர் ஜி. ராமநாதனின் சகோதரர்) திரைக்கதை, மற்றும் பாடல்களை எழுதியிருந்தார். அவரே இசையமைத்தும் இருந்தார்.

கதை[தொகு]

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.

தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த சோகாமேளர் (கொத்தமங்கலம் சீனு) பண்டரிபுரத்தில் உள்ள கிருஷ்ணர் கோயிலுக்குள் செல்லுவதற்குத் தடை விதிக்கப்பட்டது. பழமைவாதிகளான பிராமணர்கள் (எம். ஆர். ராதா) அவரை உளரீதியாகப் பலவிதத்திலும் துன்புறுத்தினர். ஆனாலும், சோகாமேளரின் கடும் வழிபாட்டினால் இறைவன் பாண்டுரங்க விட்டலர் அவர் முன் தோன்றினார். அத்துடன் அவரின் குடிசைக்கு நாள்தோறும் சென்று சோகாமேளர் பரிமாறிய உணவையும் உண்டார். இதனையறிந்த பழமைவாதிகள் சோகாமேளரைத் தாக்கினர். ஆனாலும் விட்டலர் கோயிலில் சில அதிசயங்கள் நிகழ்ந்து வருவதை அவர்கள் உணர்ந்தனர். சோகாமேளர் தாக்குதலுக்குள்ளக்கப்பட்ட அதே நாளில் சோகாமேளருக்கு ஏற்பட்டிருந்த உடற்காயம் போன்ற அதே காயம் கோயிலில் இருந்த சிலையிலும் ஏற்பட்டிருந்தது. தமது மடமையை உணர்ந்த கோயில் பூசாரிகளான அந்தணர்கள் சோகாமேளரிடம் மன்னிப்புக் கேட்டு, விட்டலர் கோயிலினுள் அவரை நுழைய அனுமதித்தனர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. ராண்டார் கை (திசம்பர் 25, 2010). "Chogamelar 1942". தி இந்து. Archived from the original on 2 சனவரி 2017. பார்க்கப்பட்ட நாள் 2 சனவரி 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோகாமேளர்_(திரைப்படம்)&oldid=3733856" இலிருந்து மீள்விக்கப்பட்டது