திருத்தந்தையின் ஆலோசனைக்குழு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திருத்தந்தை பத்தாம் பயஸின் முதல் வெளிப்படையான ஆலோசனைக்குழு

திருத்தந்தையின் ஆலோசனைக்குழு (ஆங்கில மொழி: Papal consistory) என்பது திருத்தந்தையின் ஆணையால் அவரது தலைமையில் கர்தினால்கள் ஒன்றுகூடும் கூட்டமாகும்; இக்கூட்டங்கள் சாதாரணமானவையாகவோ அசாதாரணமானவையாகவோ இருக்கலாம்.[1]

கனமான ஆயினும் அடிக்கடி நிகழும் காரியங்களில் ஆலோசனை பெறுவதற்காக அல்லது புதிய கர்தினால்களை நியமிப்பது போன்ற மிகச் சிறப்பான ஒரு சில செயல்களை நிறைவேற்றுவதற்காக அனைத்துக் கர்தினால்களும் குறைந்த அளவு உரோமை நகரில் உள்ளவர்கள், ஒரு சாதாரண ஆலோசனைக்குழுவுக்கு அழைக்கப்படுகின்றனர். இத்தகைய சாதாரண ஆலோசனைக்குழு மட்டுமே பகிரங்கமாக இருக்க முடியும்; அதாவது, இக்குழுவுக்குக் கர்தினால்களுடன், மேல்நர்கள், அரசு சமூகங்களின் பிரதிநிதிகள் மற்றும் அழைக்கப்பட்ட மற்றவர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

திருச்சபையின் சிறப்பான தேவைகள் அல்லது அதிகக்கனமான ஆய்வுக்குரிய காரியங்கள் தூண்டும் போது நடைபெறுகின்ற ஓர் அசாதாரண ஆலோசனைக் குழுவுக்கு அனைத்துக் கர்தினால்களும் அழைக்கப்படுகின்றனர்.

திருத்தந்தை இரண்டாம் பவுலின் ஆலோசனைக்குழுக்கூட்டத்தின் நினைவுப்பதக்கம் (சுமார் 1466 அல்லது 1467)

இத்தகையக்குழு கூட்டத்தில், திருத்தந்தையால் அங்கீகரிக்கப்பட்ட விருப்பத்தேர்வு மூலம் கர்தினால்கள் குருக்கள் அணியிலிருந்து மற்றோர் உரிமைத்தகுதிக்கு மாறலாம்; திருத்தொண்டர் அணியிலிருந்து திருத்தொண்டர்களின் மற்றொரு வட்டத்தொகுதிக்கு மாறலாம்; அவர்கள், திருத்தொண்டர்கள் அணியில் முழுமையான பத்து ஆண்டுகள் நிலைத்திருந்திருப்பின், குருக்கள் அணிக்கும்கூட மாறலாம்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. திருச்சபை சட்டம் 353
  2. திருச்சபை சட்டம் 350:5